10+ வயது சிறார்களுக்கு ATM, செக்குடன் வங்கி கணக்கு.! RBI-யின் புதிய ரூல்ஸ் என்ன?
10 வயதுக்கு மேற்பட்ட சிறார்கள், தாங்களே வங்கிக் கணக்கு தொடங்க RBI அனுமதி வழங்கிய முழு விவரம் வெளியாகியுள்ளது.

Author: Gowtham
Published: April 23, 2025
பள்ளி மாணவ, மாணவிகள் வங்கிக் கணக்கு தொடங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசின் ஸ்காலர்ஷிப், கல்விக்கான மானியம் அவர்களை சென்றடைய வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், 10 வயதுக்கு மேற்பட்ட சிறார்கள், தாமாகவே வங்கிக் கணக்கு தொடங்க ரிசர்வ் வங்கி அனுமதியளித்துள்ளது.
இதன் மூலம் இனி அவர்கள் சேமிப்பு, டெபாசிட் கணக்குகளை தொடங்கி, இயக்கவும் முடியும். சிறுவர்கள் இளம் வயதிலேயே வங்கிக் கணக்குகளை இயக்குவதன் மூலம், ஆன்லைன் வங்கி, ஏடிஎம் பயன்பாடு, செக் வைப்பு, மற்றும் பண மேலாண்மை குறித்து கற்றுக்கொள்ள முடியும்
அட ஆமாங்க.., 10 வயதுக்கு மேற்பட்ட சிறார்கள், தாங்களே வங்கிக் கணக்கு தொடங்க RBI அனுமதி வழங்கிய முழு விவரம் வெளியாகியுள்ளது. அதில், ATM அட்டை, இன்டர்நெட் பேங்கிங், செக் புக் வசதிகளுடன் சிறார்கள் வங்கிக் கணக்கு துவங்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
தற்போது 18 வயதுக்கு குறைவான சிறார்கள், பெற்றோர் கண்காணிப்பில் கணக்கு தொடங்கலாம். இந்த புதிய விதிகளின்படி, அனைத்து வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்தும், இதில் முதன்மை (நகர்ப்புற) கூட்டுறவு வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கிகள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் அடங்கும்.
எப்போது ஒரு மைனர் 18 வயது பூர்த்தியடைகிறதோ அப்போது, வங்கிகள் அந்த கணக்கின் நிலையை முழுமையான சுயாதீன கணக்காக மாற்றவேண்டும். அதற்கு, புதிய மாதிரி கையொப்பம், புதிய KYC ஆவணங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கியின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் கணக்கில் இருந்து பெரிய தொகையை திரும்பப் பெற விரும்பினால், சிறுவரின் ஒப்புதல் தேவைப்படலாம். இருப்பினும், எந்தவொரு சூழ்நிலையிலும் சிறு கணக்குகளில் இருந்து அதிக பணம் எடுக்கப்படக்கூடாது என்றும், எப்போதும் கடன் இருப்பை பராமரிக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது.
இந்த முடிவு, முந்தைய விதிமுறைகளை மறு ஆய்வு செய்து, சிறுவர்களுக்கான வங்கிக் கணக்கு தொடங்குவதற்கு ஒருங்கிணைந்த மற்றும் எளிமையாக்கப்பட்ட விதிகளை உருவாக்குவதற்காக எடுக்கப்பட்டது. ஜூலை 1, 2025-க்குள் புதிய வழிகாட்டுதல்களின்படி வங்கிகள் தங்கள் தற்போதைய கொள்கைகளை திருத்த வேண்டும் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
No comments yet.