தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Header Logo
Wednesday, May 14, 2025 | India
Home / நிதி

சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.5 கோடி கடனுதவியா? பொதுத்துறை வங்கிகள் நிலைப்பாடு என்ன?

நாட்டில் செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கிகள், சிறுகுறு நிறுவனங்களுக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.5 கோடி வரையில் கடனுதவி வழங்கும் வகையில் புதிய நெறிமுறைகளை அறிமுகம் செய்ய உள்ளன.

News Image

Author: Kanal Tamil Desk

Published: November 21, 2024

நாட்டின் பொருளாதாரத்தில் சிறுகுறு வர்த்தகர்களின் (MSME - Micro, Small, and Medium Enterprises) பங்கு மிக பெரியது. நாட்டின் மொத்த GDPயில் 30% சதவீதம் அளவுக்கு MSME வர்த்தகர்களின் பங்கு இருக்கிறது. அதேநேரம் நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் சுமார் 50% இவை பங்காற்றுகின்றன.

இவ்வாறு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு முக்கிய பங்காற்றும் MSME தொழில் முனைவோர்கள் பலருக்கு, தங்கள் தொழிலை மேம்படுத்த உரிய கடனுதவி கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.

சிறுகுறு தொழில் நிறுவனங்கள் என்பதால் கணக்கு வழக்குகள் அதிகளவில் அல்லது முறையாக பின்பற்றுபடுவதில் சிரமங்கள் ஏற்படும். இதனால் வங்கிகளில் கடன் பெறுவதில் சிக்கல்கள் ஏற்படும். மேலும், புதிய தொழில்நுட்பங்களை உட்புகுத்துவதிலும் சிறுகுறு வர்த்தக நிறுவனங்கள் சிரமங்களை சந்திக்கின்றன. 

இவ்வாறு, தங்கள் தொழிலை மேம்படுத்த கடனுதவி பெரும் சிரமங்களை நீக்கும் பொருட்டு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், MSME தொழில் நிறுவனங்களுக்கு கடன் உதவி வழங்கும் நெறிமுறைகளை எளிதாக்க வேண்டும் என பொதுத்துறை வங்கிகளுக்கு முன்னர் வலியுறுத்தி இருந்தார்.

அதன் பெயரில், MSME நிறுவனங்கள் எளிதாக கடனுதவி பெரும் வகையில், பொதுத்துறை வங்கிகள் புதிய  கடன் கொள்கைகளை நவம்பர் மாத இறுதிக்குள் அறிமுகம் செய்ய உள்ளன. 

  • புதிய கடனுதவி வழங்கும் நெறிமுறைகளில், பாரம்பரியமாக பின்பற்றப்படும் முறைகளை தவிர்த்து, MSME முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு கடனுதவி வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. இதனால், முறையான கணக்கியல் முறைகள் இல்லாத MSME நிறுவனங்களும் கடனுதவி பெரும் சூழல் உருவாகும்.

வங்கிகள் விவரம் :

  • நவம்பர் 25இல் பாங்க் ஆஃப் இந்தியா (BoI), பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி, கனரா வங்கி, இந்தியன் வங்கி ஆகியவை புதிய கடன் வழங்கும் நெறிமுறைகளை அறிமுகம் செய்ய உள்ளன. 
  • நவம்பர் 30ஆம் தேதி பாங்க் ஆஃப் பரோடா, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, யூகோ வங்கி, பஞ்சாப் நேஷனல் பாங்க் என மீதம் உள்ள பொதுத்துறை வங்கிகள் புதிய கடன் வழங்கும் நெறிமுறைகளை அறிமுகம் செய்ய உள்ளன.  

எவ்வளவு கடன் தொகை?

  • இந்தியன் வங்கி மற்றும் பாரத் ஸ்டேட் வங்கி (SBI) ஆகிய பொதுத்துறை வங்கிகள் மூலம் ரூ.5 கோடி வரை கடன் வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • பாங்க் ஆஃப் பரோடா, கனரா வங்கி, பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா உட்பட மீதம் உள்ள PSBகள் ரூ.25 லட்சம் வரை கடன் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.
  •  பாங்க் ஆஃப் இந்தியா ரூ.1 கோடி வரை கடன் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட கடன் உத்தரவாதத் திட்டம் விரைவில் மத்திய அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, ஒப்புதல் கிடைத்த உடன், MSME அமைச்சகம் மற்றும் வங்கிகள் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சக வட்டாரம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags:msmeFinance MinistryPSBPublic Sector Banks

No comments yet.

Leave a Comment