- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
செல்வமகள் திட்டத்தில் குறைந்து வரும் வட்டி விகிதம்…காரணம் என்ன?
பெண் குழந்தைகளுக்காக மத்திய பா.ஜ.க அரசால் 2015 -ம் ஆண்டு தொடங்கப்பட்ட செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் வட்டி விகிதமானது, 9 விழுக்காட்டிலிருந்து தற்போது 7.6 விழுக்காடாக குறைந்துள்ளது.

Author: Kanal Tamil Desk
Published: October 4, 2024
சென்னை:மத்திய பா.ஜ.க. அரசு கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, உயர் கல்வி மற்றும் திருமணம் போன்ற தேவைகளை குறிப்பிட்டு "சுகன்யா சம்ரிதி யோஜனா (Sukanya Samriddhi Yojana - SSY) " எனும் செல்வமகள் சேமிப்பு திட்டத்தை அறிமுக செய்தது.
பிறந்த பெண் குழந்தை முதல் 10 வயது பெண் குழந்தைகள் வரை பயன்பெறும் வகையில் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்தில், தங்களது பெண் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் ,ஆதார்,மற்றும் பெற்றோரின் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து சேர்ந்து கொள்ளலாம். மேலும், இத்திட்டத்தில் ரூ.250 முதல் ஒன்றரை லட்சம் வரையில் ஒரு நிதி ஆண்டிற்கு பணம் செலுத்தி தங்களுக்கான சேமிப்பை உறுதி செய்து கொள்ளலாம்.
இது ஒரு மிதக்கும் வட்டி விகித முறைபடி (Floating Rate) செயல்படும் திட்டமாகும். அதாவது மூன்று மதத்திற்கு ஒருமுறை மத்திய நிதி அமைச்சகம் இதன் வட்டிவிகிதத்தில் ஏற்ற இறக்கத்தை அறிவித்து கொண்டே இருக்கும். செல்வமகள் திட்டத்தின் கால அளவு அதிகபட்சம் 21 வருடமாக மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது.
சுகன்யா சம்றிதி யோஜனா திட்டம் செயல்பாட்டுக்கு வந்தபோது சாமானிய மக்கள் தங்களது பெண்குழந்தையின் எதிர்காலத்திற்கு இது மிகவும் பயன்தரும் ஒரு திட்டடமாக கருதி இத்திட்டத்தில் இணைத்து வந்தார்கள். இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது பயனர்களின் சேமிப்பு தொகைக்கான வட்டி விகிதம் 9 சதவீதமாக இருந்தது. ஆனால், கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக இந்த திட்டத்திற்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வந்தது. அந்த வகையில், தற்போது 7.6 சதவீதமாக சரிந்துள்ளது.
இந்நிலையில், இந்த திட்டம் வெறும் திட்டமாக மட்டுமே என்னும் நிலை பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கான காரணம் என்ன.? காலப்போக்கில் வட்டி விகிதம் அதிகரிக்குமா.? இந்த திட்டம் தங்கள் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு பலன் தருமா என்பன உள்ளிட்ட பொதுமக்களின் கேள்விகளுக்கு மத்திய அரசின் பதில் என்னவாக இருக்கும்?