தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Logo

Saturday, Apr 19, 2025 | India

Home / நிதி

UPI Lite-ன் அடுத்தடுத்த அப்டேட், நவம்பர் 1 முதல் அமலுக்கு வந்த புதிய சிறப்பம்சங்கள்

UPI Lite பரிவர்தனைகளில் இனி அதிகபட்சம் ஒரு நாளைக்கு ரூ.1000 வரையில் செலவு செய்து கொள்ளலாம் என்பது உட்பட 3 முக்கிய சிறப்பம்சங்களை RBI அனுமதித்துள்ளது.

News Image

Author: Kanal Tamil Desk

Published: November 4, 2024

பணபரிவர்தனைகளை மக்கள் மத்தியில் எளிதாக்கும் நோக்கிலும், பணமில்லா பரிவர்த்தனைகளை அதிகரிக்கும் நோக்கிலும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் பல்வேறு மேம்படுத்துதல்கள் நாளுக்கு நாள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே, வங்கிக்கு சென்று பணம் எடுக்கும் நடைமுறையை குறைக்கும் வகையில் அந்தந்த வங்கிகள் தங்களுக்கனே தனி செயலி (ஆப்) அல்லது இணையதள வங்கி சேவையை (Internet Banking) அறிமுகம் செய்தது. அதனை அடுத்து அந்த வங்கி சேவைகளை உள்ளடக்கி UPI பரிவர்த்தனை எனும் ஆன்லைன் வழியாக பணப்பரிவர்த்தனை செய்யும் வசதியை அறிமுகம் செய்தது NPCI (National Payments Corporation of India ) எனும் மத்திய அரசு ஆன்லைன் பணப்பரிவர்த்தனை ஒழுங்குமுறை அமைப்பு.

இந்த UPI டிஜிட்டல் பரிவர்த்தனைகளை Google Pay, PhonePe, PayTM உள்ளிட்ட நிறுவனங்களின் செயலிகள் செயல்படுத்தி வருகின்றன. தற்போது நகர்ப்புற ஷாப்பிங் மால்கள் முதல் கிராமப்புற பெட்டிகள் வரையில் இந்த டிஜிட்டல் பரிவர்த்தனைகள் தற்போது அதிகம் பெற செய்துவிட்டன.

அந்த UPI பரிவர்த்தனைகளை இன்னும் எளிதாக்க UPI Lite எனும்  புதிய வசதியை NPCI அமல்படுத்தியது. அதாவது, நாம் பயன்படுத்தும் UPI செயலியில் UPI Lite எனும் கூடுதல் சேமிப்பு தளம் இருக்கும். இதனை ஆன்லைன் வாலட் (டிஜிட்டல் பர்ஸ்) என்று அழைகிறார்கள். இதில், குறிப்பிட்ட தொகையை சேமித்து வைத்து கொள்ள முடியும். சிறிய அளவிலான பணபரிவர்தனைகளை வங்கிகள் அனுமதியின்றி, பின் (PIN) நம்பர் இன்றி செய்லபடுத்தி கொள்ளலாம்.

தற்போது செயல்பாட்டில் இருக்கும் இந்த UPI Lite-ல் தான் 3 முக்கிய மேம்படுத்துதலுக்கு RBI (Reserve Bank of India) அனுமதி அளித்துள்ளது,

1.ஒரு நாளைக்கு ரூ.500 வரையில் மட்டுமே இதன் மூலம் சிறிய அளவு பணபரிவர்தனைகளை செய்து கொள்ள முடியும். தற்போது இந்த தினசரி உச்சவரம்பு ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

2,இந்த வாலட்டில் பணம் சேமித்து வைக்கும் வரம்பு ரூ.2 ஆயிரமாக இருந்தது. இந்த உச்சவரம்பு தற்போது ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

3.வாலட்டில் பணம் தீர்ந்துவிட்டால், அதனை நாம் மீண்டும் நமது வங்கி கணக்கில் இருந்து ரீசார்ஜ் போல மாற்றி விட வேண்டும். ஆனால் இனி ஆட்டோ டாப் அப் வசதி மூலம் வாலட் பணம் தீர்ந்தால் தாமாகவே நமது வாலட்டில் பணம் நிரப்பி கொள்ளும்.

இவ்வாறு, UPI Lite-ல் 3 முக்கிய அம்சங்களுக்கு RBI அனுமதி அளித்துள்ளது.

UPI Lite-ன் முக்கிய அம்சங்கள் :

UPI Lite என்பது ஓர் மொபைல் நம்பருக்கு நாம் ரீசார்ஜ் செய்து அதனை நாம் பயன்படுத்தி கொள்ளும் அமைப்பு போல செயல்படும்.

நமது Google Pay அல்லது மற்ற UPI செயலியில் UPI Lite வெர்சனை ஆக்டிவேட் செய்து அதில் பணத்தை ரீசார்ஜ் செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த வாலட் மூலம் நாம் செய்யும் பணபரிவர்தனைக்கு வங்கி சர்வர், கூகுள்பே போன்ற செயலி சர்வர் செயல்பாட்டில் இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதால் அந்த பரிவர்த்தனை மிக எளிதாகவும் விரைவாகவும் இருக்கும்.

சிறிய அளவிலான பரிவர்த்தனை என்பதால் இதற்கு, பின் (PIN) நம்பர் தேவையில்லை.

Tags:UPI LiteUPIOnline TransactionRBINPCI