- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
ஏ.டி.எம் கார்டுகளில் இத்தனை வகையா? ஒவ்வொன்றிற்கும் என்ன வித்தியாசம் தெரிந்து கொள்ளுங்கள்
Debit Card அல்லது பேச்சுவழக்கில் ஏ.டி.எம் கார்டு என அழைக்கப்படும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அட்டையில் எத்தனை வகை இருக்கின்றன, அவற்றிற்கு வழங்கப்படும் சலுகைகள் மற்றும் விதிமுறைகள் என்னென்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Author: Kanal Tamil Desk
Published: October 2, 2024
ஒருவர் வங்கி சேமிப்பு கணக்கு தொடங்கிய பிறகு வங்கியிலிருந்து Debit Card எனும் ஏ.டி.எம் கார்டு தருவது வழக்கமான நடைமுறை. அப்படி நம்மிடம் வழங்கும் ஏ.டி.எம் கார்டு வகை, அதன் மூலம் ஒருநாளைக்கு எவ்வளவு பணம் எடுக்கலாம் என்ற விவரங்கள் கூட நம்மில் பலருக்கு தெரிவதில்லை. வங்கிகளை பொறுத்து பணம் எடுக்கும் வரையறை மாறலாம் என்றாலும். அது முழுக்க உண்மையில்லை. அந்த வரையறை நாம் வாங்கும் Debit Card கார்டு வகையை பொறுத்தே மாறுபடுகிறது.
நமக்கு வழங்கப்படும் Debit Card கார்டுகள் இந்தியாவில் பொதுவாக பெரும்பாலானோருக்கு VISA, MasterCard, Rupay வகை கார்டுகள் தான். இதில் முதலிரண்டு வகை கார்டுகள் அமெரிக்காவை தளமாக கொண்டு இந்தியாவில் இயங்கும் நிறுவனங்கள். 3வது Rupay கார்டு வகை மட்டும் NPCI (National Payment Corporation of India) எனும் இந்திய பொதுத்துறை நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஏ.டி.எம் கார்டு வகையாகும்.
ஏ.டி.எம் கார்டு எப்படி செயல்படுகிறது?
இந்தியாவில் விரல் விட்டு என்ன முடியாத அளவுக்கு வங்கிகள் உள்ளன. கணக்கில் அடங்கா எண்ணிக்கையில் அந்த வங்கிகளின் ஏ.டி.எம்கள் உள்ளன. அப்படி இருந்தும், ஒரு வங்கி ஏ.டி.எம் கார்டு கொண்டு இந்தியா முழுக்க சில வகை கார்டுகளை வெளிநாடுகளிலும் பயன்படுத்தி கொள்ளலாம். அது எப்படி என்றால், ஒவ்வொரு வங்கிக்கும் அந்த வங்கி பயனர்களின் விவரங்கள் அடங்கிய ஒரு சர்வர் (இணைய சேமிப்பு தளம்) உண்டு, அப்படியான அனைத்து வங்கிகளின் சர்வர்களையும் ஒருங்கிணைக்க கூடிய நிறுவனங்கள் தான் மேற்கண்ட VISA , MasterCard, Rupay நிறுவனங்கள் ஆகும். இந்த நிறுவனங்களால் வங்கி பயனர்களின் தரவுகளை கையாள முடியும். அதனை கொண்டு தான் நமது ஏ.டி.எம் கார்டுகளை எந்த வங்கி ஏ.டி.எம்களில் செலுத்தினாலும் பணம் எடுக்க முடிகிறது.
கார்டுகளின் வகைகள் :
ஒவ்வொரு வங்கிகளும் ஒவ்வொரு விதமாக கார்டுகளை வகைப்படுத்துகின்றன. அதன் மூலம் வங்கிகளின் தினசரி பணம் எடுக்க கூடிய வரையறையை நிர்ணயம் செய்கின்றனர்.
அதாவது, கிளாசிக் (Classic) கார்டுகள் என்பது பொதுவாக வழங்கப்படும் கார்டுகள் ஆகும். இதன் மூலம் அந்தந்த வங்கிகளால் வரையறுக்கப்பட்ட பொதுவான தொகையை ஏ.டி.எம்களில் எடுத்துக்கொள்ளலாம். அதேநேரம் POS முறைப்படி ஸ்வைப் மிஷின் வாயிலாக தினசரி குறிப்பிட்ட தொகை செலவு செய்துகொள்ளலாம்.
அதுவே கோல்டு,, பிளாட்டினம் (அந்தந்த வங்கிகள் கார்டுகளை வகைப்படுத்தும் முறை) வகை கார்டுகள் மூலம் கிளாசிக் வகை கார்டுகளை விட அதிகளவில் தொகையினை ஏ.டி.எம் இயந்திரம் மூலம் ரொக்கமாகவும், ஸ்வைப் மிஷின் வாயிலாக செலவு செய்து கொள்ளலாம்.
ஆண்டுக்கு ஒரு முறை பிடித்தம் செய்யப்படும் ஏ.டி.எம் கார்டு பராமரிப்பு தொகை என்பதும் கிளாசிக், கோல்டு, பிளாட்டினம் வகை கார்டுகளுக்கு அந்தந்த வங்கிகளை பொறுத்து மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஃபர்கள் :
ஒவ்வொரு வகை ஏ.டி.எம்களுக்கும் ஒவ்வொரு வகையில் பல்வேறு நிறுவனங்கள் சலுகைகளை வழங்குகின்றன. அதாவது , சாதராண கிளாசிக் கார்டு வைத்திருப்பவர்களை காட்டிலும், பராமரிப்பு தொகை அதிகம் செலவு செய்து அதிக பணப்பரிவர்த்தனை செய்யும் பிளாட்டினம் வகை கார்டுதரர்களுக்கு சலுகைகளும் சற்று அதிகமாகவே கிடைக்கின்றன. அதிலும் , VISA, MasterCard வாடிக்கையாளர்ளுக்கு Rupay கார்டுகளை விட குறிப்பிட்ட ஷாப்பிங் சலுகைகள் கணிசமான அளவில் அதிகமாக இருக்கும்..
எது சிறந்தது?
VISA , MasterCard போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் ஏ.டி.எம் கார்டுகளை பயன்படுத்துவதால் அந்த நாட்டு நிறுவனங்களுக்கே பயன்பாட்டு தொகை நமது வங்கி கணக்கில் இருந்து அவர்களுக்கு செல்கிறது. அதனை குறைக்கவே RBI மூலம் இந்தியாவில் Rupay கார்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன.
ஆனால், ஏ.டி.எம் கார்டு அதிகம் பயன்படுத்தி அதிகமாக செலவு செய்பவர்களுக்கு Rupay கார்டுகள் மூலம் அதிக சலுகைகள் கிடைப்பதில்லை. அதனால்,நாம் மாதந்தோறும் பயன்படுத்தும் பரிவர்த்தனை, சலுகைகள் அளவை பொருத்தும், பராமரிப்பு கட்டணங்களை பொருத்தும் நமது ஏ.டி.எம் கார்டுகளை தேர்வு செய்வதே நல்லது.
Debit card-களின் தினசரி வரம்பு (சில உதாரணங்கள்) :
1.கனரா வங்கி (பொதுத்துறை) :
கிளாசிக் Debit Card :
ஏ.டி.எம் வரம்பு - ரூ.25 ஆயிரம் வரை.
POS (ஸ்வைப் மிஷின்) - ரூ.50 ஆயிரம் வரை.
பிளாட்டினம் Debit Card :
ஏ.டி.எம் வரம்பு - ரூ.50 ஆயிரம் வரை.
POS (ஸ்வைப் மிஷின்) - ரூ.1 லட்சம் வரை.
VISA Signature Debit Card :
ஏ.டி.எம் வரம்பு - ரூ.1 லட்சம் வரை.
POS (ஸ்வைப் மிஷின்) - ரூ.2 லட்சம் வரை.
Rupay PMJDY (பிரதான மந்திரி ஜன் தன் வங்கி கணக்கு) Debit Card :
ஏ.டி.எம் வரம்பு - ரூ.10 ஆயிரம் வரை.
POS (ஸ்வைப் மிஷின்) - ரூ.30 ஆயிரம் வரை.
கனரா வங்கி சிறப்பு Debit (Bussiness) Card :
ஏ.டி.எம் வரம்பு - ரூ.1 லட்சம் வரை.
POS (ஸ்வைப் மிஷின்) - ரூ.3 லட்சம் வரை.
2.ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (பொதுத்துறை):
கிளாசிக் Debit Card :
ஏ.டி.எம் வரம்பு - ரூ.20 ஆயிரம் வரை.
POS (ஸ்வைப் மிஷின்) - ரூ.50 ஆயிரம் வரை.
கோல்டு Debit Card :
ஏ.டி.எம் வரம்பு - ரூ.50 ஆயிரம் வரை.
POS (ஸ்வைப் மிஷின்) - ரூ.2 லட்சம் வரை.
குளோபல் Debit Card (MasterCard/VISA) :
ஏ.டி.எம் வரம்பு - ரூ.40 ஆயிரம் வரை.
POS (ஸ்வைப் மிஷின்) - ரூ.75 ஆயிரம் வரை.
SBI MyCard - Debit Card :
ஏ.டி.எம் வரம்பு - ரூ.40 ஆயிரம் வரை.
POS (ஸ்வைப் மிஷின்) - ரூ.50 ஆயிரம் வரை.
Rupay Debit Card :
ஏ.டி.எம் வரம்பு - ரூ.25 ஆயிரம் வரை.
POS (ஸ்வைப் மிஷின்) - ரூ.50 ஆயிரம் வரை.
3.HDFC வங்கி (தனியார்) :
கிளாசிக் Debit Card :
ஏ.டி.எம் வரம்பு - ரூ.25 ஆயிரம் வரை.
POS (ஸ்வைப் மிஷின்) - ரூ.2.75 லட்சம் வரை.
பிளாட்டினம் Debit Card :
ஏ.டி.எம் வரம்பு - ரூ.1 லட்சம் வரை.
POS (ஸ்வைப் மிஷின்) - ரூ.3.5 லட்சம் வரை
Millennia Debit Card :
ஏ.டி.எம் வரம்பு - ரூ.50 ஆயிரம் வரை.
POS (ஸ்வைப் மிஷின்) - ரூ.3.5 லட்சம் வரை
Rupay Debit Card :
ஏ.டி.எம் வரம்பு - ரூ.50 ஆயிரம் வரை.
POS (ஸ்வைப் மிஷின்) - ரூ.2.75 லட்சம் வரை.
பெண்களுக்கான பிரத்யேக Debit Card :
ஏ.டி.எம் வரம்பு - ரூ.50 ஆயிரம் வரை.
POS (ஸ்வைப் மிஷின்) - ரூ.3.50 லட்சம் வரை
Times Points Debit Card :
ஏ.டி.எம் வரம்பு - ரூ.50 ஆயிரம் வரை.
POS (ஸ்வைப் மிஷின்) - ரூ.3.5 லட்சம் வரை
உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் பயன்படுத்தும் Debit Card களுக்கு ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி MasterCard மற்றும் VISA ஆகிய நிறுவனங்களின் கார்டுகளை பயனர்களுக்கு வழங்குகிறது.
உள்ளூர் பயன்பாடு என்றால் Rupay கார்டுகளை ஸ்டேட் பாங்க் வழங்குகிறது.
VISA, MasterCard, Rupay போன்ற Debit கார்டுகளை போல American Express, Diners Club, Discover, JCB, Global Card போன்ற நிறுவனங்களும் Debit Card சேவைகளை வழங்குகின்றன. இந்த வகை கார்டுகள் பெரும்பாலும் POS முறையில் ஸ்வைப் மிஷின் அல்லது ஆன்லைன் பரிவர்த்தனை வாயிலாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணங்கள், ஷாப்பிங்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.