- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
தனிநபர் கடன் வாங்க போறீங்களா? இந்த கட்டுக்கதைகளை நம்பாதீங்க…
தனிநபர் கடன்கள் பெரும்போது , குறைவான கிரெடிட் ஸ்கோர் இருந்தால் கடன் கிடைக்காது, ஏற்கனவே கடன் பெற்று இருந்தால் கடன் கிடைக்காது, மாத சம்பளம் வாங்கும் நபர்களுக்கு மட்டுமே கடன் கிடைக்கும் என பல்வேறு உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் உலா வருகின்றன.

Author: M Manikandan
Published: May 1, 2025
வாகன கடன், வீட்டுக் கடன், கல்வி கடன், அடமான கடன் என ஒவ்வொரு தேவைக்கும் அதன் சக்தி அறிந்து கடன் இருக்கும் சூழலில், இதில் எதிலும் வராத தனிநபர் கடன்கள் தான் பல்வேறு மருத்துவ தேவைகள், அவசர தேவைகள் என பலவற்றுக்கு பயன்படுகின்றன.
இந்த தனிநபர் கடன் வாங்குகையில் பல்வேறு கட்டுக்கதைகள் உலா வருகினறன. அதில் முக்கிய கட்டுக்கதையாக மாத சம்பளம் வாங்குவோருக்கு மட்டுமே தனிநபர் கடன் எளிதில் கிடைக்கும் என்பது. மேலும் சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தால் கடன் கிடைப்பதில் சிரமம் ஏற்படும் என்பதும் கட்டுக்கதை தான் என்கிறார்கள் பொருளாதர நிபுணர்கள். பொதுவாக உலா வரும் கதைகள் பற்றியும் அதற்கு பொருளாதார வல்லுநர்கள் கூறிய விளக்கம் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
மாத சம்பளம் வாங்கும் நபர்கள் மட்டுமே தகுதியானவர்களா?
உண்மையில், சுயதொழில் செய்பவர்கள், வணிக உரிமையாளர்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்களை வைத்திருப்போர் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் கூட தனிநபர் கடனுக்கு தகுதியுடையவர்கள் ஆவார். தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களுக்கு சம்பளம் தொடர்பான எந்த கட்டுப்பாடுகளும் இல்லை.
இருப்பினும், அவர்களின் வங்கி வரவு செலவு விவரங்கள், சிபில் ஸ்கோர் போன்றவை கணக்கிட்டு தான் தனிநபர் கடன் என்பது வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருந்தாலே விண்ணப்பம் நிராகரிக்கப்படுமா?
கிரெடிட் ஸ்கோர் 750க்கு மேல் இருந்தால் கடன் வழங்குதலில் முன்னுரிமை அளிக்கப்படுவது உண்மைதான். அது கடன் பெரும் வாய்ப்புகளை அதிகரிக்க செய்கிறது என்பது உண்மைதான் என்றாலும், குறைந்த கிரெடிட் ஸ்கோரை கண்டதுமே அனைத்து நிதி நிறுவனங்களும் நிராகரிப்பை மேற்கொள்ளாது.
கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள், தனிநபர் கடன்களை வழங்குவதற்கு முன்பு, விண்ணப்பதாரர்களின் கடந்த கால கடன் செலுத்தும் வரவு செலவுகளையும், அவர்களின் வருமானம், கடன் நிலைகள் மற்றும் வேலைவாய்ப்பு நிலைத்தன்மை பற்றியும் கணக்கில் எடுத்துக்கொள்கிறார்கள்.
இவ்வாறு குறைவான கிரெடிட் ஸ்கோர் உள்ள நபர்களுக்கு கடன் வழங்கவும் சில நிதி நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன. ஆனால், கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருந்தால் அதற்கான வட்டி விகிதமும் அதிகரிக்கும் என்று நிதி ஆலோசகர்கள் கூறுகிறாரகள்.
தனிநபர் கடன்கள் அதிக வட்டியை கொண்டதா?
தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் பொதுவாக ஆண்டுக்கு 10 முதல் 15 சதவீதம் வரை இருக்கும். குறைவான கிரெடிட் ஸ்கோர் கொண்டவர்கள், தவணை செலுத்த தவறியவர்கள், கிரெடிட் கார்டு பில் செலுத்தாமல் உள்ள நபர்கள் என சிலருக்கு தனிநபர் கடன் வட்டி விகிதங்கள் அதிகமாக இருக்கலாம்.
வருடத்திற்கு 45 சதவீதம் வரை வசூலிக்கும் கிரெடிட் கார்டுகளுடன் ஒப்பிடும்போது, தனிநபர் கடன்கள் மிகவும் குறைவான வட்டி விகிதம் கொண்ட கடன் பெரும் விருப்பமாகும். உங்கள் நிதி நிறுவனத்துடன் தொடர்புடைய வாடிக்கையாளர் சேவை நிர்வாகியுடன் வட்டி விகிதம் பற்றி தெளிவாக விவாதிக்க வேண்டும்.
ஏற்கனவே கடன் பெற்றிருந்தால் புதிய கடன்களை பெற முடியாதா?
ஏற்கனவே கடன் பெற்றிருப்பது புதிய கடனுக்கு விண்ணப்பிப்பதிலிருந்தும் பெறுவதிலிருந்தும் உங்களைத் தகுதியற்றவர்கள் ஆக்காது. நீண்ட மற்றும் நிலையான திருப்பி செலுத்தும் வரவு செலவை நீங்கள் வைத்திருந்தால் அது புதிய கடன் பெற உதவுகிறது.
அதிக கிரெடிட் ஸ்கோர் 750க்கு மேல் பெற்றிருந்தால் மற்றொரு தனிநபர் கடனை பெறுவதற்கும் அதற்கான EMI-ஐ செலுத்துவதற்கும் உங்களுக்கு உதவும்.
தனிநபர் கடன்கள் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு மட்டுமே?
தனிநபர் கடன்கள் என பெயர் வைக்கப்பட்டு இருப்பதால் அது தனிப்பட்ட செலவுகளுக்கு மட்டும் என்பது பொருளல்ல. வணிகத்தை மேம்படுத்த, கல்வி கடன்களில் அடங்காத கல்வி செலவுகளை ஈடுசெய்ய, பிற கடன்களை ஒருங்கிணைக்க உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இந்த நிதியை பயன்படுத்தலாம். கடன் வழங்குபவர்கள் பொதுவாக கடுமையான பயன்பாட்டு கட்டுப்பாடுகளை விதிப்பதில்லை.
மேற்கண்ட தகவல்கள் பல்வேறு நிதி ஆலோசகர்கள் மற்றும் நிதி மேலாண்மை குழு தொகுத்து வழங்கிய ஒரு வழிகாட்டு கோட்பாடுகள் மட்டுமே. தனிநபர் கடன் விதிமுறைகள் ஒவ்வொரு நிதி நிறுவனம் மற்றும் வங்கிகளுக்கு மாறுபடும். எனவே, அதனை கருத்தில் கொண்டு உரிய நிதி ஆலோசனை பெற்று கடன் பெறுவது அவரவர் தனிப்பட்ட விருப்பம்.
No comments yet.