தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Logo

Saturday, Apr 19, 2025 | India

Home / நிதி

அசுர வளர்ச்சியில் UPI! பயனர்கள் சந்திக்கும் சவால்கள் என்னென்ன? ஆய்வில் புதிய தகவல்கள்

பொதுமக்கள் மத்தியில் UPI எனும் ஆன்லைன் பரிவர்த்தனையின் வளர்ச்சியானது அதிகமாகியுள்ளது என்றும், அதில் சில சவால்களை பயனர்கள் எதிர்கொள்கின்றனர் என்றும் தனியார் அமைப்பு நடத்திய ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News Image

Author: Kanal Tamil Desk

Published: November 26, 2024

இன்றைய ஸ்மார்ட்போன் யுகத்தில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள் எந்த அளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளது என்பதை பற்றி நாம் சொல்லி தெரியவேண்டியதில்லை. நமது வீட்டிற்கு அருகாமையில் இருக்கும் சிறிய பெட்டிக்கடை முதல் பெரிய ஷாப்பிங் மால்கள் வரை எல்லா இடங்களில் UPI எனும் ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள் சர்வ சாதாரணமாகிவிட்டது.  

அதிகமாகி கொண்டிருக்கும் ஆன்லைன் செயல்பாடுகளில் UPI-இன் அசுர வளர்ச்சியானது டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளில் அசைக்க முடியாத ஒரு அடித்தளமாகி உள்ளது. 

நடப்பு 2024-25நிதியாண்டில், நாடு முழுவதும் உள்ள மொத்த மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் UPI டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையானது 68 சதவீதமாக வளர்ச்சியை கண்டுள்ளது என Kearney எனும் நிறுவனம் How Urban India Pays  என்கிற தலைப்பின் கீழ் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

ஆய்வு : 

Kearney நிறுவனம் இந்தியா முழுக்க முக்கிய நகரங்களில் UPI பயன்படுத்தும் சுமார் 6 ஆயிரம் நுகர்வோர்களிடமும், 1,000 வணிகர்களிடமும் ஆய்வு மேற்கொண்டது. இதன்மூலம் UPI பணப்பரிவர்த்தனையானது மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது. இதனால் அவர்களுக்கு கிடைத்த பலன் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. 

இந்த ஆய்வில் பங்கேற்றத்தில் 90% மக்கள் ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு UPI-ஐ பயன்படுத்துவதையே விரும்புகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது. அதில், 50% மக்கள் டிஜிட்டல் பணப்பரிவர்தனைகளில் நேரடியாக பயன்படுத்துகிறார்கள். அதாவது, நேரடியாக கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி அங்கே உள்ள UPI QR Code மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்கிறார்கள். 

இந்த டிஜிட்டல் பணபரிவர்தனை வந்த பிறகு  இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் முதலில் இதனை ஏற்றுக்கொண்டார்கள், ஆனால், இது நமக்கு சரியாக இருக்காது என முதலில் பின்வாங்கியது முதியவர்கள் தான். டிஜிட்டல் பரிவர்தனைகளின் அசுர வளர்ச்சிக்கு பிறகு UPI மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தும் மனப்பான்மையை முதியவர்களும் வளர்த்துக் கொண்டனர் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

UPI வெற்றிக்கு முக்கியமான காரணம் : 

ஒரு கடைக்கு சென்று பொருட்கள் வாங்குகிறோம் என்றால் பொருட்கள் வாங்கிவிட்டு உடனடியாக அதற்கான பணத்தை சுலபமாக திருப்பி செலுத்த இது மிகவும் பயனுள்ளதாகவும், துரிதமாகவும் இருக்கிறது எனவும், இதன் காரணமாக தான் UPI பரிவர்த்தனையை பயன்படுத்துவதாகவும் ஆய்வின் போது மக்கள் தெரிவித்திருக்கிறார்கள். 

யார் வேண்டுமானாலும் இதை எளிதாகப் பயன்படுத்தும்படி பயன்பாடு எளிமையாக உள்ளதால் UPI வெற்றிக்கு இதுவும் முக்கியமான காரணம் எனவும்ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

UPI Lite போன்ற புதுப்பிப்புகள் சிறிய அளவிலான பரிவர்த்தனைகளை PIN இல்லாமல் செய்துகொள்ளும் வசதியை கொடுப்பதாகவும் பொதுமக்கள் கூறுகிறார்கள். 

கடைதெருவில் பொருட்கள் விற்கும் சிறிய வியாபாரிகளில் இருந்து, பெரிய விற்பனையாளர் வரை அனைவரும் UPI-யை ஏற்றுக்கொண்டுள்ளனர் எனவும்,  தினசரி கடைகள், போக்குவரத்து மற்றும் உணவகங்கள் என அனைத்து இடங்களிலும் மக்கள் UPI பயன்பாட்டை விரும்பிச் பயன்படுத்துகிறர்கள் எனவும் ஆய்வில் தெரியவந்திருக்கிறது. 

BNPL பயன்பாடு: 

BNPL (Buy Now Pay Later) பயன்பாடு என்ன என்பதை  87% பேர் அறிந்துள்ளனர். மேலும் ரூ.5,000க்கு கீழ் பொருட்களை வாங்கும் 34% பேர் இந்த வசதியை பயன்படுத்தி பணத்தை பின்பு செலுத்தி வருகிறார்கள் என்பதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. 

கிரெடிட் கார்டுகள்: 

BNPL வசதியை பயன்படுத்துவதில் 46% பேர் பொருட்களை வாங்குவதற்கு தங்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்துகின்றனர் என்றும் ஆய்வில் தகவல் தெரியவந்துள்ளது. 

சவால்கள் : 

UPI-யின் பரவலான பயன்படுத்தலுக்குப் பின்னாலும் சில சவால்கள் உள்ளன என்பதும் இந்த ஆய்வில் கலந்துகொண்டவர்கள் கூறியதை வைத்து தெரியவந்துள்ளது. ஆய்வில் கலந்து கொண்டதில் பலரும் கூறிய முக்கியமான காரணம், இனைய இணைப்பு பிரச்சினை தான். 

இணையதள பிரச்சனை காரணமாக, ஆய்வில் கலந்து கொண்ட 51% பேர், இது போன்ற விஷயத்தில் சிக்கவேண்டாம் என்பதால் பணத்தை நேரடியாக பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் விருப்பம் தெரிவித்துள்ளனர். 

அதைப்போல, சைபர் கிரைம் மோசடி மற்றும் இரட்டிப்பு டெபிட் பிரச்சினைகள் அதாவது, நாம் ஒரு முறை பணத்தை செலுத்திய பிறகு பணம் வணிகருக்கு செல்லவில்லை என்பது போல காட்டினாலும், நம்மளுடைய வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டு இருக்கும். இது தெரியாமல் நாம் மற்றோரு முறையும் பணத்தை அனுப்பும் சூழல் உருவாகும்.  இந்த பிரச்சினைகள் சிலரை பயமுறுத்துகின்றன. இதுவும் UPI பரிவர்த்தனையில் ஒரு சவாலாக பார்க்கப்படுகிறது. 

புதிய டிஜிட்டல் பரிவர்த்தனைகள் தற்போது பெரிய அளவில் வளர்ந்து வந்தாலும், UPI தான் தற்போது முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது என ஆய்வில் தகவல் தெரியவந்துள்ளது. 

வளர்ச்சி எதிர்பார்ப்புகள் : 

இந்தியாவின் மொத்த டிஜிட்டல் சில்லறை பரிவர்த்தனை மதிப்பு இந்த ஆண்டு  (2024) 3.6 டிரில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து வருகின்ற 2030-ஆம் ஆண்டு 7 டிரில்லியன் அமெரிக்க டாலராக இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான முக்கிய காரணமே அந்த அளவுக்கு  UPI பயன்பாடுகள் மக்கள் மத்தியில் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது என்பதாகும்.

பெருநகரங்களில் UPI இல்லாமல் புது முயற்சி தொடங்கப்பட்டு வருகிறது. ஆனால் சிறிய நகரங்களில் UPI புதிய மையமாக உருவாக்கும் எனவும், சர்வதேச அளவிலும், இன்னும் பெரிய அளவுக்கு உயரும் எனவும் கூறப்படுகிறது. UPI தற்போது UAE, சிங்கப்பூர், பிரான்ஸ், ஓமன், மலேசியா போன்ற நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:BNPLUPIUPI LiteOnline PaymentsOnline Transaction