- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
“கிராமப்புற வங்கிகளை ஒருங்கிணைக்க வேண்டும்!” நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிய பாஜக எம்.பி!
நாட்டில் உள்ள கிராமப்புற வங்கிகளை (RRB) NRBI எனும் ஒரு தேசிய வங்கி அமைப்பின் கீழ் ஒருங்கிணைக்க வேண்டும் என பாஜக எம்.பி ஜகதாம்பிகா பால் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.

Author: M Manikandan
Published: March 26, 2025
கிராமப்புற மக்களின் வளர்ச்சியை முக்கிய நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட பிராந்திய கிராம வங்கிகளை ஒருங்கிணைக்க வேண்டிய கட்டாயம் குறித்து அகில இந்திய பிராந்திய கிராமப்புற வங்கி ஊழியர் சங்கம் ( AIRRBEA ) தொடர்ந்து வலியறுத்தி வருகிறது. ஒரு மாநிலம் ஒரு RRB எனும் திட்டத்தை செயல்படுத்தி ஒவ்வொரு மாநிலத்தில் இயங்கி வரும் வெவ்வேறு பிராந்திய கிராமப்புற வங்கிகளை ஒருங்கிணைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்த வலியுறுத்தல் தற்போது நாடுமன்றம் வரை எதிரொலித்துள்ளது. இந்த ஒருங்கிணைப்பு மூலம் RRB செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துதல், அதன் கொள்கை சீரான தன்மையையுடன் உறுதி செய்தல் மற்றும் RRB-களுக்குள் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பல்வேறு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒரு உச்ச ஒழுங்குமுறை அமைப்பின் தேவையை இந்த ஒருங்கிணைப்பு கோரிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
RRB பணியாளர்களை முறைப்படுத்துதல் மற்றும் RRB கொள்கைகள் குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், கிராமப்புற வங்கியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தீர்க்கமான நடவடிக்கை எடுக்க இந்திய அரசாங்கத்தின் மீது அதிகரித்து வரும் அழுத்தத்தை பாஜக எம்.பி. ஜகதாம்பிகா பாலின் ஆதரவு பிரதிபலிக்கிறது.
பாஜக எம்.பி. ஜகதாம்பிகா பால் :
மார்ச் 25இல் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பேசிய பாஜக எம்.பி ஜகதாம்பிகா பால் கிராமப்புற வங்கிகள் பற்றி பேசுகையில், இந்தியாவில் உள்ள கிராமப்புற மக்கள் சுமார் 40 கோடி பேருக்கு வங்கி சேவை செய்யும் நோக்கில் 22,000 RRB வங்கி கிளைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்திய அரசு RRB-ல் 50% பங்குகளை வைத்திருந்தாலும் அவற்றுக்கு ஒரு மத்திய அரசின் கீழ் ஒரு உச்ச அமைப்பு என்று இல்லை. எனவே, தேசிய அளவில் போதுமான ஆட்சேர்ப்பு மற்றும் செயல்பாடுகளில் நாடு முழுவதும் சீரான தன்மையுடன் NRBI உருவாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று பால் கூறினார்.
மேலும், RRB-களில் நீண்ட வருடங்களாக பணியாற்றும் 20 ஆயிரம் தற்காலிக ஊழியர்களை முழுமையாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் பால் வலியுறுத்தியுள்ளார்.
NRBI உருவாக்கம் : பிராந்திய கிராமப்புற வங்கிகளை (RRB) ஒருங்கிணைப்பதன் மூலம் கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும், வங்கி சேவைகளை மேம்படுத்துவதற்கும் ஒரு தேசிய வங்கி அவசியம் என்று பாஜக எம்பி கூறினார். இது கிராமப்புற மக்களுக்கு சிறந்த நிதி வசதிகளை வழங்கும் என்றும் அவர்வலியுறுத்தினார்.