- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
திருச்சி: AIRRBEA நடத்தும் தற்காலிக ஊழியர்களுக்கான சிறப்பு பொதுக்கூட்டம்
இன்று தமிழ்நாடு கிராம வங்கி ஒர்க்கர்ஸ் யூனியன் (TNGBWU) மற்றும் தமிழ்நாடு கிராம வங்கி ஆபீஸர்ஸ் அசோசியேசன் (TNGBOA) நடத்தும் தற்காலிக ஊழியர்களுக்கான சிறப்பு கூட்டம் திருச்சியில் நடைபெறுகிறது.

Author: Kanal Tamil Desk
Published: November 9, 2024
இந்தியாவில் கிராம வங்கிகள் சேவை ஆரம்பிக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகியதை முன்னிட்டு, பொன்விழா காணும் விழா இந்த ஆண்டு முழுவதும், கிராம வங்கிகள் ஊழியர் சங்கங்கள் சார்பாக தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் கிராம வங்கியில் ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்தும், அது தொடர்பான வழக்குகள், நீதிமன்ற தீர்ப்பின் மூலம் கிடைத்த வெற்றிகள், அடுத்தகட்ட பயணங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஊழியர்களிடத்தில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று (09.11.2024 சனிக்கிழமை) காலை 10.30 மணி அளவில் திருச்சி மாவட்டம் அரியமங்கலம் பகுதியில் ஸ்ரீ சார்லஸ் மஹாலில் கிராம வங்கிகளில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்கள் கலந்து கொள்ளும் சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது.
இந்த சிறப்பு கூட்டத்திற்கு தோழர் லட்சுமி நாராயணன் தலைமை தாங்குகிறார். மேலும், தோழர் அண்டோ கால்பர்ட், தோழர் அறிவுடைநம்பி, தோழர் அஸ்வத், தோழர் கீதா, தோழர் சோலை மாணிக்கம், தோழர் மாதவராஜ், தோழர் சுரேஷ், தோழர் பரிதிராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த சிறப்பு கூட்டம் குறித்து வெளியான அறிவிப்பில் , கிராம வங்கிகளில் அனுமதிக்கப்பட்ட அலுவலர், காசாளர் ஆகிய பணியிடங்களுக்கு மட்டுமே முறையாக ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு நிரந்தர பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். அதற்கு அடுத்து இருக்கும் மெசேஞ்சர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தற்காலிக ஊழியர்களே தொடர்ந்து நியமிக்கப்பட்டு வருகின்றனர். இப்படியாக இந்திய கிராம வங்கிகளில் சுமார் 35 ஆயிரம் தற்காலிக ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இப்படி பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய கிராம வங்கி ஊழியர் சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி சட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி அவ்வப்போது அதில் வெற்றியடைந்தும் வருகின்றனர். ஏற்கனவே, பாண்டியன் கிராம வங்கியில் 35 தற்காலிக பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்பட்டது. அதேபோல, ஆந்திர பிரதேசம் விகாஸ் கிராம வங்கியில் சுமார் 460 தற்காலிக ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளது. இந்த வெற்றிகள் கிராம வங்கி ஊழியர் சங்கங்கள் நடத்திய சட்டப் போராட்டத்தால் கிடைத்தது என்றும், இப்படியான சூழலில் இச்சங்கங்கள் மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ள முயற்சிகளை ஊழியர்களுக்கு விளக்கிடவும், அனைவருக்கும் பணி நிரந்தரம் எனும் இலக்கை அடைய உதவும் பயணம் குறித்த ஒரு சிறப்பு கூட்டமானது இன்று நடைபெறுகிறது என்றும் கிராம வங்கி ஊழியர் சங்கங்கள் வெளியிட்ட சிறப்பு கூட்டம் பற்றிய அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.