- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
இனி ஆன்லைன் UPI பரிவர்த்தனை உச்சவரம்பு ரூ.5 லட்சம்.! NPCI யின் சில நிபந்தனைகளுடன்..,
ஆன்லைன் UPI பண பரிவர்த்தனை மூலம் இனி பங்குச்சந்தை முதலீடு, வரி செலுத்துதல் உள்ளிட்ட பரிவர்த்தனைகளுக்கான உச்ச வரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

Author: Kanal Tamil Desk
Published: September 26, 2024
டெல்லி : தற்போது பெரும்பாலான இந்தியர்கள் கையில் ஸ்மார்ட் போன் அவர்களின் இன்னொரு கை போல இன்றியமையாத ஒன்றாக உள்ளது. அதிலும், பெரும்பாலானோர் தங்கள் தினசரி வரவு செலவு உட்பட பல்வேறு வித பணபரிவர்தனைகளை UPI (Unified Payments Interface) எனும் ஆன்லைன் சேவை மூலமாக அதிகளவில் மேற்கொண்டு வருகின்றனர்.
பெரும்பாலும் பயனர்களின் அந்தந்த பிரதான வங்கிகள், தங்கள் பயனர்களுக்கு பிரேத்யேகமாக ஆன்லைன் வங்கி செயலி சேவையை அளித்தாலும், பெரும்பாலான பயனர்கள் அதனை அதிகளவில் உபயோகப்படுத்துவதில்லை. மாறாக, எளிதாகவும், துரிதமாகவும் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும் National Payments Corporation of India (NPCI) கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் Google Pay, PhonePe போன்ற UPI செயலிகளைத் தான் பலரும் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
அதனால், Google Pay, PhonePe, PayTM உள்ளிட்ட UPI பரிவர்த்தனைகளை எளிதாக்க அதன் பண பரிவர்த்தனை உச்சவரம்புகளைப் பாதுகாப்பான முறையில் அதிகப்படுத்த NPCI தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
ஏற்கனவே, தனிபர் ஒருவர், வேறு ஒருவரின் வங்கி கணக்கிற்கு தங்கள் வங்கி கணக்கில் இருந்து UPI வாயிலாக பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள உச்சவரம்பானது ரூ.1 லட்சமாக உள்ளது. கடந்த செப்டம்பர் 15 வரையில் வருமான வரி செலுத்துதல், கல்வி, மருத்துவ செலவு பணப்பரிமாற்றம். பங்கு சந்தை முதலீடு ஆகியவற்றிற்கு பணப்பரிவர்த்தனை உச்ச வரம்பு ரூ.2 லட்சமாக இருந்துள்ளது.
இதனை மேம்படுத்தி, கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி NPCI ஓர் செய்தியை வெளியிட்டுள்ளது. அதன்படி, “ UPI தற்போது மக்களின் விருப்பமான பண பரிவர்த்தனை தளமாக உருவாகி வருகிறது. அதனால், UPI-யில் பண பரிவர்த்தனை வரம்பை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. UPI மூலம் தனி நபர் அல்லாத வருமான வரி செலுத்துதல், கல்வி, மருத்துவம் , பங்குச்சந்தை உள்ளிட்ட வெவ்வேறு நிறுவனங்களுக்கு பண பரிவர்த்தனை செய்வதற்கான உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.” என NPCI குறிப்பிட்டுள்ளது.
மேலும் , “ இதனை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள முடியாது. பயனர்கள் அவர்களுக்கான வங்கிகளுக்கு சென்று இந்த பண உச்சவரம்பை நிர்ணயித்து கொண்டு, வங்கி உறுதியளித்த பிறகு தான் மேற்குறிப்பிட்ட உச்சவரம்பை பயனர்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும். UPI பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பண பரிவர்த்தனை வரம்பை ரூ.5 லட்சமாக அதிகரித்துள்ள NPCI-இன் இந்த அறிவிப்பானது, இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தை முன்னோக்கி நகர்த்தி செல்ல உதவும். வரி வசூல் முறை எளிதாக்கப்படும். இதனால் வரி செலுத்துபவர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும்.” என NPCI தெரிவித்துள்ளது.
இந்த நடைமுறையானது கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. ஏற்கனவே குறிப்பிட்டது போல, தனி நபர் தங்கள் வங்கி கணக்கில் இருந்து UPI பரிவர்த்தனை மூலம் வருமான வரி செலுத்துதல் , கல்வி செலவுகள், மருத்துவ செலவுகள், பங்கு சந்தை பரிவர்த்தனை போன்றவற்றை மேற்கொள்கையில் அதற்கான பண பரிவர்த்தனை உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த உச்சவரம்பை பெறுவதற்கு பயனர்கள் தங்கள் வங்கிகளில் அதற்கான அனுமதியை பெறவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.