- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
AIRRBEA-ன் 10 ஆண்டு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி! 460 தின ஊதிய தொழிலாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்!
AIRRBEA-வின் நீண்ட கால கோரிக்கையில் ஒன்றான தின ஊதியம் பெரும் தொழிலாளர்கள் வேலையை உறுதிப்படுத்தும் கோரிக்கையை ஆந்திர பிரதேச கிராம விகாஸ் வங்கி. நிறைவேற்றி இருக்கிறது.

Author: Kanal Tamil Desk
Published: October 31, 2024
தெலுங்கானா உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களின்படி, ஆந்திர பிரதேச கிராமிய விகாஸ் வங்கி (APGVB - Andhra Pradesh Grameena Vikas Bank) அமைப்பானது, 460 தினசரி ஊதிய அலுவலக உதவியாளர்களை நிரந்தர ஊழியர்களாக நியமிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பாக கடந்த அக்டோபர் 22-ல் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. APGVB-ன் இந்த நடவடிக்கையானது AIRRBEA-ன் (All India Regional Rural Bank Employees Association) நீண்ட கால முயற்சிக்கும், சட்ட போராட்டத்திற்கும் கிடைத்த முன்னேற்றமாகவே பார்க்கப்படுகிறது.
இதற்கான முதல் அறிவிப்பு தெலுங்கானாவில் கடந்த ஜூன் 13-ல் வெளியிடப்பட்டு, தினசரி ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக முறைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் மொத்தம் 460 பணியாளர்கள் தற்போது குரூப்-C பணிகளுக்கு தேர்வாகியுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
தேர்வு செய்யப்பட்ட 460 ஊழியர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் நிரந்தர பணியாளர்களாக நியமிப்பதற்காக இதர நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட உள்ளனர். இது தொடர்பாக APGVB, அதன் அனைத்து வங்கி கிளைகள் மற்றும் அலுவலகங்களுக்கு பரவலான சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.
எதிர்ப்பும், வெற்றியும்
10 முதல் 20 ஆண்டுகள் வரை பணிபுரியும் தினக்கூலித் தொழிலாளர்களை நிரந்தர பணியாளர்களாக மாற்றக் கோரியபோது வங்கி அதிகாரிகளிடமிருந்து ஆரம்பத்தில் நிராகரிக்கப்பட்டது என APGVB ஊழியர் நமது கனலிடம் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், “ முதலில் 2014-ல், இந்தத் தொழிலாளர்கள் தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர், அவ்வழக்கில் 2018-ல் அவர்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தது. இருப்பினும், வங்கி இந்த முடிவை மேல்முறையீடு செய்தது. அதன் பின்னர் உச்ச நீதிமன்றம் வரை சென்றும் 2022 வரையில் இந்த வழக்கில் தோல்விகளைச் மட்டுமே சந்திக்க நேரிட்டது.” என்றும்,
தொழிலாளர்களின் சட்ட போராட்டத்தை அடுத்து, வங்கி முதற்கட்டமாக சுமார் 100 தொழிலாளர்களை மட்டும் நிரந்தர பணியாளர்களாக முறைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டது. ‘100 தொழிலாளர்களுக்கு மட்டும் பணி’ என்ற நடவடிக்கையால் அதிருப்தி அடைந்த தொழிலாளர்கள், மீண்டும் தங்கள் சட்ட போராட்டத்தை எதிர்கொண்டனர். இம்முறை அவர்களுக்கு சாதகமான நீதிமன்ற உத்தரவுகளைப் பெற்றனர்.” என்று APGVB ஊழியர் தெரிவித்துள்ளார்.
AIRRBEA பொதுச்செயலாளர், S. வெங்கடேஸ்வரர் ரெட்டி, உயர்நீதிமன்ற தீர்ப்பை ஒரு முக்கிய மைல்கல் என்று பாராட்டி நமது கனலிடம் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், “460 தினசரி ஊதிய சாதாரண தொழிலாளர்கள் APGVB-யால் நிரந்தர பணியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது AIRRBEA அமைப்பின் கீழ் எட்டப்பட்ட ஓர் சாதனையாகும். APGVB தொழிற்சங்கத் தலைவர்களின் இடைவிடாத முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. இந்த சாதனை மற்ற RRBகளில் உள்ள தினசரி ஊழியர்களுக்கான பணி நிரந்தர வாய்ப்புகளை அதிகரிக்கும்.” என்றும் தெரிவித்தார்.
பொதுத்துறை வங்கிகளுக்கு
பொதுத்துறை வங்கிகளிலும் (PSB - Public Sector Banks) தினசரி கூலித் தொழிலாளர்கள் அதிக வேலைப்பளுவுடன் ஒப்பந்த தொழிலாளர்களாகவே தங்கள் பணிகளை தொடர்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் வங்கி நிர்வாகத்தால் கடுமையான மன அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். சில சந்தர்ப்பங்களில், செலவுக் குறைப்பு நடவடிக்கைகள் என்ற போர்வையில் அவர்களின் முறையான ஊதியம் கூட குறைக்கப்படுகிறது.
APGVB போல தினசரி கூலித் தொழிலாளர்களை முறைப்படுத்துவது பொதுத்துறை வாங்கிகளுக்கு ஒரு கவலையாக உள்ளது, இருப்பினும், APGVB-ல் 460 தினக்கூலி தொழிலாளர்களை முறைப்படுத்துவதற்கான சமீபத்திய நடவடிக்கை பொதுத்துறையில் வேலை செய்யும் தினசரி ஊழியர்களுக்கும் ஓர் நம்பிக்கையை கொடுத்துள்ளது.