தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Logo

Saturday, Apr 19, 2025 | India

Home / நிதி

கனவுகளை தியாகம் செய்யும் இந்தியர்கள்.!” ஆய்வில் வெளியான தகவல்!

குடும்ப சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு 70 சதவீதம் இந்தியர்கள் தங்கள் கனவுகளை தியாகம் செய்வதாக கனரா HSBC காப்பீடு நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

News Image

Author: Kanal Tamil Desk

Published: September 23, 2024

இன்றைய காலத்து நடுத்தர வர்க்கத்து இளைஞர்கள் பெரும்பாலானோர் தங்கள் குடும்ப சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு தங்கள் கனவுகளை சற்று தள்ளிவைத்துவிட்டு, குடும்ப பாதுகாப்பு, பொருளாதார சிக்கல்களை சரிசெய்ய போராடுகின்றனர். இதற்காக கிடைக்கும் வேலைகளை செய்து தங்களுக்கான வாய்ப்புகளை குடும்ப சூழ்நிலைகளை காரணம் காட்டி தவறவிடுவது, முடிவுகளை எடுக்க திணறுவது போன்ற பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றனர்.

இது குறித்து, கனரா HSBC காப்பீடு நிறுவனம் அண்மையில் "Perfect Plan Ka Partner" எனும் தலைப்பில் ஒரு ஆய்வை மேற்கொண்டது. அதன் மூலம் கிடைத்த பல்வேறு தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த ஆய்வானது, இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் இருந்து 20 வயது முதல் 50 வயது வரையில் உள்ள சுமார் 800 நபர்களை 8 பிரிவுகளாக பிரித்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவர்கள் தங்கள் குடும்பத்தை மனதில் வைத்து, தங்கள் தனிப்பட்ட எதிர்காலத்த்திற்கு முன்னுரிமை கொடுக்கிறார்களா.? என்பதை கண்டறிவது இந்த ஆய்வின் முதன்மை நோக்கமாக இருந்துள்ளது. இந்த ஆய்வு இளைஞர்கள் எதிர்கொள்ளும் தங்கள் கனவுகளுக்கான ஏக்கங்கள், வருத்தம், நிதி பாதுகாப்பில்லாத சூழல் என பல்வேறு விஷயங்களை வெளிப்படுத்துகிறது.

அந்த வகையில், சுமார் 70% இந்தியர்கள் தங்கள் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு, தங்களுக்கான சொந்த வீடு வாங்குவது, விடுமுறைக்கு வெளியூர் செல்வது போன்ற தனிப்பட்ட விருப்பங்களை புறந்தள்ளி, குடும்ப நிதி பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கின்றனர். இதில் பலர் தங்கள் குடும்பத்தினர்களுக்காக தங்கள் சின்ன சின்ன ஆசைகளை கூட தியாகம் செய்கிறார்கள் என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது.

குடும்பத்தின் மீதான கவனம் :

பெரும்பாலான இந்தியர்கள் தங்கள் குடும்பத்தின் எதிர்கால நிதி பாதுகாப்பை கருத்தில் கொண்டு, தங்களுக்கான ஆயுள் காப்பீட்டை (இன்சூரன்ஸ்) எடுத்து வைத்துள்ளனராம். இருப்பினும், குடும்பத்தின் மீதான இந்த கவனம் பெரும்பாலும் தனிப்பட்ட சேமிப்புகளில் இல்லை என்கிறது ஆய்வறிக்கை. பங்கேற்பாளர்களில் சுமார் 60% பேர் குடும்ப நிதி பாதுகாப்பில் மட்டுமே கவனம் செலுத்துவதாகவும், தங்கள் தனிப்பட்ட சேமிப்பில்  அதிக கவனம் செலுத்துவதில்லை எனவும் கூறப்படுகிறது.

64% பேர், தங்கள் டேர்ம் லைப் இன்சூரன்ஸை (மருத்துவ காப்பீடு) முன்கூட்டியே தொடங்கியிருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அதில், 83% பேர் மருத்துவ காப்பீட்டின் திட்டங்களின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டாலும், 11% பேர் மட்டுமே தங்கள் மருத்துவ காப்பீட்டை மதிப்பாய்வு (Renewal) செய்கின்றனர். இந்த மருத்துவ காப்பீடுகள் தங்கள் எதிர்பாரா மருத்துவ செலவுகளை ஈடுசெய்யுமா என்பது பலருக்கும் முழுதாக தெரிவதில்லை என்பதும் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

ஓய்வூதிய திட்டமிடல் :

இந்தியர்கள் பெரும்பாலும் தங்கள் ஓய்வு குறித்த திட்டமிடலை தாமதப்படுத்துகின்றனர்.  66% பேர் தங்கள் 30களில் ஓய்வூதியத் திட்டத்தைத் தொடங்கினாலும், அதில், 74% பேர் தங்கள் ஓய்வூதிய திட்டத்தை விரைவில் தொடங்கவில்லை என்று வருத்தப்படுகிறார்கள்.

ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்தவர்களில் 27% பேர் மட்டுமே இந்த திட்டம் தங்களுக்கு நல்ல பலன் தரும் என நம்புகிறார்கள். இதில், 24% பேர் தங்கள் ஓய்வுகால முதிர்வுத் தொகை அவர்களின் அப்போதைய நிதித் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்யும் என்று நம்பிக்கை வைத்துள்ளனர்.

குழந்தைகளின் எதிர்காலம் :

இந்தியப் பெற்றோர்களில் 18% பேர் மட்டுமே ஆயுள் காப்பீட்டுக்திட்டங்கள் மூலம் தங்கள் குழந்தையின் எதிர்காலம் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறார்கள். இவர்கள், தங்கள் ஆயுள் காப்பீடு மூலம் கிடைக்கும் முதிர்வுத் தொகை போதுமானதாக இருக்கும் என்றும் நம்புகிறார்கள். இதில், 71% பேர் தாங்கள், முன்பே ஆயுள் காப்பீடு திட்டத்தை தொடங்கியிருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், 82% பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் எதிர்கால நிதித் தேவைகளுக்குத் சரியான திட்டமிடல் இல்லாமல் இருக்கின்றனர்.

ஆரம்பகால நிதித் திட்டமிடல் :

கனரா எச்எஸ்பிசி லைஃப் இன்சூரன்ஸின் மூத்த அதிகாரியான ரிஷி மாத்தூர் கூறுகையில், ஆரம்பகால நிதி திட்டமிடல் என்பது ஒருவரது வாழ்வில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், சரியான வழிகாட்டுதல் மற்றும் சரியான நேரத்தில் எடுக்கும் முடிவுகள் மூலம், தனிநபர்கள், தங்கள் நிதி இலக்குகளை சரியான நேரத்தில் அடைய முடியும் என்றும், தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர்களுக்கும் சிறந்த எதிர்காலத்தை அவர்களால் அளிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆய்வின் நோக்கம் :

தனிநபர், தங்களின் நிதித் திட்டமிடல் குறித்து சிந்திக்கும்போது, ​​ஆரம்பகாலத்தில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கையின் அவசியத்தை இந்த ஆய்வறிக்கை விளக்குகிறது. ஆரம்ப கால நிதி திட்டமிடல் என்பது, உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும். ஒருவரது ஓய்வுகால நிதி பாதுகாப்பையும் உறுதி செய்யும்.

அவர்களது குழந்தைகளின் கல்விக்கான சேமிப்பு, அவர்களின் நீண்ட கால நிதிப் பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் ஆரம்பகால திட்டமிடல் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என இந்த ஆய்வறிக்கை விளக்குகிறது.

இந்த நிலையில், குடும்ப சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு சிறந்த பொருளாதாரத்திற்கான முன்கூட்டிய திட்டமிடல்களை தியாகம் செய்தால் நெருக்கடியான சவால்களை சந்திக்க நேரிடும் என்பதே இந்த ஆய்வின் கருப்பொருளாக உள்ளது.

Tags:FinancefinanceSavings