- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
தங்க நகைக் கடன் வழங்குவதில் குறைபாடு., நிதி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்த RBI!
தங்க நகைக்கடன் வழங்குவதில் வங்கிகள் மற்றும் பல்வேறு நிதி நிறுவனங்கள் உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றுவதில்லை என RBI குற்றம்சாட்டியுள்ளது.

Author: Kanal Tamil Desk
Published: October 4, 2024
ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரும்பாலனோர் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு தங்க நகை கடன்களையே அதிகம் எதிர்பார்க்கின்றனர்.
தங்க நகைக் கடன்களை வங்கிகள் மட்டும் வழங்குவதில்லை. பல்வேறு தனியார் நிதி நிறுவனங்கள், சிறு நிதி சார்பு அமைப்புகள் கூட RBI அனுமதியுடன் வழங்கி வருகின்றன. அப்படி வழங்கப்படும் தங்க நகை கடன்களில் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்று ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா சமீபத்தில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கடந்த செப்டம்பர் 30ஆம் தேதியன்று வெளியான செய்தி குறிப்பில், ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மற்றும் அந்த நிறுவனங்களின் செயல்பாட்டை பரிசோதனை செய்ததில் தங்க நகைக்கடன் வழங்குவதில் பல்வேறு ஒழுங்கற்ற நடைமுறைகள் இருப்பது குறிப்பிடப்படுகின்றன.
தங்க நகைக்கான கடன் மதிப்பு விகிதங்கள் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் மாறுபடுகிறது. அதனை கண்காணிப்பதில் சில குறைபாடுகள் உள்ளது. தங்க நகை எடைகளை தவறாக கணக்கீடு செய்வது உள்ளிட்ட குறைபாடுகள் இதில் உள்ளன.
தங்க நகைக் கடன் வணிகத்தில் ஈடுபடும் அனைத்து நிறுவனங்களும் தங்கள் நிறுவன கொள்கைகள் மற்றும் தங்க நகை கடன் வழங்கி அதனை வசூல் செய்யும் நடைமுறையில் விரிவான மதிப்பாய்வு மேற்கொள்ளப்பட்டு, அதில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என RBI குறிப்பிட்டுள்ளது.
தங்க நகைக் கடன் வழங்கும் நிறுவனங்களின் போர்ட்ஃபோலியோவை (கடன் எவ்வளவு வழங்கியுள்ளனர் எவ்வளவு பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது உள்ளிட்ட நிதிநிலை விவரங்கள் ) உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக சில நிறுவனங்களின் போர்ட்ஃபோலியோ குறிப்பிடத்தக்க அளவில் அதிக வளர்ச்சி கண்டுள்ளன என்று RBI தெரிவித்துள்ளது.
தங்க நகைக் கடன் வழங்கும் 3ஆம் தரப்பு சேவை வழங்குநர்கள் (கடன் வாங்குபவர்கள் - கடன் தரும் நிறுவனங்களை தவிர்த்து இன்னொரு நிறுவனம்) மீது அவுட்சோர்சிங் செயல்பாடுகள் மற்றும் மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்கள் மீது போதுமான கட்டுப்பாடுகள் உள்ளனவா என்பதை கடன் வழங்கும் நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.
இந்த விஷயத்தில் ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களுக்கு இணங்காமல் செயல்படும் நிறுவனங்களின் செயல்பாடுகள் தீவிரமாகப் கண்காணிக்கப்படும் என்றும் அப்படி பின்பற்றாத நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் RBI எச்சரித்தது.
RBI-யால் அங்கீகரிக்கப்பட்ட தங்க நகைக் கடன் வழங்குபவர்களின் போர்ட்ஃபோலியோ வரும் மார்ச் 2025க்குள் ரூ.10 லட்சம் கோடியாக உயரும் என்று RBI-யால் மதிப்பிடப்பட்டுள்ளது.
வழங்கிய கடன்களை திரும்ப பெறுவதற்கும், தங்க நகைகளை மதிப்பீடு செய்வதற்கும் சில நிறுவனங்கள் மூன்றாம் தரப்பினரைப் பயன்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் இருக்கிறது என்று RBI கூறியுள்ளது. வாடிக்கையாளர் இல்லாமல் தங்கத்தை மதிப்பீடு செய்வது, தங்கக் கடன்களின் இறுதி வரை கண்காணிப்பு இல்லாதது. மீட்கப்படாமல் இருக்கும் தங்க நகைகளை ஏலத்தில் விடுவதில் வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருப்பது ஆகியவை முக்கிய குறைபாடுகளாக உள்ளது என்றும் RBI குற்றம்சாட்டியுள்ளது.
வங்கிகள் மற்றும் தனியார் தங்க நகைக் கடன் நிதி நிறுவனங்கள் போன்றவைகள் தங்க நகைக் கடன் மீது டாப்-அப் கடன்களை வழங்குகின்றன. அதாவது தங்கத்தை அடமானம் வைக்கும் போது இருந்த தொகையை காட்டிலும் தற்போது தங்க மதிப்பை கருத்தில் கொண்டு அதனை உயர்த்தி வழங்குவது. இப்படியான நடைமுறைகள் மீது ஒழுங்குமுறை பரிந்துரைகளை சில நிறுவனங்கள் கடைப்பிடிப்பதில்லை என்று RBI குறிப்பிடுகிறது.
மேலும், சில நிறுவனங்களில் காணப்படும் ஒழுங்குமுறை LTV உச்சவரம்புகளை மீறும் நிகழ்வுகளுடன் அவ்வப்போது LTV (கடன்-மதிப்பு) கண்காணிப்புக்கான வலுவான அமைப்பு இல்லாதது. சிஸ்டம் உருவாக்கப்பட்ட விழிப்பூட்டல்கள், கிடைக்கும் இடங்களில், LTV உச்சவரம்பில் உள்ள மீறலைத் தீர்க்க தீவிரமாகப் பின்பற்றப்படவில்லை.
தங்க நகைக் கடன்களுக்கு ரொக்கமாக வழங்கப்படும் தொகையானது வருமான வரிச் சட்டம், 1961-ன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள சட்டரீதியான ரொக்க பணப்பரிவர்த்தனை நிதி வரம்பிற்கு உட்பட்டு தான் வழங்க வேண்டும்.ஆனால் இந்த விதிமுறைகளை சில நிதி நிறுவனங்கள் மீறியுள்ளன என்றும் RBI குறிப்பிட்டுள்ளது.
மீட்கப்படாத தங்க நகைகளை செயல்படாத சொத்துகளாக (NPAs) வகைப்படுத்த தவறுவது. காலாவதியான கடன்களைப் புதுப்பித்தல் அல்லது அதன் மீது புதிய கடனை வழங்குவதில் மூன்றாம் தரப்பு நிறுவனங்களின் மீது போதுமான கட்டுப்பாடுகள் இல்லாதது போன்ற சிக்கல்கள் தங்க நகை கடன் வழங்குவதில் உள்ளது என்றும்,
மேற்குறிப்பிட்ட பல்வேறு குறைபாடுகளை கண்டறிந்து அடுத்த 3 மாதத்திற்குள் நிதி நிறுவனங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்த நடவடிக்கைகள் குறித்து ரிசர்வ் வங்கியிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் RBI எச்சரித்துள்ளது.