- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
அதிகரிக்கும் டிஜிட்டல் பரிவர்த்தனை.., ஓராண்டில் இவ்வளவு கோடியா?
கடந்த ஓராண்டில் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு வாயிலாக மேற்கொள்ளப்பட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகள் குறித்த சர்வே ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.

Author: Kanal Tamil Desk
Published: September 14, 2024
டெல்லி : நாட்டில் தற்போது பணப்பரிவர்த்தனை என்பது பெரும்பாலும் டிஜிட்டல் பரிவர்த்தனையாகவே இருக்கிறது. ஒற்றை இலக்க ரூபாய் பணப்பரிவர்த்தனையாக இருந்தாலும் சரி கோடிக் கணக்கிலான பரிவர்த்தனையாக இருந்தாலும் சரி பெரும்பாலும் அது டிஜிட்டல்மயமான பணப்பரிவர்த்தனையாகத் தான் உள்ளது.
கைபேசி வாயிலாக கூகுள் பே , போன் பே போன்ற ஆன்லைன் பணப்பரிவர்த்தனை செயலிகள், வங்கி செயலிகளைத் தவிர்த்து மற்ற ஏனைய டிஜிட்டல் பரிவர்த்தனைகள் டெபிட் கார்டு எனும் நமது வழக்கமான ஏடிஎம் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு வழியாக நடைபெறுகிறது. இதன் பயன்பாடு என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.
நாட்டில் கடந்த ஆண்டு கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு மூலம் நடைபெற்ற டிஜிட்டல் பரிவர்த்தனை பற்றிய ஓர் சர்வே ரிப்போர்ட் தனியார் செய்தி நிறுவனத்தின் ஆய்வு கட்டுரையாக வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, கடந்த ஓராண்டில் மட்டும் 51.3 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன.
டெபிட் கார்டு (ஏ.டி.எம் கார்டு) :
(கடந்த மே 2024 கணக்கீட்டின்படி)
- நாட்டில் மொத்தமாக 97.5 கோடி டெபிட் கார்டு மக்கள் மத்தியில் பயன்பாட்டில் உள்ளது.
- கடந்த ஓராண்டில் மட்டும் ATM மிஷின் மூலம் 51.3 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. பணம் எடுத்தல், பணப்பரிமாற்றம், மற்ற வங்கி சேவைகள் என அனைத்து ஏடிஎம் சேவைகளும் இதில் அடங்கும்.
- அதேபோல கடந்த ஓராண்டில் மட்டும் 29.8 கோடி ரூபாய் பணப்பரிவர்த்தனையானது ஏ.டி.எம் இயந்திரம் மூலம் மட்டுமே நடைபெற்றுள்ளது.
கிரெடிட் கார்டு :
(கடந்த ஜூலை 2024 கணக்கீட்டின்படி)
- கார்டு ஸ்வைப் மிஷின் மூலம் ரூ.60,378 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
- கார்டு ஸ்வைப் மூலம் 18 கோடி பணப்பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன.
- கிரெடிட் கார்டு மூலம் செய்யும் செலவுகள் 27 சதவீதம் அதிகரித்துள்ளது.
- 10.46 கோடி கிரெடிட் கார்டுகள் நாட்டில் பயன்பாட்டில் உள்ளது. கடந்த ஆண்டை விட 16.4 சதவீதம் கிரெடிட் கார்டு பயன்பாடு என்பது அதிகரித்துள்ளது.
கடந்த ஓராண்டில் மட்டும் ஒரு லட்சத்துக்கு 73 ஆயிரத்து 81 கோடி ரூபாய் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு என டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் செலவு செய்யப்பட்டுள்ளது.
கடன் வழங்கிய வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தை வசூலிக்க சிசி அவன்யூ, Razorpay, BillDesk ஆகிய நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு பரிவர்த்தனையிலிருந்தும் 0.5 சதவீதம் முதல் 2 சதவீதம் வரையில் சேவை தொகையாக வணிகர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தொகையும் வாடிக்கையாளர்கள் வங்கிக் கணக்கிலிருந்து ஆண்டுக்கு ஒருமுறை சேவை கட்டமானாக வசூலிக்கப்படுகிறது.
நாட்டில் 80 சதவீதத்திற்கும் மேலான டிஜிட்டல் பரிவர்த்தனைகள் 2 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாகவே உள்ளது.