தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Logo

Friday, Apr 18, 2025 | India

Home / நிதி

சிறுசேமிப்பு திட்டங்கள் : அஞ்சலக சேமிப்பு திட்டம் முதல் மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் வரை

வருங்கால வைப்பு நிதி (PPF) சேமிப்புத் திட்டம் போல அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் மற்ற சில சேமிப்பு திட்டங்கள் குறித்தும் இந்த செய்திக் குறிப்பில் காணலாம்.

News Image

Author: Kanal Tamil Desk

Published: November 13, 2024

நிரந்தர வைப்பு நிதி திட்டம் (Fixed Deposit), மியூச்சுவல் பண்ட், SIP போன்ற முதலீடுகள் தவிர்த்து பாதுகாப்பான நீண்ட கால அரசு சேமிப்பு திட்டங்கள் குறித்து பார்க்கையில், பெரும்பாலானோர் மனதில் தோன்றும் முதல் திட்டமாக இருப்பது வருங்கால வைப்பு நிதி எனும் PPF (Public Provident Fund) திட்டமாகும்.

இந்த திட்டத்தின் கீழ் ஒருவரின் மாதாந்திர சேமிப்புகளுக்கு வருடத்திற்கு 7.1 சதவிகிதம் வட்டிஅளிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் மாதம் ரூ.500 முதல் வருடத்திற்கு ரூ.1.5 லட்சம் வரையில் இதில் முதலீடு செய்து கொள்ளலாம். நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தவிர்த்து, தனி நபரும் இந்த திட்டத்தின் கீழ் சேர்ந்துகொள்ளலாம்.

இந்த PPF முதலீடு கணக்கு துவங்கப்பட்டு 5 ஆண்டுகள் கழித்து (கணக்கு திறந்த ஆண்டு தவிர்த்து) ஒருவர்தான் சேமித்த பணத்தை PPF விதிமுறையின் கீழ் எடுத்துக்கொள்ளலாம்.

மேற்கண்ட PPF சேமிப்பு திட்டம் போலவே, அஞ்சல் துறை சிறு சேமிப்பு திட்டம், தொடர் வைப்பு திட்டம் (NSRD - National Savings Recurring Deposit), தேசிய சேமிப்பு நேர வைப்பு திட்டம் (NSTD - National Savings Time Deposit) , கிசான் விகாஸ் சேமிப்பு திட்டம் (Kisan Vikas Patra), மகிளா சம்மன் சேமிப்பு திட்டம் (Mahila Samman Savings Certificate), மாத வருமான கணக்கு (National Savings monthly income account), மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (Senior Citizen Savings Scheme), சுகன்யா சம்ரித்தி கணக்கு (Sukanya Samriddhi Account) ஆகிய சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அத்திட்டங்கள் தரும் வட்டி விகிதம் பற்றியும், சேமிப்பு தொகை பற்றியும் இந்த செய்திக் குறிப்பில் காணலாம்.

அஞ்சல் சேமிப்பு கணக்கு : 

இந்த சேமிப்பு திட்டத்தில் வருடத்திற்கு 4 சதவிகித வட்டி வழங்கப்படுகிறது. இந்த கணக்கைத் குறைந்தபட்சம் ரூ.500 முதல் சேமிக்க தொடங்கலாம்.

தொடர் வைப்பு திட்டம் (NSRD - National Savings Recurring Deposit) :

இத்திட்டத்தின் கீழ் மாதம் 6.7 சதவிகித வட்டி வழங்கப்படுகிறது. மாதாந்திர சேமிப்புத் தொகையாக குறைந்தபட்சம் ரூ.100 முதல் சேமிப்பை துவங்கலாம்.

தேசிய சேமிப்பு நேர வைப்பு திட்டம் (NSTD - National Savings Time Deposit) : குறைந்தபட்சம் ரூ.1,000 முதலீடு செய்து நேர வைப்பு நிதி  திட்டத்தில் ஒருவர் தங்களுடைய கணக்கைத் துவங்கலாம்.

1 ஆண்டு கால நேர வைப்பு நிதி : ஆண்டுக்கு 6.9 சதவீத வட்டி வழங்குகிறது.

2 வருட கால நேர வைப்பு நிதி : ஆண்டுக்கு 7 சதவீத வட்டி வழங்குகிறது.

3 ஆண்டு கால நேர வைப்பு நிதி : ஆண்டுக்கு 7.1 சதவீத வட்டி வழங்குகிறது.

5 ஆண்டு கால வைப்பு: இது ஆண்டுக்கு 7.5 சதவீதத்தை வழங்குகிறது.

தேசிய சேமிப்பு மாத வருமான கணக்கு : 

இந்த சேமிப்பு திட்டம் மூலம் சேமிப்பவர்களுக்கு ஆண்டுக்கு 7.4 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. மாதந்தோறும் குறைந்தபட்சம் ரூ.1,000 முதலீடு செய்து சேமிப்பை தொடங்கலாம்.

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் :

இந்த சேமிப்பு திட்டம் மூலம் ஆண்டுக்கு 8.2 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. ஒருவர் ரூ.1,000 முதல் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை டெபாசிட் செய்து கொள்ளலாம். 

சுகன்யா சம்ரித்தி கணக்கு :

இந்த சேமிப்பு திட்டம் மூலம் ஆண்டுக்கு 8.2 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. மேலும் ஒருவர் ரூ.250 முதல் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை சேமித்து கொள்ளலாம்.

தேசிய சேமிப்பு NSC ( National Savings Certificate) :

இந்த சேமிப்பு திட்டம் மூலம் ஆண்டுக்கு 7.7 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. ஒருவர் ரூ.1000 முதல் சேமிக்க ஆரம்பிக்கலாம். இதற்கு அதிகபட்ச உச்சவரம்பு இல்லை.

கிசான் விகாஸ் சேமிப்பு திட்டம் (Kisan Vikas Patra) :

இந்த திட்டத்தின் கீழ் ஆண்டிற்கு 7.5 சதவிகித வட்டி வழங்ப்படுகிறது. குறைந்தபட்ச முதலீடு ரூ.1,000 முதல் சேமிக்க தொடங்கலாம். இதற்கு அதிகபட்ச முதலீடு உச்சவரம்பு இல்லை.

மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் (Mahila Samman Savings Certificate):

இந்த திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 7.5 சதவிகித வட்டி வழங்கப்படுகிறது. இதில் ரூ.1,000 முதல் ரூ.2 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.

Tags:PPFSavingssavings