- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
எதில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம்? பொருளாதார வல்லுநர்கள் கூறுவதென்ன?
தங்கம், ரியல் எஸ்டேட், பங்குச்சந்தை ஆகியன நமது நாட்டினரின் முதலீட்டு தேர்வில் முதன்மையானதாக இருக்கிறது. அதில் எந்தளவு நன்மைகள் உள்ளதோ , அதே அளவில் கவனிக்க தக்க சில தீமைகளும் உள்ளன. அவை குறித்து இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

Author: Kanal Tamil Desk
Published: November 21, 2024
தனி மனித பொருளாதாரத்தை மேம்படுத்த முதலீடு செய்வதன் முக்கியத்துவம் அதிகரித்து வரும் அதே சுழலில், தவறான முதலீடுகளை தேர்வு செய்து இழப்பை சந்திக்கும் நிலையும், மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. அதிகம் லாபம் பெற எந்த துறையை தேர்வு செய்யலாம், பாதுகாப்பான முதலீடு எது என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பொருளாதார நிபுணர்கள் மற்றும் பொருளாதார மேம்பாடுகள் குறித்த ஆய்வு கட்டுரைகளின் தரவு அடிப்படையில், இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
தங்கத்தில் முதலீட்டின் நன்மைகள்
பாதுகாப்பு: பொதுவாகவே பெரும்பாலான சாமானிய மக்கள் தங்களுடைய பணத்தை தங்கத்தில் தான் அதிகளவு முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுவார்கள். ஏனென்றால், பொருளாதார ரீதியாக நாம் பாதிக்கப்பட்டால் நிச்சயமாக தங்க முதலீடு என்பது என்பது அந்த பாதிப்பை சற்று தணிக்க உதவும். பொருளாதார சரிவுகள், பணவீக்கம் அல்லது பங்கு சந்தை வீழ்ச்சிகள் போன்ற சூழல்களில் தங்கம் எப்போதும் பாதுகாப்பான முதலீட்டாக கருதப்படுகிறது என்பதால் தங்கம் முதலீடு என்பது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
பணவீக்கம் எதிர்ப்பு: பணவீக்கம் அல்லது தங்கம் விலை உயர்வின் போது நாம் தங்கத்தில் முதலீடு செய்தோம் என்றால் அந்த சமயம் தங்கத்தின் மதிப்பு அதிகரிக்கும். இது பணம் அல்லது பங்குகள் போன்ற மாறும் முதலீடுகளுடன் ஒப்பிடுகையில், முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பான முதலீடாக இருந்து வருகிறது.
ஆபத்துகள் குறைவு : பங்கு சந்தைகளில் முதலீடுகளை ஒப்பீடு செய்யும் போது தங்க முதலீடு என்பது ஆபத்துகள் குறைவானதாக உள்ளது.
தங்கத்தில் முதலீட்டின் தீமைகள்
வருமானம் இல்லாமை: தங்கம் முதலீடானது எந்தவித வட்டி வருமானத்தையும் உருவாக்குவதில்லை. பங்கு சந்தை முதலீட்டை ஒப்பீடு செய்கையில், மிக குறைந்த நேரடி வருமானமே இதில் கிடைக்கும்.
சேமிப்பு செலவுகள் : தங்கத்தை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான செலவுகள் அதிகமாக இருக்கின்றன (எ.கா., வங்கி லாக்கர் கட்டணம்). இந்த செலவுகள் முதலீட்டாளர்களுக்கு கூடுதல் சுமையாயாக பார்க்கப்படுகிறது.
பொருளாதார வளர்ச்சியைத் தடுக்கலாம்: தங்கத்தில் அதிக முதலீடு செய்வதால், பங்கு சந்தைகள் அல்லது தொழில்துறை வளர்ச்சிக்கு தேவையான முதலீடுகளுக்கு அது இடையூறாக அமையும். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கக்கூடும்.
தங்கம் விலை மாற்றம் மற்றும் சந்தை நிலவரங்களின் அடிப்படையில், வருடாந்திர பல்வேறு முதலீடுகளில் தங்க முதலீடு என்பது 10-12% என்ற அளவில் உள்ளது. எனவே, முதலீட்டாளர்கள் தங்களின் நிதி இலக்குகள் மற்றும் தங்களுடைய தேவைகளின் அடிப்படையில், தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்யலாம்.
தற்போதைய உலகளாவிய சூழல் மற்றும் சந்தையின் நிலவரத்தைப் பொறுத்து, தங்கத்தில் முதலீடு செய்ய இது ஒரு சிறந்த நேரம் என ஜெர்மினேட் இன்வெஸ்டர் சர்வீசஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சந்தோஷ் ஜோசப் தெரிவித்துள்ளார்.
ரியல் எஸ்டேட் முதலீடு :
நன்மைகள்:
- நிலையான வருமானம்: நிலத்தில் முதலீடு செய்வதன் மூலம், அந்த பகுதிக்கு ஏற்ற வகையில் வீடுகள் அல்லது கடைகள் அமைத்து அதனை கொண்டு வாடகை மூலம் நிலையான வருமானத்தை பெற முடியும். இது காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் பாதுகாப்பான வருமான வழியாக பார்க்கப்படுகிறது.
- பாதுகாப்பான முதலீடு : நிலம் மற்றும் வீடு வாங்குவது, நீண்ட காலத்திற்கான ஒரு பாதுகாப்பான சொத்துக்களை உருவாக்கிட உதவும்.
- முதலீட்டின் மதிப்பு உயர்வு: நகரப்புற வளர்ச்சியானது நமது நிலத்தின் மதிப்பு அதிகரிப்பதற்கு வழிவகுக்கின்றன. இதன் மூலம் நமது சிறிய முதலீடு அதிக வருமானத்தை ஈட்ட வழிவகை செய்கின்றன.
தீமைகள்:
- பொதுவான செலவுகள்: நிலம் வாங்குவது மற்றும் அதன் பராமரிப்பு செலவுகள் (பத்திரங்கள், வாடகை வசூல், பாதுகாப்பு செலவுகள்) உள்ளன. இதனை காரணம் கூறியும் சிலர் நிலத்தில் முதலீடு செய்ய தயக்கம் காட்டுகிறார்கள்.
- சூட்சும நிலவரம்: பொதுவாகவே நாம் பெரிய அளவில் முதலீடு செய்து தவறான நிலத்தை வாங்குகிறோம் என்றால் பருவமழை போன்று எதிர்பாராத சூழ்நிலைகளின் அதன் தாக்கம் அதிகரித்தால், நாம் முதலீடு செய்து நிலத்தை வாங்கிய தொகையை விட நிலத்தின் மதிப்பு குறைய வாய்ப்புள்ளது.
- நிலம் மதிப்பின் மாறுபாடு: ரியல் எஸ்டேட் மார்க்கெட்டின் நிலவரம் குறிப்பிட்ட காலங்களில் மாறுபடுகிறது. சரியான நிலத்தை தேர்வு செய்யாதது அல்லது தவறான இடத்தில் முதலீடு செய்வது போன்றவை பொருளாதார நஷ்டத்திற்கு வழிவகுத்துவிடும்.
சுருக்கமாக, சொல்லவேண்டும் என்றால் ரியல் எஸ்டேட் முதலீட்டின் நன்மை மற்றும் தீமைகளானது, அந்த நிலம் அமைந்துள்ள பகுதி, அதன் பராமரிப்பு மற்றும் துவக்க முதலீடு ஆகியவற்றின் அடிப்படையில் மாறுபடுகின்றன. எனவே, இந்த விஷயங்களை புரிந்துகொண்டு உங்கள் முதலீடுகளை நீங்கள் உங்கள் பாதுகாப்பான முதலீடுகளை செய்யலாம்.
பங்குச் சந்தை முதலீடு :
நன்மைகள்:
- உயர்ந்த வருமான வாய்ப்புகள்: பங்குச் சந்தையில் நீண்ட கால அளவில் முதலீடு செய்தால் அதிகமான வருமானம் ஈட்ட முடியும் என்பது முதலீடு செய்பவர்களுடைய எண்ணமாக இருந்து வருகிறது. நீங்கள் தேர்வு செய்யும் பங்குகளின் மார்க்கெட் மதிப்பு உயர்வால் முதலீட்டாளர்களுக்கு பெரிய லாபத்தை அவை தரலாம்.
- பல்வேறு முதலீடு விருப்பங்கள்: பங்குச் சந்தையில் பல்வேறு துறைகளின் கீழ் இயங்கும் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்ய முடியும். இதனால், முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை பலவகையாக விரிவாக்கி, ஆபத்துகளைக் குறைக்க முடியும்.
- நிறுவன வளர்ச்சிக்கு உதவும்: நாம் குறிப்பிட்ட நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதன் மூலம், அந்த நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவி செய்கிறோம் என்றே அர்த்தம், மேலும், அந்த நிறுவனங்கள் லாபம் தருகையில், நம்மால் நமது முதலீடு மூலம் லாபத்தை ஈட்டிக்கொள்ள முடியும்.
- ஏற்கனவே நிலைநாட்டப்பட்ட சந்தை: பங்குச் சந்தை என்பது அரசுத்துறை மற்றும் மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் மத்திய அரசின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருவதால், இது ஒரு நம்பகமான முதலீடு வழி ஆக பார்க்கப்படுகிறது.
தீமைகள் :
சந்தை அதிர்வுகள்: பங்குச் சந்தை எப்போது ஏறும், எப்போது இறங்கும் என்பதற்கான எந்த முன்னெச்சரிக்கையும் நமக்கு தெரிவதில்லை. எப்போது பங்கு சந்தை சரிவை காணும் என்பது தெரியாத காரணம் தான், பங்குசந்தை முதலீடு என்பது ரிஸ்க் அதிகமாக இருக்கும் முதலீடாக இருக்கிறது.
நிறுவன ரிஸ்க்குகள்: தனிப்பட்ட நிறுவனங்களின் முக்கிய முடிவுகள் அந்நிறுவன சரிவுக்கு காரணமாக அமையலாம். அதன் பின்விளைவாக முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டத்தை எதிர்கொள்ள நேரிடலாம்.
குறுகிய கால அவகாசம்: பங்குகளில் முதலீடு செய்து, குறுகிய காலத்தில் வருமானத்தை ஈட்ட நினைத்தால் அதன் மூலம், பெரிய நஷ்டம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
பங்குச் சந்தையின் மூலம் அதிக வருமானம் கிடைக்கலாம், ஆனால் அதே நேரத்தில் அது பெரும் ஆபத்தையும் கொண்டுள்ளது. எனவே, முதலீட்டாளர்கள் தங்கள் நிதி நிலையை கருத்தில் கொண்டு உரிய நிதி ஆலோசகர்களின் அறிவுரைகளை பெற்று தங்களுக்கு ஏற்றபடி, பங்குச் சந்தையின் நிலவரம் அறிந்து முதலீடு செய்ய வேண்டும்.