தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Logo

Friday, Apr 18, 2025 | India

Home / வங்கியியல்

நாடு முழுவதும் 2 நாள் ஸ்ட்ரைக் : வங்கி தலைமை அலுவலகங்கள் முன் மாபெரும் ஆர்பாட்டங்கள்!

UFBU துணை நிறுவனங்கள் மார்ச் 11, 2025 அன்று பல்வேறு வங்கி அலுவலகங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியுள்ளனர்.

News Image

Author: Bala Murugan K

Published: March 12, 2025

வரும் மார்ச் 24 மற்றும் 25ஆம் தேதிகளில் United Forum of Bank Unions (UFBU) முன்னெடுக்கும் வேலைநிறுத்தத்திற்கான ஒரு பகுதியாக நேற்று நாட்டின் பல்வேறு வங்கிகளின் தலைமை அலுவலகங்கள், மண்டல அலுவலகங்கள் மற்றும் பகுதி அலுவலகங்களின் முன், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன. 

வங்கிப் பணியாளர்கள் தங்களது நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த போராட்டங்களில் உறுதியாக பங்கேற்றுள்ளனர். இது குறித்து விரிவாக விவரமாக இந்த பதிவில் பார்ப்போம். 

வேலைநிறுத்தத்திற்கான முக்கிய காரணங்கள்

ஐந்து நாள் வங்கி பணியினை அமல்படுத்துதல் காலியாக உள்ள வங்கி பணியிடங்களில் புதிய பணியாளர்களை நியமித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் நிறுத்தி இந்த போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஐந்து நாள் வேலை முறையால் வங்கி ஊழியர்களுக்கு வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கு சமநிலையை ஏற்படுத்த முடியும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர். மேலும், பணியாளர் குறைவால் வங்கி சேவையின் தரம் பாதிக்கப்படுவதால், புதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்பதே அவர்களது முக்கிய கோரிக்கையாகவும் இருந்து வருகிறது  

தொழிற்சங்கங்கள் ஆதரவு 

  • All India Bank Employees’ Association (AIBEA)
  • All India Bank Officers’ Confederation (AIBOC)
  • National Confederation of Bank Employees (NCBE)
  • Bank Employees Federation of India (BEFI)
  • Indian National Bank Employees’ Federation (INBEF)
  • Indian National Bank Officers’ Congress (INBOC)
  • National Organisation of Bank Workers (NOBW)
  • National Organisation of Bank Officers (NOBO)
  • All India Bank Officers’ Association (AIBOA) ஆகிய தொழிற்சங்கங்கள் இணைந்து செயல்படுகின்றன.

 

முன்னேறும் போராட்டங்கள்

வங்கித் துறையில் பொதுவான சமமான கொள்கைகள், நல்ல நிர்வாகம் ஆகியவற்றை வலியுறுத்தியே இந்த வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன்பாக, மார்ச் 3ஆம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த மகா தர்ணா போராட்டத்திலும் வங்கி ஊழியர்கள் பெரும் அளவில் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர். அதனை தொடர்ந்து, ஷிமோகாவில் உள்ள யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா பிராந்திய அலுவலகத்தில் UFBU அழைப்பு விடுத்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100 வங்கியாளர்கள் கலந்து கொண்டனர்.

அதைப்போல, சென்னை நுங்கம்பாக்கத்தில் நடந்த UFBU ஆர்ப்பாட்டத்தில் AIBEA பொதுச் செயலாளர் CH வெங்கடாசலம் மற்றும் NCBE தலைவர் R பாலாஜி ஆகியோர் முக்கிய உரையாற்றினர்கள். 

வேலைநிறுத்தத்தால் ஏற்படும் பாதிப்பு

மார்ச் 24-25 வேலைநிறுத்தம் பொருளாதார ரீதியாக கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இதே நேரத்தில் நிதியாண்டு முடிவடையும் என்பதால், வங்கி பரிவர்த்தனைகள் அதிகம் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால்,

வங்கிப் பரிவர்த்தனைகள் பாதிக்கப்படலாம் செக்குகள் மற்றும் பணமாற்றங்கள் தாமதமாகலாம் ஏடிஎம் பணிநிரப்பு குறையக்கூடும் வங்கிப் பணியாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகின்றனர். சமரச பேச்சுவார்த்தைகள் வெற்றிபெறாவிட்டால், இரண்டு நாள் வேலைநிறுத்தம் வங்கித் துறையின் செயல்பாட்டை பெரிதும் பாதிக்கக்கூடும்.

இதற்கிடையில், UFBUவின் வேலைநிறுத்த அறிவிப்பு தொடர்பாக, தலைமை தொழிலாளர் ஆணையர் மார்ச் 18, 2025 அன்று காலை 11:30 மணிக்கு டெல்லியில் ஒரு  சமரசக் கூட்டத்தை  நடத்த திட்டமிட்டுள்ளார் . நிதிச் சேவைகள் துறை, இந்திய வங்கிகள் சங்கம், IDBI வங்கி மற்றும் அனைத்து பொதுத்துறை வங்கிகளின் பிரதிநிதிகள் இந்த விஷயத்தைப் பற்றி விவாதிக்க கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், UFBU வங்கி ஊழியர்களை தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து அணிதிரட்டி வருகிறது. அவர்கள் கோரிக்கைக்கு தீர்வு எட்டப்படாவிட்டால், இரண்டு நாள் வேலைநிறுத்தம் நடைபெறும் என்றும், இதனால் வங்கி நடவடிக்கைகள்  பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:UFBU Bank StrikeBankersUFBUUFBU MeetingPNBBank StrikeBank Strike