தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Header Logo
Wednesday, May 14, 2025 | India
Home / நிதி

மாதம் ரூ.2000 முதல் ரூ.5000 சேமிப்பு.! PPF திட்டத்தில் உங்களுக்கு கிடைக்கும் மொத்த தொகை எவ்வளவு தெரியுமா?

அரசாங்கத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட பி.எஃப் (PPF) நீண்ட கால சேமிப்பு திட்டத்தின் கீழ் அடுத்த 15 ஆண்டுகளில் கிடைக்கும் நிதி பலன்கள் பற்றி இந்த செய்திக்குறிப்பில் காணலாம். இத்திட்டத்தின் கீழ் மாதம் ரூ. 500 முதல் தொடங்கி வருடத்திற்கு ரூ. 1.5 லட்சம் வரை அனைவரும் முதலீடு செய்ய முடியும்.

News Image

Author: Kanal Tamil Desk

Published: September 12, 2024

டெல்லி : தற்போதைய காலகட்டத்தில் அவசரகால நிதி சேமிப்பு, நீண்ட கால முதலீடு என்பது இன்றியமையாத ஒன்றாக உள்ளது. நீண்ட கால முதலீடு என்றவுடன் பொதுமக்கள் நினைவுக்கு வருவது பங்குச்சந்தை முதலீடு, மியூச்சுவல் பண்ட் முதலீடு போன்று மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்தப்பட்ட முதலீடுகள் மட்டுமே ஆகும்.

அப்படியான சேமிப்புகளுக்கு சரியான பங்குச்சந்தை நிலவரம் கணித்து முதலீடு செய்யவேண்டியது அவசியம். அதே நேரம்  ரிஸ்க் என்பது இன்றியமையாத ஒன்றாக உள்ளது. ஆனால், மக்கள் மத்தியில் நீண்ட கால பாதுகாப்பான முதலீடு என்ற கண்ணோட்டத்தில்  பொது வருங்கால வைப்பு நிதி எனப்படும் PPF (Public Provident Fund) முதலீடு குறித்து மேற்கண்ட அளவுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை.  

PPF என்பது ஊழியர்களின் சம்பளத் தொகையிலிருந்து குறிப்பிட்ட அளவுக்கு பிடித்தம் செய்யப்பட்டு, அதற்கென தனி PPF கணக்கில் சேமிக்கப்படும் திட்டமாகும். இதில் ஓரளவு நிதி சேமிக்கப்பட்டவுடன் அதனை முன்கூட்டியே எடுத்துவிடும் பழக்கம் இங்கு நம்மில் பலருக்கு இருக்கிறது. குறிப்பிட்ட சிலரே அதன் உண்மையான பயனறிந்து நீண்ட கால முதலீட்டாக சேமித்து வருகின்றனர். மேலும், PPF முதலீட்டாளர்களுக்கு ஆபத்து இல்லாமல் உத்தரவாதமான நிதி இருப்பை இந்த முதலீடு திட்டம் வழங்குகிறது.

அரசாங்க ஆதரவுடன் நீண்டகால முதலீட்டாளர்களுக்கு PPF ஓர் உத்தரவாதமான நிரந்தர நிதி வளர்ச்சியை அளிக்கிறது. அதனால், குறைந்த ரிஸ்க், நல்ல வருமானத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு PPF ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். PPF சேவையானது மாதாந்திர ஊதியம் வாங்குவோர் மட்டுமல்லாது அனைத்து இந்திய குடிமகனுக்கும் நீண்டகால சேமிப்பு வாய்ப்பை வழங்கும். குறைந்தபட்ச வைப்புத் தொகையாக மாதம் ரூ.500 முதல் தொடங்கி வருடத்திற்கு ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும்.

PPF-இன் பல்வேறு முதலீட்டு திட்டங்களை இந்த பதிவில் பார்க்கலாம்...

  • நீங்கள் மாதம் ரூ.2000 முதலீட்டுடன் ஆண்டு முதலீடு ரூ 24,000ஆக சேமித்தால், 15 ஆண்டுகளில் நீங்கள் செய்த மொத்த முதலீடு ரூ 3,60,000ஆக இருக்கும். இதற்காக நீங்கள் பெற்ற வட்டி மட்டுமே ரூ.2,90,913 ஆக இருக்கும். இதனால் உங்களுக்கு மொத்த முதிர்வு தொகையாக ரூ.6,50,913 கிடைக்கும். 
  • நீங்கள் மாதம் ரூ.3000 முதலீட்டுடன் ஆண்டு முதலீடு ரூ 36,000ஆக சேமித்தால் அடுத்த 15 ஆண்டுகளில் நீங்கள் செய்த மொத்த முதலீடு ரூ 5,40,000ஆக இருக்கும். உங்களுக்கு கிடைத்த வட்டி ரூ.4,36,370ஆக இருக்கும். இதன் மூலம் உங்களுக்கு கிடைக்கும் மொத்த முதிர்வுத் தொகை ரூ.9,76,370ஆக இருக்கும். 
  • நீங்கள் மாதம் ரூ 4000 முதலீட்டுடன் ஆண்டு முதலீடு: ரூ 48,000ஆக சேமித்தால் அடுத்த 15 ஆண்டுகளில் நீங்கள் செய்த மொத்த முதலீடு ரூ.7,20,000ஆக இருக்கும். நீங்கள் பெற்ற வட்டி மட்டும் ரூ.5,81,827ஆக இருக்கும் . இதன் மூலம் உங்களுக்கு மொத்தமாக முதிர்வுத் தொகை ரூ.13,01,827 கிடைக்கும். 
  • நீங்கள் மாதம் ரூ. 5000 முதலீட்டுடன் ஆண்டு முதலீடு ரூ 60,000ஆக சேமித்தால் அடுத்த 15 ஆண்டுகளில் நீங்கள் செய்த மொத்த முதலீடு ரூ 9,00,000ஆக இருக்கும். நீங்கள் பெற்ற வட்டி மட்டும் ரூ.7,27,284ஆக இருக்கும். இதன் மூலம் உங்களுக்கு கிடைக்கும் மொத்த முதிர்வுத் தொகை ரூ.16,27,284ஆக இருக்கும்.
Tags:FinancePPFProvident FundMutual FundsInvestmentSavings

No comments yet.

Leave a Comment