- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
கோவையில் ஆர்ப்பாட்டத்தை அறிவித்த யூகோ வங்கி அதிகாரிகள் சங்கம் : காரணம் என்ன?
யூகோ வங்கி அதிகாரிகள் சங்கம் (AUCBO) சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், நவம்பர் 13, 2024ஆம் தேதியன்று கோயம்புத்தூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.

Author: Kanal Tamil Desk
Published: November 12, 2024
யூகோ வங்கி அதிகாரிகள் சங்கத்தினர் (AUCBO) நவம்பர் 13 (புதன்கிழமை) அன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இந்த போராட்டத்திற்கான முக்கிய காரணமாக வங்கி வழங்கும் பணிசுமைகள், ஊழியர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை புரிந்துகொள்ளாமல் அவர்களுக்கு இடமாற்றங்கள் வழங்குதல் உள்ளிட்டவைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து AUCBO சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், பெண் ஊழியர்கள் சொந்த ஊரில் இருந்து 200 கி.மீ முதல் 400 கி.மீ வரையிலான தூரத்திற்கு இடமாற்றம் உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும், பெண் ஊழியர்களின் குழந்தைகள் படித்துக்கொண்டு இருப்பதால் இப்படியான திடீர் இடமாற்றம் செய்வதால், அவர்களுடைய கல்வி பாதிப்படைகிறது என்றும் கூறப்படுகிறது.
இப்படி இடமாற்றம் செய்தால் வேலை செய்யும் பெண் ஊழியர்கள் அவர்களது குழந்தைகளையும் குடும்பத்தையும் பார்த்துக்கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வார்கள் என்றும், இதனை வங்கி நிர்வாகம் சிந்தித்துப் பார்க்காமல் தொடர் இடமாற்றம் உத்தரவுகளை பிறப்பிப்பதாகவும் கூறப்படுகிறது.
அதேப்போல, மாற்றுத்திறனாளி வங்கி ஊழியர்கள் பலரையும் நிர்வாகம் இடமாற்றம் செய்துள்ளது எனவும், இந்த இடமாற்ற உத்தரவுகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும், மேற்கண்ட காரணங்களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது எனவும் யூகோ வங்கி அதிகாரிகள் சங்கம் (AUCBO) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போராட்ட குழுவிலிருந்து
வங்கி நிர்வாகத்தின் தற்போதைய நடைமுறைகள் சமத்துவம் மற்றும் நியாயத்தை மீறி வருவதாக ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கும் செந்தில் குமார் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், "வங்கி உயர் அதிகாரிகள் தங்களுடைய கிளைகளிலிருந்து அவர்கள் விரும்பும் இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
குறிப்பாக அவர்களுக்கான புதிய பணிகளையும் உருவாக்கியுள்ளனர்." என்றும் செந்தில் குமார் கனலிடம் கூறினார், ”இந்த நடவடிக்கைகள் உயர் அதிகாரிகளின் விருப்பமான வேலைவாய்ப்புகளாக உருவாக்கப்படுகின்றன” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எப்போது ஆர்ப்பாட்டம்?
வரும் நவம்பர் 13 -ஆம் தேதி கோயம்புத்தூர் UCO வங்கி மண்டல அலுவலகம் முன்பு காலை 9:00 மணிக்கு ஆர்ப்பாட்டம் தொடங்கங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போராட்டத்திற்கான கோரிக்கைகளை வங்கி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருந்தால், அடுத்தடுத்த போராட்டங்கள் இன்னும் வலுவாக இருக்கும் என்று AUCBO சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.