தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Header Logo
Friday, May 23, 2025 | India
Home / வங்கியியல்

மன அழுத்தத்தில் வங்கி ஊழியர்கள்: ஆய்வு முடிவுகள் கூறுவதென்ன?

வங்கி ஊழியர்கள், டார்கெட், பணிச்சுமை, வேலை பறிபோகுமா என்ற பயம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் அதிக அளவு மன அழுத்தத்திற்கு உள்ளாகிறர்கள் என தனியார் செய்தி நிறுவன ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

News Image

Author: Kanal Tamil Desk

Published: November 8, 2024

வேலை செய்யும் இடத்தில் மன அழுத்தம் (Work Pressure) என்பது தற்போது இயல்பான ஒரு விஷயமாகவே மாறிவிட்டது. அதிலும், தற்போதைய காலகட்டத்தில் டார்கெட் வைத்து வேலை செய்யும் ஊழியர்களை போல வங்கியில் வேலை செய்யும் ஊழியர்களும், வரையறுக்கப்பட்ட பணி நேரத்தை காட்டிலும் தினம் தினம் கூடுதல் மணிநேரம் வேலை செய்து, வீட்டுடன் நேரம் செலவிட முடியாமல் இருப்பது, ஒவ்வொரு முறையும் அதிகரிக்கப்படும் டார்கெட் அளவு போன்ற மன அழுத்தத்த சூழலை வங்கி ஊழியர்கள் எதிர்கொண்டு வருகிறார்கள்.

சமீபத்தில் தனியார் செய்தி நிறுவனம் (1 Finance Magazine) நடத்திய சர்வே ஒன்றில், இந்தியாவிலுள்ள வங்கி தொடர்பு மேலாளர்கள் (Relationship Managers) தங்களுடைய வங்கி பணிகளில் ஊழியர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தம் குறித்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டுள்ளனர்.

அதில், எந்தெந்த ரீதியில் வங்கி ஊழியர்கள் மன அழுத்தத்தை (Work Pressure)  எதிர்கொள்கிறார்கள்? ஊழியர்களில் எத்தனை சதவீதம் பேர் மன அழுத்த பிரச்சினையை சந்திக்கிறார்கள்? என்பது குறித்து இந்த ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

இந்த கணக்கெடுப்பில், நாட்டில் உள்ள பல்வேறு வங்கிகளில் இருந்து மொத்தம் 1,655 வங்கி தொடர்பு மேலாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், அவர்கள் கூறிய காரணங்கள் திகைப்பூட்டும் வகையில் அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கணக்கெடுப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தகவலின்படி,

  • 84.3% பேர் வங்கியில் கொடுக்கப்பட்ட  விற்பனை இலக்குகளை (Sales Pressure)  அடைவதில் மிகுந்த மன அழுத்தம் அடைவதாகத் தெரிவித்தனர். கிட்டதட்ட 5இல் 3 ஊழியர்கள் இந்த வகையில் மன அழுத்தத்தை எதிர்கொள்வதாக  கூறியுள்ளனர்.
     
  • 57.56% பேர் விற்பனை இலக்குகளை அடைவதற்காக வங்கி நிதி சேவைகளை பற்றி குளறுபடியான தகவல்களை குறிப்பிட்டு வடிக்கையாளர்களை அந்த சேவையில் இணைய வைக்க வேண்டும் என மேலிடத்திலிருந்து அழுத்தம் கொடுக்கப்படுவதாக கூறியுள்ளனர்.
     
  • 51.52% பேர் கொடுக்கப்பட்ட இலக்குகளை அடைய முடியாமல் போய்விடுமோ, அதனால், தங்கள் வேலை பறிபோகிவிடுமோ என்ற மன அழுத்தத்தை எதிர்கொள்வதாகத் தெரிவித்தனர்.
     
  • 26.83% பேர், தங்கள் செயல்திறன் குறைவாக இருப்பதாக கருதி செயல்திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் (PIP-Performance Improvement Plan) தங்களை இணைத்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

இந்த ஆய்வு நடத்தியது குறித்து  அந்த தனியார் செய்தி நிறுவன தலைமை ஆசிரியர் கூறுகையில், " வங்கி தொடர்பு மேலாளர்கள் சிலர் தங்களுக்கே புரியாத சில குறிப்பிட்ட வங்கிச்சேவை குறித்து வாடிக்கையாளர்களிடம் பேசி விற்க முயலும்போது தான் அதிகமாக மன அழுத்தத்தை எதிர்கொள்கிறார்கள். ஏனென்றால், தெரியாத விஷயங்கள் பற்றி அவர்கள் பேசும்போது தெரிந்த விஷயங்களையும் பதட்டத்தில் சொல்ல மறந்துவிடுகிறார்கள். இதனால் தான்  அவர்கள் அதிகளவில் மன அழுத்தத்தை எதிர்கொள்கிறார்கள்" எனக் கூறினார்.

இந்த கணக்கெடுப்பின் மூலம் வங்கித் துறையில் வேலை செய்யும் ஊழியர்களை நலமாகக் கையாளுவதற்கான அணுகுமுறையை பரிசீலனை செய்ய வேண்டியது எவ்வளவு கட்டாயம் என்பதைத் தெரியப்படுத்தியுள்ளது.

ஊழியர்கள் எதிர்கொள்ளும் மன ரீதியிலான இந்த பிரச்சனைகளை கவனிக்காமல் அப்படியே விட்டுவிட்டால் வங்கி ஊழியர்களின் மன அழுத்தம் மற்றும் வேலை பாதுகாப்பு பற்றிய அச்சங்கள் அதிகரித்து, அவர்களின் பணிகளை  பாதிப்பதுடன் அவர்களுடைய  மன நலம் அதிக அளவில் பாதிக்கக் கூடும் என்று மனநலத்துறை வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:Work PressureBank employeeBank EmployeesOccupational stressBANKMental Health

No comments yet.

Leave a Comment