- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
ரூ.5 ஆயிரம் முதலீடு ரூ.5 கோடியாக கிடைக்குமா? SIP திட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!
மாதாந்திர சேமிப்பு திட்டம் (SIP) மூலம் ரூ.5 ஆயிரம் முதல் முதலீடு தொடங்கி 25 வருடங்களில் ரூ.5 கோடி வரை சேமிப்பது எப்படி என்றும் அதற்கான வழிமுறைகள் பற்றியும் இச்செய்தி குறிப்பில் காணலாம்

Author: Kanal Tamil Desk
Published: November 18, 2024
தற்காலத்து இளைஞர்கள் மத்தியில் சேமிப்பு பழக்கம் என்பது அதிகரித்து வருகிறது. குறிப்பாக எதிர்கால நிதி பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வோடு, புதிதாக பணிக்கு சேரும் இளைஞர்கள், ஆரம்பம் முதலே தங்கள் சேமிப்புகளை தொடங்கி விடுகின்றனர் என நிதி ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
முதற்கட்டமாக நிதி சேமிப்புகளில் அவர்களை அதிகம் ஈர்ப்பது, குறைவான ரிஸ்க் கொண்ட பாதுகாப்பான நீண்ட கால முதலீடுகளே ஆகும். அதில், முக்கிய பங்கு வகிப்பது, மியூச்சுவல் ஃபன்ட் (Mutual Fund) முதலீடுகள் வழங்கும் மாதாந்திர சேமிப்பு திட்டமான SIP (Systematic Investment Plan) திட்டமாகும். இந்த திட்டத்தில் மாதம் குறைந்தது ரூ.500 முதலே நமது முதலீடுகளை துவங்கலாம்.
SIP என்றால் என்ன?
SIP என்பது, மியூச்சுவல் ஃபண்ட் பங்குகளில் ஒரே நேரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல், பல்வேறு பகுதிகளாக பிரித்து, திட்டமிட்ட இடைவெளியில் சீரான முறையில் முதலீடு செய்ய உதவும் முறை தான் இந்த SIP முதலீடு திட்டமாகும்.
SIP மூலம் நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை மாதம், வாரம் என்ற கால இடைவெளி முறையில் நீண்டகால முதலீடுகளை செய்யலாம். இதன் முக்கிய அம்சம் என்னவென்றால், சந்தையின் ஏற்றம் இறக்கம் பற்றி கவலைபட தேவையில்லை. இந்த திட்டம் தொடங்கும் போதே உங்கள் வருடாந்திர வட்டி, உங்களுக்கு கிடைக்கும் முதிர்வு தொகை பற்றிய தெளிவான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுவிடும்.
மாதம் ரூ.5 ஆயிரம் முதலீடு ரூ.5 கோடியாக் மாறுமா?
ஆண்டு வட்டி 15% அளிக்கும் SIP திட்டத்தில், 25 ஆண்டுகளுக்கு, மாதம் ரூ.5 ஆயிரம் என முதலீடு செய்து வந்தால், SIP கணக்கீட்டின் படி உங்களுக்கு ரூ.1.49 கோடி வரை வட்டி தொகையும், மொத்த முதிர்வு தொகையாக ரூ.1.64 கோடி வரை கிடைக்கும் என கூறப்படுகிறது.
அதேநேரம், ஆண்டு வட்டி 15%, வருடாந்த்திர முதலீடு உயர்வு (Annual Step Up) 15% எனும் வீதத்தில் ரூ.5 ஆயிரத்தில் இருந்து தொடங்கி, 25 வருடம் முதலீடு செய்தால் மொத்த முதிர்வு தொகையாக ரூ.5.22 கோடி கிடைக்கும் என கூறப்படுகிறது.
Step Up என்பது ஆண்டு தோறும் உங்கள் மாதாந்திர முதலீட்டை குறிப்பிட்ட சதவீதம் உயர்த்த வேண்டும் என்பதாகும்.
இதுபோல் பல்வேறு SIP சேமிப்பு திட்டங்களில் உங்களுக்கு விருப்பமான, பாதுகாப்பான திட்டங்களை முறையான நிதி ஆலோசனைகள் மூலம் தேர்வு செய்து அதனை முறையாக பின்பற்றி உங்கள் முதலீடை இப்போதே துவங்கலாம்.
SIP செயல்படும் முறை :
நீங்கள் SIP Step Up முதலீடு எனும் இந்த திட்டத்தில் முதலீட்டை மாதம் ரூ. 5 ஆயிரம் எனத் தொடங்கினால், அடுத்த ஆண்டில் அதை 15% அதிகரிக்க வேண்டும். அதாவது, இது ரூ 5,000இல் இருந்து ரூ.5,750ஆக உயர்த்த வேண்டும். அதன் பிறகு ரூ.6,612.5 என தொடர்ந்து ஆண்டு தோறும் அதிகரிக்கவேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் உங்களின் முதலீட்டு தொகை உங்கள் வருமானத்திற்கேற்ப உயர்த்திட வேண்டும். இதனால், உங்களுடைய முதலீடு அளவும் அதிகமாகும். இந்த முறையில் முதலீடு செய்தால், 25 ஆண்டுகளில் ரூ.5.22 கோடி வரை சேமிக்க முடியும்.
அதேசமயம், இப்படியாக ஆண்டு தோறும் முதலீட்டை உயர்த்த முடியவில்லை என்றாலும், மாதம் ரூ.5 ஆயிரம் எனும் நிலையான தொகையை முதலீடு செய்தாலே 15% ஆண்டு வட்டியில் 25 வருடங்கள் கழித்து ரூ.1.64 கோடி முதிர்வு தொகை கிடைக்கும்.
இந்த முதலீடு திட்டம் குறித்த தகவல்கள் அனைத்தும் தனியார் நிதி நிறுவன SIP கால்குலேட்டர் மூலம் மேற்கொள்ளப்பட்டது. எனவே முதலீடு செய்ய விரும்புபவர்கள் உரிய நிதி ஆலோசனை பெற்று உங்கள் முதலீடுகளை தொடங்கலாம்.