- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
AIBEA ஸ்ட்ரைக் அறிவிப்பு : இந்தியன் வங்கி ஊழியர்களின் ஒருநாள் வேலைநிறுத்தம்!
பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்தியன் வங்கி ஊழியர்கள் வரும் ஏப்ரல் 25-ல் ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக AIBEA தெரிவித்துள்ளது.

Author: M Manikandan
Published: April 2, 2025
முன்னதாக கடந்த மார்ச் மாதம் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கங்களை உள்ளடக்கிய UFBU சங்கமானது 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்து இருந்தது. வாரத்தில் 5 நாட்கள் வேலை கோரிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. பின்னர் பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு 2 நாள் ஸ்ட்ரைக் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
தற்போது இதனை அடுத்து AIBEA சார்பில் இந்தியன் வங்கி ஊழியர்கள் தங்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி வரும் ஏப்ரல் 25-ம் தேதி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். அதற்கு முன்னர் அடையாள போராட்டமாக இந்தியன் வங்கி தலைமை அலுவலகத்தில் வரும் ஏப்ரல் 19-ம் தேதி தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் வங்கி ஊழியர்களின் கோரிக்கைகள் என AIBEA கூறியவை…
அனைத்து வகை காலிப்பணியிடங்களிலும் தேவையான ஆட்களை நியமிக்க வேண்டும்.
கருணை அடிப்படையிலான பணி நியமனங்களை அமல்படுத்த வேண்டும்.
விருது பணியாளர்களுக்கான ஒருங்கிணைந்த இடமாற்றக் கொள்கை கொண்டுவர வேண்டும்.
அனைத்து தற்காலிக ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் மற்றும் போனஸ் வழங்க வேண்டும்.
பணியாளர் நலன் சார்ந்த திட்டங்களை மேம்படுத்த வேண்டும்.
இருதரப்பு தீர்மானங்களை மதிக்க வேண்டும்.
நிரந்தர காலியிட நிரப்புதல் பெயரில் தனிப்பட்ட ஓட்டுனர்கள் மற்றும் தற்காலிக பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
நிலுவையில் உள்ள பிற கோரிக்கைகள் மற்றும் நிர்வாக ரீதியிலான சிக்கல்கள் அனைத்தையும் தீர்க்க வேண்டும்.