தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Logo

Saturday, Apr 19, 2025 | India

Home / அரசியல்

உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்விக்கடன் : PM வித்யாலக்ஷ்மி திட்டத்தின் சிறப்பம்சங்கள்

PM வித்யாலக்ஷ்மிமி திட்டத்தின் கீழ் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு எளிதில் கடனளிக்கும் வகையிலான கல்வி கடனுதவி திட்டத்திற்கு மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது.

News Image

Author: Kanal Tamil Desk

Published: November 9, 2024

மத்திய அரசு கடந்த நவம்பர் 6ஆம் தேதியன்று பிரதமர் வித்தியாலக்ஷ்மி (PM-Vidyalaxmi) திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மத்திய அரசின் அனுமதி பெற்ற குறிப்பிட்ட 860 கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி கடன் மற்றும் வட்டி மானியம் வழங்குவதற்கு வழிவகை செய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்திட்டம் மூலம் சுமார் 22 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் ரூ.7.5 லட்சம் வரையில் கல்வி கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தேசிய கல்வி கொள்கை 2020-ஐ ஏற்றுக்கொண்டு, தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் (NIRF) தரவரிசையில் QHEI (quality Higher Education Institution) அங்கீகாரம் பெற்ற குறிப்பிட்ட 860 கல்வி நிறுவனங்களில் பயிலும் அனைத்து மாணவர்களும் இந்த PM வித்யாலக்ஷ்மி திட்டத்தின் கீழ் கல்விக்கடன் பெற தகுதியானவர்கள் என கூறப்பட்டுள்ளது.

குடும்ப ஆண்டு வருமானம் குறைவாக உள்ள (ஆண்டுக்கு 8 லட்சத்திற்கு கீழ்) மாணவர்களுக்கு அதிகபட்ச கல்வி கடன் ரூ.7.5 லட்சத்திற்கு மேல் ரூ.10 லட்சம் வரையில் கல்வி கடன் வழங்கப்பட்டு, 3 சதவீதம் வட்டி மானியம் பெறலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், படித்த முடித்த உடனேயே கல்விக் கடனை செலுத்த வேண்டியதில்லை. அதற்கென குறிப்பிட்ட தவணை தடை காலம் உள்ளது. உதாரணமாக, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் கடன் தொகை அளவை பொறுத்து 6 மாத காலம் முதல் ஒரு வருட காலம் வரையில் தவணைத் தொகை திருப்பி செலுத்த வேண்டியதில்லை. அதுவரையில் மாணவர்கள் கல்வி கடன் வட்டி கணக்கிடப்படுவதில்லை.

இத்திட்டத்தின் கீழ் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆப் பரோடா, பேங்க் ஆஃப் இந்தியா, கனரா வங்கி, இந்தியன் வங்கி ஆகியவை PM வித்யாலக்ஷ்மி திட்டத்தின் கீழ் கல்வி கடனுக்கு 8.1 முதல் 8 புள்ளி 8.8 சதவீதம் வரை ஆண்டு வட்டி விதிக்கிறது.

அதேபோல, PM வித்யாலக்ஷ்மி திட்டத்தின் கீழ் கல்வி கடனுக்கு எச்டிஎப்சி (HDFC) வங்கி 9.5 சதவீதமும், ஐசிஐசிஐ வங்கி 10.25 சதவீதமும், ஆக்சிஸ் வங்கி 13.7 சதவீத ஆண்டு வட்டியும் விதிக்கிறது.

உதாரணமாக, பாரத ஸ்டேட் வங்கியில் PM வித்யாலக்ஷ்மி திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் கடன் பெற்றால், ஆண்டு வட்டி 8.1 சதவீதம் விதிக்கப்பட்டு 7 வருடத்திற்கு மாதத்தவனை ரூ.15,531 வசூல் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags:educationScheme