தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Logo

Saturday, Apr 19, 2025 | India

Home / அரசியல்

தேர்தலுக்கு முன் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படுமா?

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவோம். அதை யாராலும் தடுக்க முடியாது என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

News Image

Author: Santhosh Raj KM

Published: February 26, 2024

நாடாளுமன்றத்தில் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நிறைவேற்றப்பட்டும்‌ இன்னும் அமு ல்படுத்தப்படாத குடியுரிமை திருத்த சட்டம் மக்களவைத் தேர்தலுக்கு முன் அமல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம்- 2019ல் பல விமர்சனங்களையும் ‌போராட்டங்களையும் எதிர் கொண்டது. பல இடங்களில் இந்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்ள் நடந்தன. அண்டை நாடுகளில் கொடுமைகளுக்கு பயந்து இந்தியாவுக்கு அகதிகளாக வரும் அனைவருக்கும் குடியுரிமை அளிப்பதே நியாயம். ஆனால் அதை விட்டுவிட்டு முஸ்லிம்களை தவிர்த்து மற்ற மதத்தினருக்கு குடியுரிமை வழங்குவது சரியில்லை. இந்த சட்டம் அதற்கு தான் வழி செய்கிறது. இந்த பாரபட்சத்தை ஏற்க முடியாது என எதிர்க்கட்சிகளும், முஸ்லிம் அமைப்புகளும் கூறினர்.

சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்றுமே முஸ்லிம்களை பெரும்பான்மையினராக கொண்ட நாடுகள் (பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான்)  அங்கே மற்ற மதத்தினர் தான் சிறுபான்மை. அவர்கள் தான் கொடுமைக்கு ஆளாகி இந்தியாவுக்குள் தஞ்சம் வருவரே தவிர, முஸ்லிம்களுக்கு பிரச்சனை இல்லை. ஆகவே, அவர்களுக்கு குடியுரிமை வழங்கும் அவசியமே எழவில்லை என அரசு பதில் சொன்னது. இதனை  எதிர்த்து  எதிர்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால தடை விதிக்க வழக்கு தொடர்ந்தன.

இந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக அஸ்ஸாமில்தான் முதல் முதலாக போராட்டம் வெடித்தது. . தமிழ்நாடு உட்பட பெரும்பாலான மாநிலங்களில் இப்போராட்டங்கள் தீவிரமடைந்தன. 2020 ல் கொரோனா பரவல் காலம் தொடங்கியதால் இப்போராட்டங்கள் அமைதியடைந்தன.

ஆனால் "மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக நாட்டில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவோம்" என்று தற்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளதை தொடர்ந்து மீண்டும் போராட்டகள் ஆங்காங்கே வெடிக்க தொடங்கிவிட்டன.

கடந்த பிப்ரவரி 10ம் தேதி மனிதநேய ஜனநாயக கட்சியினர் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் CAA-வை (குடியுரிமை திருத்த சட்டம்) அமல்படுத்துவோம் என்று கூறிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து திருவொற்றியூரில் நடந்த போராட்டத்தில் சி.ஏ.ஏ சட்ட நகல் எரிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இருந்தே மேற்கு வங்க முதல்வர் மம்தா இந்த சட்டத்தை கடுமையாக எதிர்த்து வந்துள்ளார். “வங்கதேசத்தில் இருந்து ஏராளமான முஸ்லிம்கள் மேற்கு வங்கத்தில் நீண்ட காலமாக வாழ்ந்து வருகின்றனர் மேற்கு வங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வராது” என்பதை முதல்வர் மம்தா ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 31 ம் தேதி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஏழு நாட்களில் மேற்கு வங்கம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் #CAA நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார் பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒன்றிய இணையமைச்சர் ஒருவர். இலங்கைத் தமிழர்களுக்கும் இசுலாமியர்களுக்கும் எதிரான #CAB சட்டம் ஆனதற்கு முழுமுதற் காரணமே நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க ஆதரித்து வாக்களித்ததுதான். அப்போது எதிர்க்கட்சியாக இருந்தாலும் தோழமை இயக்கங்களுடன் இணைந்து மிகப் பெரிய அளவில் போராட்டங்களை நடத்தியதுடன், இரண்டு கோடி பேரிடம் கையெழுத்து பெற்று அதனைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது தி.மு.கழகம். 2021-இல் ஆட்சிக்கு வந்த உடனே #CAA-வைத் திரும்பப் பெற வலியுறுத்திச் சட்டமன்றத்தில் தீர்மானமே நிறைவேற்றினோம். தமிழ்நாட்டில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதைத் தி.மு.க அரசு ஒருபோதும் அனுமதிக்காது. மதநல்லிணக்கத்துக்கு எதிரான பா.ஜ.க. அரசின்  செயல்களையும், அதற்குத் துணைபோகும் அ.தி.மு.க.வின் நயவஞ்சக நாடகங்களையும் நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். உறுதியாகச் சொல்கிறேன். தமிழ்நாட்டினுள் #CAA (குடியுரிமை திருத்த சட்டம்) கால்வைக்க விடமாட்டோம்!" என்று குறிப்பிட்டுள்ளார்.

பிப்ரவரி 12ம் 2024ல்  நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் சபாநாயகர் அப்பாவு “தமிழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” என திட்டவட்டமாக கூறினார்.

அஸ்ஸாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு அதே நிலை நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பல கோடி பேருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதே அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் கருத்தாக உள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் தேதி மார்ச் இரண்டாம்  வாரத்தில்  அறிவிப்பு வெளியாக உள்ளது இந்த நிலையில் தேர்தல் தேதி அறிவித்தா நாளில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் அமளுக்கு வந்துவிடும் (Model  Code of Conduct) இந்த தேர்தல் நடத்தை விதிப்படி ஆளும் கட்சிகள் எந்த விதமான அரசு அறிவிப்புகள், பதவியேற்புகள் , பூமி பூஜைகள் நடத்தக்கூடாது என்பது ஓர் விதி உள்ளது.இந்த நிலையில் எவ்வாறு தேர்தலுக்கு முன் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும் எனறா கேள்வி எழுகிறது.

Tags:PoliticalMotivepoliciesTamilNadutamilnewstamilnadu