தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Logo

Saturday, Apr 19, 2025 | India

Home / நிதி

தனிநபர் கடன் வாங்க போறீங்களா? இந்த கட்டணங்களை கவனத்தில் கொள்ளுங்கள்

தனிநபர் கடன் எனும் Personal Loan வாங்கும் போது விதிக்கப்படும் நேரடி மற்றும் மறைமுக கட்டணங்கள், தேவையற்ற அபராதங்கள் உள்ளிட்ட விவரங்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம்…

News Image

Author: Kanal Tamil Desk

Published: November 22, 2024

விவசாயம், புதிய தொழில் தொடக்கம், தொழில் விரிவாக்கம், வீட்டு கட்டுமானம், வீடு நிலம் வாங்குவதற்கு என பல்வேறு தேவைகளுக்கு பெரும்பாலான மக்கள் கடன் வாங்குகின்றனர். இதில் பெரும்பாலான கடன்கள் பாதுகாப்பான கடன்களே ஆகும்.

இதில், பாதுகாப்பற்ற வகை என பிரிக்கப்பட்டு தனி நபர்களுக்கு வழங்கப்படும் கடன்களே Personal Loan எனும் தனிநபர் கடன்களாகும். வீடு கட்டுவதற்கு கடன் வாங்கும்போது நிலம் ஒரு அடமானமாக ஏற்றுக்கொள்ளப்படும். நகை கடன்களுக்கு நகை அடமானம் வைத்துக்கொண்டு கடன் தரப்படுகிறது. 

ஆனால், தனிநபர் கடன் என்பது, ஒருவரது சிபில் மதிப்பெண் (CIBIL Score) கொண்டு வழங்கப்படுகிறது. இதில், அடமானமாக எதுவும் இருப்பதில்லை. ஒருவரது சிபில் மதிப்பெண், அவரது வேலை, வங்கிகணக்கு வரவு செலவு விவரங்கள் இதனை கருத்தில் கொண்டு கொடுக்கப்படுகிறது. அதனால், இதற்கு வட்டி அதிகமாக விதிக்கப்படுகிறது. தனிநபர் கடன்கள், UnSecured Loan என வகைப்படுத்தப்படுகிறது.  

ஒருவர் தனது (அல்லது குடும்பத்தினர்) எதிர்பாரா மருத்துவ செலவு, வீட்டு விஷேசங்களுக்கான செலவு உள்ளிட்ட தனிப்பட்ட நிதி தேவைக்காக வங்கி அல்லது நிதி நிறுவனத்திடம் இருந்து தனிநபர் கடன்களை கோருகிறார்.  

இவ்வாறு தனிநபர் கடன் கோரிக்கையின் போது, செயல்பாட்டு கட்டணம், ஆவண கட்டணம், சரிபார்ப்பு கட்டணம் என பல்வேறு வகையில் மறைமுக அல்லது நேரடி கட்டனங்கள் வசூல் செய்யப்படுகின்றன. கடன் வழங்குகையில் வசூல் செய்யப்படும் பல்வேறு கட்டணங்கள் குறித்து கிழே காணலாம்.  

செயல்பாட்டு கட்டணம் (Processing Fees) : 

இது ஒருவரது கடனை வழங்குவதற்கு வங்கிகளால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கான கட்டண தொகையாகும். இது ஒவ்வொரு வங்கி அல்லது நிதி நிறுவனத்தை பொறுத்து 0.5% முதல் 2.5% வரை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த கட்டணம் கடன் வழங்குவதற்கு முன்கூட்டியே வசூல் செய்யப்படுகிறது.  

சரிபார்ப்பு கட்டணம் (Verification Charges) : 

கடன் வழங்கும் நிறுவனம், ஒருவருக்கு கடன் வழங்கலாமா வேண்டாமா என்பதை ஆய்வு செய்ய பெரும்பாலும் மூன்றாம் தரப்பு நிதி அமைப்பையே அணுகும். அந்த அமைப்பு தான், ஒருவரது சிபில் மதிப்பெண், அவர் முன்பு வாங்கிய கடன் விவரம், அதனை முறையாக செலுத்தி இருக்கிறாரா? இப்போது எந்த முகவரியில் வசிக்கிறார் என்பது வரையில் விசாரித்து கூறும். இதற்கான சரிபார்ப்பு கட்டணமும், கடன் தேவைப்படுவோரிடம் முன்பே வசூல் செய்யப்பட்டுவிடும்.  

 GST வரி : இது பொதுவாக ஒருவர் கடன் வாங்கும் அளவை பொறுத்து வரி விதிக்கப்படும். நிதி நிறுவனம் கடன் வழங்கும் போது இந்த தொகை வசூல் செய்யப்படும். 

அபராத தொகை : 

வங்கியின் மறைமுக கட்டணம் என இதனை கூறலாம். தவணை தொகை செலுத்த தவறினால் குறிப்பிட்ட தொகையை அபராதமாக வசூல் செய்வார்கள். அந்த தொகை எவ்வளவு என்பது ஒவ்வொரு நிதி நிறுவனத்தை பொறுத்தது.  

முன்கூட்டியே கடன் அடைக்கும் வழிமுறை : 

Preclose எனப்படும் ஒருவர் தனது கடனை முன்கூட்டியே அடைக்கும் வழிமுறைக்கு குறிப்பிட்ட நிதி நிறுவனங்கள் அபராத கட்டணம் வசூல் செய்வார்கள். அதாவது, மாத தவணை வழிமுறையை முறித்துக்கொள்வதற்கான கட்டணமாக இது வசூல் செய்யப்படுகிறது.  

அதே போல காலம் தாழ்த்தி கடன் தொகையை செலுத்தினாலும் அபராத கட்டணம் வசூல் செய்யப்படும்.  

ஆவண கட்டணம் : 

இதுவும் கிட்டத்தட்ட செயல்பாட்டு கட்டணம் தான். செயல்பாட்டின் போது பயன்படுத்தப்படும் ஆவணங்கள், நகல்கள் போன்ற காகித பயன்பாட்டு செலவு. இது கடன் தொகையை ஒப்பீடு செய்தால் மிகக்குறைவாகவே இருக்கும். 

கவனிக்க வேண்டியவை : 

  • நிதி நிறுவனம் குறிப்பிட்ட தேதியில் தவணை தொகையை (EMI) தவறாமல் செலுத்தி வந்தால் தேவையற்ற அபராத தொகையை தவிர்க்கலாம். 
  • நமக்கு பணம் முன்கூட்டியே கிடைத்தால், கடன் தவணையை (EMI) முன்கூட்டியே முறித்துக்கொள்ளும் வசதி உள்ளதா? கடனை முன்கூட்டியே முறித்து கொள்வதால் ஏதேனும் அபராத தொகை வசூல் செய்யப்படுமா என்பதை கடன் பெரும் முன்பே கேட்டறிந்து கொள்ள வேண்டும். 
  • கடன் தேவைப்படும் போது ஒரு வங்கி அல்லது நிதி நிறுவனத்தை மட்டும் சார்ந்து இருக்காமல், மேலும் சில நிதி நிறுவனங்களிடம் தனிநபர் கடன் பற்றி அறிந்து கொண்டு எங்கு வட்டி குறைவாக இருக்கிறது, மற்ற சேவை கட்டணங்கள் குறைவாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்வது நல்லது.
  • நமது சிபில் மதிப்பெண்ணுக்கு வட்டி குறைவாக எவ்வளவு கடன் கொடுப்பார்களா அதனை பெறுவதே சிறந்தது. அப்போது தான், மாத தவணையை (EMI) சிரமமின்றி செலுத்தி கொள்ள முடியும்.    
  • தனிநபர் கடன் வாங்குகையில் நமக்கு தெரிந்த நிதி ஆலோசகர்களை அணுகுவது நல்லது. அவர்களிடம் நமது வேலை, ஊதியம், செலவீனங்கள், கடன் விவரங்களை கூறி, நம்மால் எவ்வளவு கடன் பெற முடியும், நிதி சிரமமின்றி தவணைத் தொகை செலுத்த முடியும் என ஆலோசனை பெற்று கடன் பெறுவது சிறந்தது.
Tags:Personal LoancibilFinancial tipsFinance