‘கூட்டுறவுச் சங்கங்களை வலுப்படுத்தும்’ நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட ஒன்றிய கூட்டுறவு அமைச்சகம் கூட்டாட்சிக் கோட்பாடுகளை குலைப்பதாக இப்போது குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. கேரளம் மற்றும் மகாராட்டிரம் உள்ளிட்ட மாநிலங்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ள நிலை, அத்துறையின் உருவாக்கத்தின் பின்னணியில் உள்ள அரசியல் நோக்கங்களை கூர்ந்து கவனிக்க வைத்துள்ளன. பொருளியல் துறையில் உள்துறை அமைச்சரின் பங்கு என்ன? என்றும், கடந்த காலத்தில் பாஜக கூட்டுறவு இயக்கத்தில் மேற்கொண்ட தந்திர நடவடிக்கைகள் குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளது.பா.ஜ.க.வின் கடந்த கால, தந்திரமான தலையீடுகளை கணக்கில் வைத்து நோக்கும்போது, இந்த சர்ச்சைக்குரிய நகர்வின் பின்னணி தான் என்ன?