- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
பான் கார்டு பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை…அதன் வகைகள், தேவைகள் என்னென்ன?
இந்திய வருமானவரித் துறையால் வழங்கப்படும் பான் கார்டு எனும் நிரந்தர கணக்கு எண் பற்றியும், அதன் பல்வேறு தேவைகள் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் நாம் காணலாம்.

Author: Kanal Tamil Desk
Published: October 16, 2024
இந்திய வருமானவரித் துறையால் வழங்கப்படும் தனிப்பட்ட அடையாள எண் கொண்ட அட்டை பான் (PAN) கார்டு ஆகும். இதன் பொருள் நிரந்தர கணக்கு எண் அதாவது Permanent Account Number என்பதாகும். இந்த பான் கார்டு ஒருவரின் நிதி பரிவர்த்தனைகளை கண்காணிக்க பயன்படுகிறது. பான் எண்ணானது எழுத்துக்கள் மற்றும் எண்கள் கொண்ட 10 இலக்க அடையாள எண் ஆகும். இது ஒவ்வொரு கார்டுதாரருக்கும் ஆதார் எண் போல தனித்துவமானதாக இருக்கும்.
ஒருவர் எத்தனை வங்கி கணக்கு வைத்திருந்து அதன் மூலம் எவ்வளவு நிதி பரிவர்த்தனை செய்தாலும், அதனை முழுதாக ஒன்றிணைத்து கண்காணிப்பதே பான் கார்டு வழங்ப்பட்டதன் முக்கிய நோக்கமாகும். TDS,TCS போன்ற வருமான வரித்துறையின் சலுகைகளை கூட உட்பட ஒருவரின் அனைத்து பண பரிவர்தனங்களும் PAN கார்டு மூலம் இணைக்கப்படுகிறது.
வருமான வரித்துறைக்கு ஒரு நபரின் முழு வரவு செலவு விவரங்களையும் வெளிப்படையாக அடையாளம் காட்துவற்கு பான் எண் உதவுகிறது. இன்னும் குறிப்பிட்டு கூறவேண்டுமென்றால் ரூ.2 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பரிவர்த்தனைக்கு பான் கார்டு எண் என்பது கட்டாயமான ஒன்றாகும். பல்வேறு வங்கிகளில் குறிப்பிட்ட தொகைக்கு மேல் பான் கார்டு இல்லாமல் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள முடியாது.
பான் அடையாள எண் குறிப்பு :
பான் கார்டில் உள்ள முதல் 3 எழுத்துகள் வரிசைப்படி கொடுக்கப்படுவது. 4வது எழுத்து P,C,H,F,T என பான் கார்டு தனிநபருக்கானதா.? ஒரு நிறுவனத்தினுடையதா.? என்பது பற்றிய விவரம் அந்த எழுத்தில் உள்ளது. அடுத்த எழுத்து பான் வைத்திருப்போரின் பெயரின் முதல் எழுத்தாகும். அடுத்த 4 எண்கள் வரிசைப்படி கொடுக்கப்படுவது. அடுத்து வரும் எழுத்தும் வரிசைப்படி கொடுக்கப்படுவதாகும்.
4வது கொடுக்கப்படும் எழுத்தின் அர்த்தங்கள் :
P- Individual - தனிநபர்
C - Company - தனியார் நிறுவனம்
H - Hindu Undivided Family (HUF)
A - Association of Persons (AOP) - சங்கம்.
B - Body of Individuals (BOI) - ஒன்றுக்கும் மேற்பட்டோருக்கானது.
G - Government Agency - அரசு பொது நிறுவனம்.
J - Artificial Juridical Person
L - Local Authority - உள்ளூர் அதிகார சபை.
E - Limited Liability Partnership - வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை
F - Firm - ஒன்றுக்கும் மேற்பட்டோர் சேர்ந்த நிறுவனம்
T - Trust - தொண்டு நிறுவனம்.
பான் கார்டின் தேவைகள் :
வங்கி அல்லது தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.50000க்கும் அதிகமாக பணப்பரிவர்த்தனை, சேமிப்பு கணக்கு தொடங்க பான் கார்டு கட்டாயமாக தேவைப்படுகிறது. தபால் நிலய சேமிப்பு கணக்கிற்கும் இந்த விதி பொருந்தும்.
தனியார் உணவகங்களில் ரூ.25000க்கும் அதிகமாக பில் செலுத்தும் போது பான் கார்டு கட்டாயம் கொடுக்கவேண்டும்.
ரூ.1 லட்சத்துக்கும் அதிகமான மதிப்பீட்டில் பத்திரங்கள் வாங்கும்போதும், விற்கும்பொதும் பான் அட்டை (Pan Card) தேவையான ஒன்றாகும்.
ஒரேநாளில் ரூ.50 ஆயிரத்திற்க்கும் அதிகமாக உள்ள தொகை பணமாக கொடுத்து வங்கி வரைவோலை (Demand Draft),காசோலை போன்றவை வாங்கவும் பான் கார்டு அவசியமாகும்.
தனிநபரின் வங்கி கணக்கில் ஒரு நாளுக்கு ரூ.50000க்கு கூடுதலாக பணம் செலுத்த வேண்டுமென்றாலும் பான் கார்டு கட்டாயம் தேவைப்படும்.
வங்கி வாடிக்கையாளர்களுக்கு Credit card மற்றும் Debit card வசதிகள் தேவைப்பட்டால் பான் எண்ணை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.
ரூ.50 ஆயிரத்திற்கு அதிகமான மதிப்பீட்டில் ஏதேனும் ஒரு நிறுவனத்தின் கடன் பத்திரம் கொடுப்பதற்கும், கடன் பத்திரம் வாங்குவதற்கும் பான் அவசியமாகும்.
ஒரு வருடத்தில் ரூ.50000க்கும் மேலான தொகை எல்ஐசி போன்ற காப்பீடு தொகை செலுத்தவிருக்கும் பான் கார்டு கட்டாயமாகும்.
வருமான வரி கணக்கும் தாக்கல் செய்பவர்களுக்கு கட்டாயமாக பான் கார்டு முதன்மை முக்கிய ஆதாரமாக இணைக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி.?
பான் கார்டு விண்ணப்பிக்க, National Security Depository Limited (NSDL) என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். முன்பெல்லாம் பான் கார்டு விண்ணப்பித்தால் கார்டு கையில் கிடைக்க குறைந்தபட்சம் பதினைந்து நாட்களாவது தேவைப்படும். ஆனால் இப்போதெல்லாம் இ பான் கார்டு முறைப்படி விண்ணப்பித்த இரண்டு நாட்களில் பான் கார்டு நமக்கு கிடைத்து விடுகிறது.பெயர்,வயது, முகவரி உரிய ஆதார ஆவணங்களுடன் தகவல்களை சமர்ப்பித்தால் 2 நாட்களுக்குள் உங்களது நிரந்தர கணக்கு எண் அட்டை உங்கள் கையில் இருக்கும்.