தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Logo

Saturday, Apr 19, 2025 | India

Home / நிதி

உங்கள் சிபில் ஸ்கோர் எவ்வாறெல்லாம் பாதிக்கப்படுகிறது? தடுக்கும் வழிமுறைகள் இதோ…

ஒருவரது சிபில் மதிப்பெண்ணானது அடிக்கடி சோதனை செய்வது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாதிக்கப்படுகிறது. அதனை எப்படி தடுப்பது என்பது பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

News Image

Author: Kanal Tamil Desk

Published: November 29, 2024

பல்வேறு நிதி தேவைகளுக்காக ஒருவருக்கு கடன் தேவைப்படும் போது, அவர் வங்கி அல்லது நிதி நிறுவனத்தை அணுகிறார். அப்போது அவரின் சிபில் மதிப்பெண் (CIBIL Score) சோதனை செய்யப்படுகிறது. அந்த மதிப்பெண் அடிப்படையிலேயே அவருக்கு கடன் கொடுக்கலாமா வேண்டாமா? எவ்வளவு கடன் கொடுக்கலாம் என்பதில் இருந்து அவருக்கு எவ்வளவு வட்டி விகிதம் விதிக்கலாம் என்பது வரையில் சிபில் மதிப்பெண்ணை கொண்டு தான் நிதி நிறுவனங்கள் முடிவு செய்கின்றன. 

சிபில் (CIBIL)  :

சிபில் (CIBIL) என்பது Credit Information Bureau India Limited எனும் இந்திய அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட ஓர் நிதி மேலாண்மை அமைப்பாகும். இந்த அமைப்பு தனிநபரின் நிதி மேலாண்மையை கண்காணிக்கும். தனிநபர் கடன் வாங்குதல், முறையாக திருப்பி செலுத்துதல், அபராதம் செலுத்தி உள்ளாரா உள்ளிட்ட விவரங்களை கருத்தில் கொண்டு மதிப்பெண்கள் அளிக்கும்.    

சிபில் மதிப்பெண் வகைகள் : 

இந்த சிபில் மதிப்பெண்கள் 300 முதல் 900 வரையில் மதிப்பிடப்பட்டு 4 வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன. 300 முதல் 550 வரை - மோசமான நிலை (Poor) என்றும், 550 முதல் 650 வரை - ஓகே (Average) என்றும், 650 முதல் 750 வரை - நன்று (Good) என்ற வகையிலும், 750 முதல் 900 வரை - மிக்க நன்று (Excellent) என்றும் வகைப்படுத்தப்படுகிறது. 

இதில், 750 மதிப்பெண்களுக்கு மேலே சிபில் மதிப்பெண் இருந்தால், நிதி நிறுவனங்கள் எளிதாக கடன் வழங்கும், 650 - 750 வரை இருந்தால் நிதி நிறுவனங்கள் யாரேனும் கடனுக்கு பொறுப்பேற்று (ஜாமீன்) கொண்டால் கடன் கொடுக்கும் என்றும்  600க்கு கிழே சிபில் மதிப்பெண் இருந்தால் கடன் வழங்குவது சற்று கடினம் என்றும் பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.  

சிபில் மதிப்பெண் தேவைகள்

தனிப்பட்ட கடன்கள் என்பது சிபில் மதிப்பெண்ணை பிரதானமாக கொண்டு வழங்கப்படுகிறது. அதேபோல, கார் கடன், வீட்டு கடன் என உள்ளிட்ட கடன்கள் வாங்குவதற்கும் நல்ல சிபில் மதிப்பெண் கட்டாயமான தேவையாக உள்ளது.  

சிபில்-ஐ பாதிக்கும் காரணிகள் :     

முறையாக  கடனை திருப்பி செலுத்தாமல் இருப்பது, அபராதம் செலுத்துவது, முறையற்ற நிதி மேலாண்மை உள்ளிட்டவை சிபில் மதிப்பெண்களை அதிகம் பாதிக்கிறது.

இதனை அடுத்து, சிபில் மதிப்பெண்ணை அதிகம் பதிப்பது, சிபில் ஸ்கோரை அடிக்கடி சோதனை செய்வதாலும் பாதிப்பு ஏற்படுகிறது. அதாவது, ஒருமுறை சிபில் மதிப்பெண்ணை சோதனை செய்கையில் குறைந்தது 5 மதிப்பெண்கள் குறையும் என கூறப்படுகிறது.

ஒருவருக்கு கடன் தேவை இருக்கும் சமயத்தில், அவர் பல்வேறு நிதி நிறுவனங்களில் கடன் விண்ணப்பங்கள் அளிக்கும் போது அவர்கள் அனைவரும், கடன் தேவைப்படுவோரின் சிபில் மதிப்பெண்ணை சோதனை மேற்கொண்டால் அந்த நபரின் சிபில் மதிப்பெண் கண்டிப்பாக குறையும். 

ஒருவர் முழுதாக தான் வாங்கிய கடனை அடைத்த பிறகும், நிதி நிறுவனம் அவர்கள் கடனை முறிக்காமல் (Close) செய்யாமல் வைத்திருந்தால் சிபில் மதிப்பெண் குறைத்தே காணப்படும். 

சிபில் செக் செய்யும் வகைகள் : 

சிபில் மதிப்பெண்ணை நிதி நிறுவனங்கள் சோதனை செய்தால் அதற்கு பயனர்களின் ஒப்புதல் தேவைப்படும். அப்படி செக் செய்கையில் சிபில் மதிப்பெண் குறையும். 

சிபில் மதிப்பெண்ணை சம்பந்தப்பட்ட நபரே அதிகாரப்பூர்வ சிபில் இணையதளத்தில் தனிப்பட்ட முறையில் சோதனை செய்யும் போது அதற்கு மதிப்பெண் குறையாது. 

தடுக்கும் வழிமுறைகள் : 

சிபில் மதிப்பெண்ணை அதிகமுறை சோதனை செய்ய கூடாது. 

கடன் தேவைப்படுகையில், பல்வேறு நிதி நிறுவனங்களை ஆய்வு செய்து, வட்டி விகிதம், கடன் தொகை, மாத தவணை, அபராதம் உள்ளிட்ட விவரங்களை முடிவு செய்த பிறகு அந்த நிதி நிறுவனத்தை அணுக வேண்டும். அப்போது உங்கள் சிபில் மதிப்பெண் அடிக்கடி சோதனை செய்யப்படுவது குறைக்கப்படும். 

கடன் தொகையை முழுதாக அடைந்திருந்தால், அது நமது சிபில் பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்பதை சரிபார்க்க வேண்டும். இல்லையென்றால் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தை அணுகி கடன் விவரத்தை முறிக்க வலியுறுத்த வேண்டும். 

Tags:Finance TipsLoansCIBIL ScoreCIBIL