தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Logo

Friday, Apr 18, 2025 | India

Home / வங்கியியல்

இனி ஜியோ வழியாகவும் ஆன்லைன் பரிவர்த்தனை! அம்பானிக்கு RBI கொடுத்த தீபாவளி பரிசு!

GPay, PhonePe போல இனி ஜியோ பேமெண்ட்ஸ் வழியாகவும் பண பரிவர்த்தனை மேற்கொள்ள RBI, ஜியோ நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளது.

News Image

Author: Kanal Tamil Desk

Published: October 31, 2024

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ  ஃபைனான்சியல் சர்வீசஸின் (JFI) துணை நிறுவனமான ஜியோ பேமெண்ட் சொல்யூஷன்ஸ் (Jio Payment Solutions Limited), அக்டோபர் 28, 2024 முதல் அமலுக்கு வந்திருக்கிறது. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸுக்கு, ஆன்லைன் பேமெண்ட் அக்ரிகேட்டர் ஆக செயல்படுவதற்கான அங்கீகாரச் சான்றிதழையும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வழங்கி இருக்கிறது.

ஜியோ பேமெண்ட் சொல்யூஷன்ஸ் சேவையை பொறுத்தவரையில், PayTM மற்றும் GPay போன்ற செயலிகள் வழங்கும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்காக வழங்கும் அனைத்து வசதிகளையும் வணிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு ஜியோ பேமெண்ட் சேவை வழங்குகிறது. RBI-யின் அங்கீகரிக்கப்பட்ட ஆன்லைன் பேமெண்ட் திரட்டிகளின் பிரத்யேக குழுவில் ஜியோ பேமெண்ட்ஸ் இணைவதால் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இன்னும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரிசர்வ் வங்கியின் ஒப்புதலை ஜியோ பேமென்ட் சொல்யூஷன்ஸ் பெற்ற பிறகு, பங்குசந்தையில் அதன் பங்கு விலை கணிசமான அளவில் ஏற்றம் கண்டுள்ளது. அதாவது, ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் நேற்று (அக்டோபர் 29) பிற்பகல் 12.41 மணியளவில், ரூ. 323.25  பிஎஸ்இயில் தொடங்கியதில் இருந்து 6.50 சதவீதம் வரை அதிகரித்து உள்ளது.

ஏற்கனவே, ஜியோ பேமெண்ட் வங்கியானது டெபிட் கார்டுடன் டிஜிட்டல் சேமிப்புக் கணக்குகளை வழங்குகிறது. இதில் சுமார் 15 லட்சத்திற்கும் அதிகமான பயனர்கள் கணக்கு வைத்துள்ளனர்.

மேலும், ஜியோ பிளாக்ராக் அசெட் மேனேஜ்மென்ட்டில் (Jio Blackrock Asset Management) 50 சதவீத பங்குகளையும்,  ஜியோ பிளாக்ராக் டிரஸ்டியில் 50 சதவீத பங்குகளையும் ஜியோ பைனான்சியல் சர்வீசஸில் முதலீடு செய்துள்ளது  என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:Jio Payment SolutionsJIOReliance JioPayment AggregatorsMukesh AmbaniJPSLRBI