- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
ரூ.2 ஆயிரதிற்கு கீழ் உள்ள பரிவர்தனைகளுக்கு 18% வரி.! ஜி.எஸ்.டி கூட்ட முக்கிய முடிவுகள்.!
செப்டம்பர் 9ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற 54வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில், ரூ.2 ஆயிரத்திற்கு கீழே மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் பரிவர்தனைகளுக்கு 18% வரி விதிப்பது தொடர்பாகவும், காப்பீடு தொகைகளுக்கு ஜி.எஸ்.டி வரி குறைப்பது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

Author: Kanal Tamil Desk
Published: September 10, 2024
டெல்லி : மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (G.S.T) கவுன்சிலின் 54வது ஆலோசனை கூட்டம் செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டமானது, ஜி.எஸ்.டி கவுன்சில் தலைவரும், மத்திய நிதியமைச்சருமான நிர்மலா சீதாராமன் தலைமையில், டெல்லியில் உள்ள சுஷ்மா சுவராஜ் பவனில் நடைபெற்றது.
ஆலோசனை கூட்ட நடைமுறை :
பொதுவாக ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டமானது, மத்திய அரசுக்கு ஜி.எஸ்.டி வரிகள் தொடர்பான பரிந்துரைகளை வழங்கும். இந்த பரிந்துரைகள் குறித்து ஆலோசனை கூட்டத்தில் ஜி.எஸ்.டி குழு உறுப்பினர்கள், மத்திய மாநில நிதித்துறை பிரதிநிதிகள் (அமைச்சர்கள் அல்லது அதிகாரிகள்) ஆகியோர் கலந்து கொள்வர்.
இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் ஜி.எஸ்.டி வரி குறைப்பு, ஜி.ஏஸ்.டி வரி விதிப்பு உள்ளிட்ட பரிந்துரைகள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். மத்திய அரசு ஒப்புதல் அளித்த பின்னரே அந்த வரி விகித மாற்றங்கள் அமலுக்கு கொண்டுவரப்படும்.
அப்படியாக தற்போது நடைபெற்ற 54வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் சில முக்கிய சேவை வரிகள் பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதில் குறிப்பாக 2 ஆயிரம் ரூபாய்க்கு கீழே மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் பரிவர்தனைகளுக்கு ஜி.எஸ்.டி வரி விதிப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
ரூ.2000-க்கு கீழ் 18% வரி :
தற்போது டிஜிட்டல் பரிவர்தனைகளான டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு ஆகியவற்றை பயன்படுத்துவதற்கு நுழைவு கட்டணம் (Gateway fee) கிடையாது. இன்று மேற்கொள்ளப்பட்ட ஆலோசனையில், 2 ஆயிரம் ரூபாய்க்கு கீழே டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் ஆகிய சேவைகளை பயன்படுத்திடிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்ளும்போது 18 சதவீத வரி விதிக்கும் வகையில் சேவை வரியில் திருத்தம் மேற்கொள்ள ஆலோசிக்கப்பட்டது. ஆனால், இந்த ஆலோசனை குறித்து இன்று எந்த பரிந்துரை (அ) முடிவுகளும் இன்று மேற்கொள்ளப்படவில்லை. இதற்கான இறுதி ஆலோசனை ஒத்திவைக்கப்பட்டது.
இன்சூரன்ஸ் வரி விகிதம் :
அடுத்தது, ஆயுள் மற்றும் உடல்நல காப்பீடுகளுக்கு (இன்சூரன்ஸ்) மேற்கொள்ளப்படும் ஜி.எஸ்.டி வரி விகிதத்தை நீக்குவது பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தற்போது காப்பீடுகளுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி வரி விகிதமானது வசூலிக்கப்பட்டு வருகிறது. 2023-2024 நிதியாண்டில் மட்டும் ரூ.8,262.94 கோடி காப்பீடு தொகையில் இருந்து ரூ.1,484 ரூபாய் ஜி.எஸ்.டி வரியாக வசூல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மூத்த குடிமக்கள், சாமானியர்களை கருத்தில் கொண்டு அவர்கள் பயனடையும் நோக்கில் காப்பீடு தொகையில் ஜி.எஸ்.டி வரி விகிதத்தை பெருமளவு குறைக்கும் வண்ணம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மூத்த குடிமக்களுக்கு காப்பீடு தொகை 18 சதவீத வரி விகிதத்திலிருந்து முழு விலக்கு அளிக்கும் நோக்கிலும், மற்ற பயனர்களுக்கு 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கும் நோக்கிலும் இன்றைய கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்த இறுதி முடிவுகளும் (அ) பரிந்துரைகளும் இந்த கூட்டத்தில் இறுதி செய்யப்படவில்லை. அடுத்த ஜி.எஸ்.டி கவுன்சில் ஆலோசனை கூட்டத்தில் இதற்கான வரி பரிந்துரைகள் இறுதி செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.