- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
RRBகளின் ஒருங்கிணைப்பு ஆரம்பம், பட்டியலை தயார் செய்த மத்திய நிதியமைச்சகம்
ஒரு மாநிலத்தில் இயங்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட கிராம வங்கிகளை ஒன்றாக ஒரே ஸ்பான்சர் வங்கிகளின் கீழ் இயங்கும் வண்ணம் மேற்கொள்ளும் ஒருங்கிணைப்பு (Amalgamation) நடவடிக்கையின் முதல் படியாக தற்போது அதற்கான பட்டியலை மத்திய நிதியமைச்சகம் தயார் செய்துள்ளது.

Author: Kanal Tamil Desk
Published: November 6, 2024
ஒவ்வொரு மாநிலத்திலும் இயங்கும் கிராமப்புற வங்கிகளின் (RRB - Regional Rural Bank) செயல்பாடு, அதன் ஸ்பான்சர் வங்கிகளின் நிதி செயலாக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, RRB வங்கிகள் ஒருங்கிணைப்பு பற்றி நீண்ட நாட்களாக பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒருங்கிணைப்பு குறித்த முக்கிய முன்னெடுப்பை மத்திய நிதி அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.
அதன்படி, ஒருங்கிணைக்கப்படும் பிராந்திய கிராமப்புற வங்கிகளின் (RRBs) பட்டியல் என்பது தயார் செய்து அந்தந்த கிராமப்புற வங்கிகளின் ஸ்பான்ஸர் வங்கிகளுக்கு அனுப்பியுள்ளது. ஸ்பான்ஸர் வங்கி வரும் நவம்பர் 20ஆம் தேதிக்குள் அதற்கான ஒப்புதலை அளிக்கும்பட்சத்தில் அடுத்தகட்ட ஒருங்கிணைப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ளும்.
ஒவ்வொரு மாநிலத்திலும், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட RRBகள் இருந்தால், அவை ஒன்றிணைக்கப்பட்டு புதிய ஸ்பான்சர் வங்கியின் கீழ் செயல்படும்படி பரிந்துரைக்கப்படும்.அந்த ஒருங்கிணைப்பு பட்டியல் பின்வருமாறு.
- ஆந்திர பிரதேசத்தில் உள்ள 4 கிராம வங்கிகள் (Andhra Pragathi Grameena Bank, Chaitanya Godavari Grameena Bank, Saptagiri Grameena Bank, Andhra Pradesh Grameena Vikas Bank (AP Part)) ஒன்றிணைக்கப்பட்டு கனரா வங்கி ஸ்பான்சரின் கீழ் செயல்டும் என்றும்,
- பீகாரில் உள்ள 2 கிராம வங்கிகள் (Dakshin Bihar Gramin Bank, Uttar Bihar Gramin Bank) ஒன்றிணைக்கப்பட்டு பஞ்சாப் நேஷனல் வங்கி ஸ்பான்சரின் கீழ் செயல்டும் என்றும்,
- குஜராத்தில் உள்ள 2 கிராம வங்கிகள் (Baroda Gujarat Gramin Bank, Saurashtra Gramin Bank) ஒன்றிணைக்கப்பட்டு பாங்க் ஆப் பரோடா ஸ்பான்சரின் கீழ் செயல்டும் என்றும்,
- ஜம்மு காஷ்மீரில் உள்ள 2 கிராம வங்கிகள் (Ellaquai Dehati Bank, J&K Grameen Bank) ஒன்றிணைக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர் வங்கி ஸ்பான்சரின் கீழ் செயல்டும் என்றும்,
- கர்நாடகாவில் உள்ள 2 கிராம வங்கிகள் (Karnataka Gramin Bank, Karnataka Vikas Grameena Bank) ஒன்றிணைக்கப்பட்டு கனரா வங்கி ஸ்பான்சரின் கீழ் செயல்டும் என்றும்,
- மத்திய பிரதேசத்தில் உள்ள 2 கிராம வங்கிகள் (Madhya Pradesh Gramin Bank, Madhyanchal Gramin Bank) ஒன்றிணைக்கப்பட்டு பாங்க் ஆப் இந்தியா ஸ்பான்சரின் கீழ் செயல்டும் என்றும்,
- மகாராஷ்டிராவில் உள்ள 2 கிராம வங்கிகள் (Maharashtra Gramin Bank, Vidharbha Konkan Gramin Bank) ஒன்றிணைக்கப்பட்டு பாங்க் ஆப் மகாராஷ்டிரா ஸ்பான்சரின் கீழ் செயல்டும் என்றும்,
- ஒடிசாவில் உள்ள 2 கிராம வங்கிகள் (Odisha Gramya Bank, Utkal Grameen Bank) ஒன்றிணைக்கப்பட்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஸ்பான்சரின் கீழ் செயல்டும் என்றும்,
- ராஜஸ்தானில் உள்ள 2 கிராம வங்கிகள் (Baroda Rajasthan Kshetriya Gramin Bank, Rajasthan Marudhara Gramin Bank) ஒன்றிணைக்கப்பட்டு பாங்க் ஆப் பரோடா வங்கி ஸ்பான்சரின் கீழ் செயல்டும் என்றும்,
- தெலுங்கானாவில் உள்ள 2 கிராம வங்கிகள் (Andhra Pradesh Grameena Vikas Bank (Telangana Part), Telangana Grameena Bank) ஒன்றிணைக்கப்பட்டு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி ஸ்பான்சரின் கீழ் செயல்டும் என்றும்,
- உத்திர பிரதேசத்தில் உள்ள 3 கிராம வங்கிகள் (Aryavart Bank, Baroda UP Bank, Prathama UP Gramin Bank) ஒன்றிணைக்கப்பட்டு பாங்க் ஆப் பரோடா வங்கி ஸ்பான்சரின் கீழ் செயல்டும் என்றும்,
- மேற்கு வங்கத்தில் உள்ள 3 கிராம வங்கிகள் (Bangiya Gramin Vikash Bank, Paschim Banga Gramin Bank, Uttar Banga Kshetriya Gramin Bank ) ஒன்றிணைக்கப்பட்டு பஞ்சாப் நேஷனல் வங்கி ஸ்பான்சரின் கீழ் செயல்டும் என்றும்,
ஓர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலுக்கு அந்தந்த மாநில ஸ்பான்ஸர் வங்கிகள் ஒப்புதல் அளிக்க மத்திய நிதியமைச்சகம் கோரியுள்ளது.
ஒவ்வொரு கிராம வங்கியும் ஒரு ஸ்பான்ஸர் வங்கியின் உதவியுடன் செயல்படும். அப்படி, ஒரு மாநிலத்தில் அதிகம் பயன்பாட்டில், அதிக பரிவர்த்தனை மேற்கொள்ளும் கிராம வங்கியின் கீழ் மற்ற கிராம வங்கிகளை ஒருங்கிணைத்து அந்த பிரதான கிராம வங்கியின் ஸ்பான்சர் வங்கியானது ஒருங்கிணைக்கப்பட்ட கிராம வங்கியின் ஸ்பான்ஸர் வங்கியாக, தொடரும் வண்ணம் இந்த ஒருங்கிணைப்பு பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, இந்த ஒருங்கிணைப்பதில் பிரதான வங்கிகளின் பெயரானது ஒருங்கிணைக்கப்படும் மற்ற கிராம வங்கிகளின் பெயராகவும் மாற்றப்படலாம் என்றும், இந்த அணுகுமுறையானது, மற்ற ஏனைய வங்கி செலவுகளைக் குறைக்கவும், வங்கி தரவுகள் இடம்பெயர்வது மற்றும் கணினி ஒருங்கிணைப்பு செயல்முறையை நெறிப்படுத்தவும் உதவும் எனக் கூறப்படுறது.
RRB-கள் கிராமப்புறங்களின் மேம்பாட்டிற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. உள்ளூர் மக்களுடன் நெருக்கமான பிணைப்பை கொண்டுள்ளன. குறிப்பாக கிராமப்புற விவசாயிகள் மற்றும் அந்த கிராமங்களின் புவியியல் நிலைமைகளை புரிந்துகொண்டு செயலாற்றி வருகின்றன. இந்த தனித்துவமான பண்பை பராமரிக்க, மத்திய நிதி அமைச்சகம் "ஒரு மாநிலம் ஒரு RRB" எனும் கொள்கையை நோக்கி RRB-களை ஒருங்கிணைக்க வேண்டிய நிலையில் உள்ளது. இந்த மறுசீரமைப்பானது RRBகளின் செயல்திறனை மேம்படுத்துவதையும், செயல்பாட்டு செலவுகளை சீரமைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
NABARD (விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி) உடன் இணைந்து, RRB ஒருங்கிணைப்பு முன்னேற்றத்திற்கு ஓர் வழி உருவாக்கப்பட்டுள்ளது. இது நான்காம் கட்ட ஒருங்கிணைப்பு நடவடிக்கை என நிதியமைச்சகம் கூறுகிறது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் நாட்டில் உள்ள RRBகளின் மொத்த எண்ணிக்கை 43-ல் இருந்து 28ஆக குறையும்.