2 நாள் ஸ்ட்ரைக் : “UFBU முடிவை நங்கள் பின்பற்றுவோம்!” AIRRBEA அறிவிப்பு!
பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி வங்கி ஊழியர்கள் மேற்கொள்ளும் 2 நாள் வேலைநிறுத்த முடிவில் UFBU சங்கத்தின் முடிவை நாங்கள் பின்பற்றுவோம் என AIRRBEA தெளிவுபடுத்தியுள்ளது.

Author: M Manikandan
Published: March 20, 2025
வாரத்தில் 5 நாட்கள் வேலை, வங்கி காலிப்பணியிடங்களில் போதிய ஆட்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி UFBU சங்கத்தின் தலைமையில் AIBOC, AIBEA, BEFI, INBOC, AIBOA, NCBE, INBEF, NOBW மற்றும் NOBO வங்கி சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
Advertisement
இந்த போராட்டங்களை அடுத்து அனைத்து வங்கி சங்கங்களையும் ஒன்றிணைத்து வரும் மார்ச் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் 2 நாட்கள் வேலைநிறுத்த போரட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
நிதியாண்டின் கடைசி மாதத்தில் இறுதியை ஒட்டிய வாரத்தில் இம்மாதிரியான நாடுதழுவிய வேலைநிறுத்த போராட்டம் பல்வேறு நிதி சிக்கல்களை உருவாக்கக் கூடும் என்பதால் மத்திய நிதியமைச்சகம் (DFS) இதுகுறித்து தொடர் ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளது.
Advertisement
ஏற்கனவே கடந்த மார்ச் 18ஆம் தேதி மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் DFS, இந்திய வங்கிகள் கூட்டமைப்பு, வங்கி நிர்வாக பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கலந்து கொண்டனர். இதில் இந்த பெரிய முடிவுகளும் எட்டப்படாத காரணத்தால் போராட்டம் குறித்த தேதியில் நடைபெறும் என்றே கூறப்படுகிறது.
அடுத்த நாளான மார்ச் 19-ல் டெல்லியில் அதே தொழிலாளர்கள் நலத்துறை அலுவலகத்தில் DFS பிரதிநிதிகள், NABARD பிரதிநிதிகள், மற்றும் RRBகளின் ஸ்பான்சர் வங்கி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் வங்கி ஊழியர்களின் கோரிக்கை இரண்டாக பிரிக்கப்பட்டது. ஒன்று வாரத்தில் 5 நாள் வேலை, ஆட்சேர்ப்பு உள்ளிட்ட பொதுவான கோரிக்கைகளாகவும், மற்றொன்று RRBகளின் தனிப்பட்ட கோரிக்கைகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.
Advertisement

இந்த ஆலோசனை கூட்டம் பற்றி AIRRBEA சங்கத்தினர் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் இதுபற்றி பதிவிட்டுள்ளனர். அதில், மார்ச் 24 மற்றும் 25 என 2 நாள் வேலைநிறுத்தம் பற்றிய முடிவில் UFBU சங்க முடிவுகளை AIRRBEA பின்பற்றும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த பதிவில், இன்று டெல்லி CLC (தொழிலாளர் நலத்துறை) அலுவலகத்தில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. பதவி உயர்வு விதிகள், விடுப்பு விதிகள், சேவை விதிகள் ஆகியவற்றில் திருத்தம் தொடர்பாக விரிவான விளக்கத்தை நாங்கள் இதில் அளித்துள்ளோம்.
DFS அதிகாரிகள் இவை முடிந்தவரை எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உத்தரவாதம் அளித்துள்ளனர். கொடுக்கப்படாத அலவன்ஸ் தொகைகளை வங்கி வாரியாக பட்டியலை அவர்களிடத்தில் சமர்ப்பித்துள்ளோம். மேலும், இதுகுறித்து அவசர நடவடிக்கை எடுக்கவும் அவர்களிடம் கூறினோம்.
மாநில அளவிலான RRBகள், மித்ரா விதிமுறைகளின்படி ஆட்சேர்ப்பு, கருணை அடிப்படையில் பணி நியமனங்கள், முறைப்படுத்தபட்ட குறைந்தபட்ச ஊதியங்கள், அனைவருக்கும் ஓய்வூதியம் போன்றவற்றையும் நாங்கள் இந்த கூட்டத்தில் நாங்கள் குறிப்பிட்டுள்ளோம். RLC (தொழிலாளர் ஆணையர்), ஆட்சேர்ப்புகள், அலவன்ஸ்களை நடைமுறைப்படுத்துவது போன்ற விவரங்களை சேகரிக்க NABARDக்கு அறிவுறுத்தியுள்ளனர்.என குறிப்பிட்டு, இந்த பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் தொடர்ந்தாலும் எங்கள் அனைத்து சங்க பிரிவினர்களும் வேலைநிறுத்தத்திற்கு முழுவதுமாக தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் AIRRBEA பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments yet.
