- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
பிளிப்கார்ட் super.money செயலியின் புதிய முதலீடு திட்டம்! அனுமதி அளித்த RBI
பிளிப்கார்ட்டின் super.money செயலியானது நிலையான வைப்புத்தொகை (FD) முதலீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அத்திட்டத்தின் பயன்கள், செயல்பாடுகள் உள்ளிட்டவற்றை இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

Author: Kanal Tamil Desk
Published: November 27, 2024
பிரபல ஆன்லைன் விற்பனை நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனத்தின் Super.Money செயலியானது முதன் முதலாக 'superFD' என்ற புதிய முதலீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் யூபிஐ (Unified Payments Interface) பரிவர்த்தனை மூலம் சுலபமாக FD (Fixed Deposit) சேமிப்பு திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் RBI அங்கீகரித்த இந்த 'superFD' திட்டத்தின் கீழ் முதலீடு செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்? எப்படி இந்த திட்டத்தில் முதலீடு செய்வது என்பது குறித்து இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
'SuperFD' என்றால் என்ன?
'SuperFD' ஒரு நீண்டகால வைப்பு நிதி திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் முதலீடு செய்யும் பயனர்களுக்கு 9.5% வரை ஆண்டு வட்டி கிடைக்கிறது. இந்த திட்டத்திற்கு RBI-ஓப்புதல் அளித்துள்ளதால் இது ஒரு பாதுகாப்பான முதலீடு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
இந்த திட்டத்தின் முக்கிய விஷயமே இதில் முதலீடு செய்தால் ஆண்டுக்கு 9.5% வரை வட்டி பெறலாம் என்பது தான். முதலீடு செய்ய ஆர்வம் கொண்டுள்ள இளைஞர்களுக்கு ஏற்ற வடிவில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது என இந்த நிறுவனத்தினர் கூறுகிறார்கள்.
இந்த Super FD திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.1,000 முதலீடு மேற்கொண்டு துவங்கலாம் என்பதால், இளம் தலைமுறை பயனர்களுக்கு இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.
இந்த திட்டத்தில் 5 சிறிய நிதி வங்கிகள் super.money செயலியில் இணைக்கப்பட்டுள்ளன. எனவே, முதலீடு செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான வங்கிகளை வட்டி விகிதம் சரிபார்த்து தேர்வு செய்து கொள்ளலாம்.
அது மட்டுமின்றி இந்த திட்டத்தில் DICGC (Deposit Insurance and Credit Guarantee Corporation) மூலம் ரூ.5 லட்சம் வரை பாதுகாப்பு காப்பீடு வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது முக்கியமான அம்சமாக பார்க்கப்படுகிறது.
அதேபோல, இந்த திட்டத்தில் முதலீடு செய்ய UPI வழியாக முழு செயல்முறையும் 2 நிமிடங்களில் முடிவடையும் வகையில் மிக எளிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க டிஜிட்டல் வடிவிலேயே இந்த செயல்முறை உள்ளது.
இந்த FD திட்டத்தை அடுத்து, விரைவில் FD SIP (Systematic Investment Plan) எனும் கால இடைவெளி சேமிப்பு திட்டமும் அறிமுகப்படுத்த உள்ளது என தெரிவிக்கப்ட்டுள்ளது. FD SIP என்பது ஒரு தொடர்ச்சியான சேமிப்பு திட்டம். வழக்கமான SIPs (மியூச்சுவல் ஃபண்ட் SIP போன்ற) போன்றே, இது ஒவ்வொரு மாதமும் அல்லது நியமிக்கப்பட்ட கால இடைவெளியில் ஒரு சிறிய தொகையை முதலீடு செய்யும் வாய்ப்பை வழங்குகிறது. இதன் மூலம், பயனாளர்கள் தங்களின் சேமிப்பு மற்றும் முதலீட்டை சிறிய தொகைகளாக கட்டுப்படுத்தி பணத்தை சேமிக்கலாம்.
முதலீடு செய்யும் முறை :
- முதலில் super.money செயலியை அதற்கென உள்ள ஆப் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யவேண்டும்.
- பிறகு அதில் பயனர் தங்கள் தொலைபேசி எண்ணை பதிவு செய்யவேண்டும்.
- அந்த செயலியில் பயனர் தங்களுக்கு விருப்பமான வங்கி FD முதலீட்டை தேர்வு செய்யவும்.
- முதல் முதலீட்டை குறைந்தபட்சம் ரூ1,000 செலுத்தி பயனர் தங்கள் சேமிப்பை தொடங்கலாம்.
யாரை குறி வைக்கிறது super.money?
இளம் பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் சிறு முதலீடு மூலம் தங்கள் சேமிப்பு பயணத்தை தொடங்க விரும்புபவரை எதிர்நோக்கி இந்த சேவையை அறிமுகம் செய்துள்ளது பிளிப்கார்ட்டின் Super Money.
குறைந்த முதலீடு அதிக வட்டியை விரும்பும் பயனர்களை எதிர்நோக்கியும் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
குறைந்த அளவு முதலீடு என்பதால் இந்தியாவில் சேமிப்பு பழக்கத்தை மேம்படுத்த இந்த திட்டம் உதவும் என super.money சிஇஓ பிரகாஷ் சிகாரியா கூறியுள்ளார்.