- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
கிராமப்புற, சிறுகுறு வியாபாரிகளுக்கு மகிழ்ச்சி செய்தி.! இனி கடன் வாங்குவது மிக எளிது!
சிறுகுறு வணிகர்கள், கிராமப்புற விவசாயிகள் எளிதில் கடன் பெரும் வகையில் ULI எனும் டிஜிட்டல் தளத்தை மத்திய ரிசர்வ் வங்கி விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. - ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்.

Author: Dayana Roselin
Published: September 6, 2024
டெல்லி : அனைத்து தரப்பு வணிகர்களுக்கும், தொழில் முனைவோருக்கும் தங்கள் வணிகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும், அதன் மூலம் அதிக வருமானம் ஈட்ட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். பெரும்பாலும் அதனை செயல்படுத்த வணிகர்கள் எதிர்நோக்குவது எளிதாக கடன் பெரும் வசதியை மட்டுமே. பெரு நிறுவனங்களுக்கு கடனுதவி என்பது எளிதாக அணுகக்கூடிய அளவிலேயே இருக்கிறது.
ஆனால், சிறுகுறு வணிகர்கள், கிராமப்புற விவசாயிகளுக்கு வங்கி சென்று கடன் பெரும் நடைமுறை என்பது சற்று சிக்கலான நடைமுறையாக உள்ளது. இதனை சரிசெய்யும் நோக்கில் மத்திய ரிசர்வ் வங்கி ஓர் புதிய டிஜிட்டல் முயற்சியை விரைவில் அறிமுகம் செய்கிறது. இது குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு பற்றிய மாநாட்டில் கூறினார்.
இந்த திட்டம் குறித்து அவர் மேலும் பேசுகையில், " சிறுகுறு வியாபாரிகள் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்தும் நோக்கில், அவர்கள் கடன் வாங்குவதை எளிதாக்கும் வகையில் ULI (Unified Lending Interface) எனும் டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்த உள்ளோம். இந்த முறையை மத்திய அரசு கடந்தாண்டு (2023) சோதனை முயற்சியாக கொண்டு வந்தது. அதனை தற்போது நாடு முழுவதும் ரிசர்வ் வங்கி தீவிரமாக செயல்படுத்த உள்ளது.
இந்த டிஜிட்டல் தளமானது கிராமப்புற சிறு-குறு வியாபரிகள் மற்றும் நடுத்தர வியாபாரிகள் பயன்பெரும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த தளம் ஒரு UPI பரிவர்த்தனை செயல்படுவது போல பயனர்கள் பயன்படுத்த எளிதாக இருக்கும்." என சக்திகாந்த தாஸ் கூறினார்.
ULI தளம் :
டிஜிட்டல்மயமாக்கம் மூலம் நாட்டில் தொழில்வளர்ச்சியை மேம்படுத்த அரசு தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ரிசர்வ் வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ULI வசதியானது சிறுகுறு, கிராமப்புற வியாபாரிகளுக்கு காகிதமில்லா கடன் வழங்கும் டிஜிட்டல் வழிமுறையாகும்.
இந்த தளத்தில் கடன் வாங்குபவர்களின் நிதி பற்றிய விவரங்கள் மற்றும் நிதி அல்லாத தகவல்கள் இடம்பெற்றிருக்கும். மேலும், கடன் வாங்குபவர்களை நேரில் அணுகும் வசதியும், அவர்களின் வீடு, நிலம், முகவரி பற்றிய விவரங்களையும் கடன் வழங்குபவர்கள் அணுகும்படி வசதிகள் இடம்பெற்று இருக்கும்.
இந்த தளத்தில் பயனர்கள் தங்களுக்கு கடன் தேவை என்பதையும், தற்போது வேண்டாம் என்பதையும் குறிப்பிட முடியும். இதன் மூலம் கடன் வழங்குபவர்கள், கடன் தேவைப்படுவோரை அணுகுவது எளிதாக இருக்கும். இதன் மூலம் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பின் சிக்கல் குறையும்.
ULI நாடு தழுவிய தளமாக இருப்பதால், கடன் வழங்குபவர்கள் பல்வேறு பகுதிகளில் உள்ள கடன் தேவைப்படுவரின் அணுகலை பெற முடியும். இதனால் கடனுதவி என்பது பல்வேறு பகுதிகளில் இருந்து எளிதில் கிடைக்கும்.
ULI பயனாளிகள் :
நிதித் தேவை உள்ள கிராமப்புற விவசாயிகள், சிறு குறு வணிகர்கள், ஆகியோர்களின் நிதி பற்றாக்குறையை போக்கும் வகையில் ULI தளம் செயல்படும்.
ஒட்டுமொத்தமாக நாடு முழுவதிலும் இருந்து கடன் தேவைப்படுவோரின் விவரங்கள் ULI தளத்தில் கிடைக்கப்பெறுவதால், நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து கடன் வழங்குபவர்கள் மூலம் எளிதாக கடனுதவி கிடைக்கப்பெறும்.
2024 - 2025 நிதியாண்டில் மத்திய அரசின் பார்வை சிறுகுறு வணிகர்களின் பக்கம் திரும்பியுள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த ULI டிஜிட்டல் தளம் எளிதாக கடன் பெறும் வசதியானது இத்துறையை மேம்படுத்த உதவும்.
அதே நேரத்தில், சிறுகுறு மற்றும் கிராமப்புற வணிகர்களின் கடன் பெறும் நேரமானது இந்த தளத்தின் வருகை மூலம் குறைக்கப்படும். ஏனெனில் இது காகித முறை செயல்முறையை முற்றிலும் தவிர்த்துவிடும்.
நாட்டில் டிஜிட்டல் உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்காக ரிசர்வ் வங்கி மேற்கொள்ளும் பல்வேறு முயற்சிகளில் ULI டிஜிட்டல் தளம் என்பது மிக முக்கிய ஒன்றாகும்.