தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Logo

Saturday, Apr 19, 2025 | India

Home / வங்கியியல்

CIBIL பற்றி இதையெல்லாம் அறிந்து கொள்ளுங்கள்; மதிப்பெண், பாதிப்பு, பாதுகாப்பு வழிமுறைகள்!

வாடிக்கையாளர்கள் கடன் வாங்கும் போது வங்கிகள்/நிதி நிறுவனங்களால் சோதனை செய்யப்படும் CIBIL மதிப்பெண் பற்றியும், அதன் மதிப்பீடுகள், CIBIL-ஐ பாதிக்கும் காரணிகள் என பல்வேறு விவகாரங்கள் குறித்தும் இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

News Image

Author: Kanal Tamil Desk

Published: October 20, 2024

ஒருவர் வாகனக் கடன், வீட்டுக் கடன், குறிப்பாக தனிப்பட்ட கடன்களை வங்கிகளில் இருந்தோ தனியார் நிதி நிறுவனங்களில் இருந்தோ பெற விண்ணப்பிக்கும் போது, “சார். உங்கள் சிபில் (CIBIL) ஸ்கோர் செக் செய்ய வேண்டும் “ என கேட்பார்கள்.

அந்த சிபில் ஸ்கோரில் நமக்கு குறிப்பிடப்பட்டுள்ள மதிப்பெண்களை வைத்து தான் ஒருவருக்கு கடன் வழங்கலாமா வேண்டாமா என்பதில் இருந்து, சில சமயம் அவரது கடனுக்கு வட்டி எவ்வளவு நிர்ணயம் செய்யலாம், எத்தனை தவணைகள் வழங்கலாம் என்பது வரை இறுதி செய்யப்படுகிறது.

CIBIL ஸ்கோர் என்றால் என்ன?

சிபில் (CIBIL) என்பது Credit Information Bureau India Limited எனும் இந்திய அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட ஓர் அமைப்பாகும். இந்த சிபில் அமைப்பிடம் அனைத்து வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தில் யார் யார் கடன் வாங்கியுள்ளனர், அதனை எப்போது திருப்பி செலுத்தியுள்ளனர். இன்னும் எவ்வளவு கடன் தொகை உள்ளது, எத்தனை தவணை திருப்பி செலுத்தவில்லை., தாமதமாக கடன் தவணையை எத்தனை முறை செலுத்தியுள்ளனர் என அனைத்து விவரங்ளையும் மாதம் ஒருமுறை CIBIL அமைப்பிடம் சமர்பிப்பார்கள்.

இந்த அனைத்து தனிப்பட்ட நிதி தகவல்களும் நமது பான் (PAN - Personal Account Number) எண்ணுடன் ஒருங்கிணைக்கப்பட்டு சிபில் தளத்தில் மதிப்பெண் வழங்கப்படும். வங்கிகளில் கடன் பெற்று அதனை தவணை தவறாமல் திருப்பி செலுத்தி இருந்தால் நமது சிபில் மதிப்பெண் நன்றாக இருக்கும். முறையாக கடன் தொகை திருப்பி செலுத்தவில்லை என்றால் மிக குறைவான மதிப்பெண் கொடுக்கப்பட்டிருக்கும்.

CIBIL மதிப்பெண்கள் :

CIBIL மதிப்பெண் 300இல் இருந்து தொடங்கி 900 வரையில் மதிப்பிடப்படும். 

300 முதல் 550 வரை - மோசமான நிலை (Poor)

550 முதல் 650 வரை - ஓகே (Average)

650 முதல் 750 வரை - நன்று (Good)

750 முதல் 900 வரை - மிக்க நன்று (Excellent)

நமது சிபில் மதிப்பெண் மிக்க நன்று என்ற முறையில் இருந்தால் தான் பெரும்பாலான வங்கிகள் நமக்கு கடன் வழங்குவார்கள். மற்றபடி நன்று (Good) எனும் நிலையில் இருந்தால் சற்று யோசித்து தருவார்கள். 650க்கு கிழே சிபில் மதிப்பெண் இருந்தால் கடன் வாங்குது சற்று கடினம் தான்.

CIBIL மதிப்பெண் எதனால் பாதிக்கும்?

நீங்கள் வாங்கிய கடனை உரிய தவணையில் திருப்பி செலுத்தாமல் இருப்பது.

நீங்கள் வாங்கிய கடன், வட்டியுடன் தோராயமாக ஒரு லட்சம் இருக்கிறது என்றால் அதற்கு குறைவான தொகை செலுத்தி கடனை செட்டில் செய்து விட்டீர்கள் என்றாலும் சிபில் பாதிக்கப்படும்.

கடன் கேட்டு பல்வேறு வங்கிகளில் நீங்கள் விண்ணப்பிக்கும் போது அவர்கள் ஒவ்வொரு முறையும் உங்கள் CIBIL மதிப்பெண்ணை சோதனை செய்தால் ஒவ்வொரு முறையும் 10 மதிப்பெண்கள் குறையும். உங்கள் சிபில் மதிப்பெண்ணை நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் தனிப்பட்ட முறையில் சோதனை செய்து கொள்ளலாம். அப்போது மதிப்பெண் குறையாது.

நமது போனுக்கு வரும் குறுஞ்செய்தியில் ‘உங்களுக்கு இத்தனை லட்சம் கடன் வழங்குகிறோம்’ என செய்தி வரும். அந்த லிங்கை கிளிக் செய்து நமக்கு கடன் கிடைக்குமா என சோதித்து பார்க்கலாம் என்று பான் எண் விவரங்களை உள்ளீடு செய்வீர்கள். உடனே அவர்கள் உங்களை கேட்காமலேயே உங்கள் சிபில் மதிப்பெண்ணை சோதனை செய்வார்கள். அப்போதும் உங்கள் சிபில் மதிப்பெண் குறையும்.

நீங்கள் உங்கள் நண்பர் அல்லது உறவினர்கள் கடன் வாங்குவதற்கு ஜாமீன் கையெழுத்திட்டு, அவர் முறையாக கடன் செலுத்தவில்லை என்றாலும் அதுவும் உங்கள் சிபில் மதிப்பெண் குறைய காரணியாக அமையும்.

CIBIL மதிப்பெண்ணை எப்படி ஏற்றலாம்?

உங்கள் சிபில் மதிப்பெண் குறைவாக இருந்தால் உடனடியாக MyScore.cibil.com எனும் இணையதளத்திற்கு சென்று உங்கள் பெயர். பான் நம்பர் உள்ளிட்ட முக்கிய தரவுகளை உள்ளீடு செய்து உங்கள் கடன் விவரங்களை அறிந்து கொள்ள வேண்டும்.

அதில் எந்தெந்த கடன்களை உடனடியாக செலுத்த வேண்டும். என்பதை கண்டறிந்து அதனை திருப்பி செலுத்த வேண்டும்.

கடன் தொகையை விட குறைவான செட்டில்மென்ட் தொகையை செலுத்தி கடனை அடைக்க பார்க்காமல்., எவ்வளவு தொகை செலுத்த வேண்டுமோ அதனை அப்படியே செலுத்துவது தான் உங்கள் சிபில் மதிப்பெண்ணுக்கு நல்லது.

CIBIL குறைவாக இருந்தால் லோன் கிடைக்குமா?

சிபில் குறைவாக இருக்கும் பட்சத்தில் பெரும்பாலும் வங்கிகள், அந்த குறிப்பிட்ட வாடிக்கையாளருக்கு கடன் வழங்காது. சில குறிப்பிட்ட நிதி நிறுவனங்கள் மட்டும் சிபில் குறைவாக இருந்தாலும் அதிக வட்டியில் கடனை தருவார்கள்.

தனிப்பட்ட கடன்களை மட்டுமே வங்கிகள் மறுக்கும். வாகன கடன், வீட்டு கடன் உள்ளிட்ட பொருட்கள் மீதான கடன்கள் பெரும்பாலும் கிடைத்துவிடும். கடன் முறையாக செலுத்தவில்லை என்றாலும் பொருட்களை வங்கிகள்/நிதி நிறுவனங்கள் பறிமுதல் செய்துகொள்ளும் வசதி இருப்பதால் இந்த கடன்கள் வழங்கப்படும்.

முதல் முறை கடன் வாங்குவோருக்கு

இதுவரை கடன் வாங்கவில்லை என்றால் உங்கள் சிபில் மதிப்பீடு செய்யப்பட்டிருக்க மாட்டாது. அப்படியென்றால் உங்களுக்கு கடன் தொகையானது, சம்பள விவரம் (Salary Pay Slip) ,வங்கி பணப்பரிவர்த்தனை சோதனை செய்து அந்தந்த வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் குறிப்பிட்ட அளவு கடன் தருவார்கள்.

மற்றபடி, வாகனக்கடன், பொருட்களை EMI-இல் வாங்குவது போன்ற சிறிய அளவிலான கடன்கள் எளிதில் கிடைக்கும். அதனை முறையாக செலுத்தி வந்தால் சிபில் மதிப்பெண்கள் கூடும்.

வங்கிகள் செய்யும் தவறு:

CIBIL மதிப்பெண் விஷயத்தில் பெரும்பாலான வங்கிகள் CIBIL அமைப்பிடம் நம் கடன் விவரங்களை கூறிவிடுகின்றனர். சில சமயம் நமது தவணையை முன்கூட்டியே செலுத்திவிட்டு கடனை அடைந்துவிட்டால் (Pre Close) அதனை சில வங்கிகள் CIBIL அமைப்பிடம் கூறுவதில்லை.

சில சமயம் முன்கூட்டியே அடைத்த கடனை, செட்டில்மென்ட் என சில வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் தவறாக பதிவிட்டு விடுகின்றனர்.

அதனால், கடன் தொகையினை முன்கூட்டியே செலுத்தினாலும் நமது CIBIL பக்கத்தில் சோதனை செய்து கொள்வது நல்லது.

Tags:CIBIL ScoreCIBILBank LoanLoansloansbanking