தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Logo

Saturday, Apr 19, 2025 | India

Home / நிதி

மாணவர்களுக்கான கிரெடிட் கார்டு : உலவும் முக்கிய வதந்திகளும், அதற்கான விளக்கங்களும்…

மாணவர்களுக்கான கிரெடிட் கார்டுகள் பற்றிய பொதுவாக உலவும் சில தவறான வதந்திகளை உண்மையல்ல என்றும் அதன் தெளிவான விளக்கங்கள் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

News Image

Author: Kanal Tamil Desk

Published: December 3, 2024

பொதுவாகவே மாணவர்கள் உபயோகிக்கும் கிரெடிட் கார்டுகள் அதிக வட்டி விகிதங்களை கொண்டவை என்றும் ஒரு வதந்தி உலவுகிறது. இதுபோல பல்வேறு போலியான தக்வல்கள் உலா வந்து கொண்டிருக்கிறது. அதற்கான விவரத்தையும், தெளிவான விளக்கங்களையும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். 

அதிக வட்டி விகிதமா? 

மாணவர் கிரெடிட் கார்டுகளுக்கு சிறப்பு சலுகைகள் இருக்கும். அதேபோல அதிக வட்டி விகிதங்களை கொண்டிருக்கும்என்ற தகவலும் உலா வருகிறது. ஆனால், முதன்முதலில் கிரெடிட் கார்டு உருவாக்கபட்டதே மாணவர்களுக்காக தான். எனவே, இதில், வட்டி விகிதங்கள் என்பது பெரும்பாலும் குறைவாகவே இருக்கின்றது. 

அதிக கட்டணமா?

மாணவர்கள் கிரெடிட் கார்டுகளுக்கு அதிக பயன்பாட்டு கட்டணங்களை செலுத்த வேண்டி இருக்கும் என கருதுகின்றனர். உண்மையில், மாணவர்களுக்கான கிரெடிட் கார்டுகள் குறைந்த ஆண்டு கட்டணங்களையே கொண்டுள்ளன. பல்வேறு நிதி நிறுவன கார்டுகள் எந்த ஆண்டு கட்டணமும் இல்லாமல் கூட வழங்ப்படுகின்றன.

 வெளிநாட்டு பயணங்களில் மட்டுமே பயன்? 

பலர் மாணவர்களுக்கான கிரெடிட் கார்டுகள், வெளிநாடுகளுக்கு பயணம் செய்து பயிலும் மாணவர்களுக்கு மட்டும் பயன்படுகிறது என நம்புகின்றனர். உண்மையில், இவை உள்ளூர் பயன்பாடுகளிலும் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. சலுகைகளும் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, தினசரி செலவுகளுக்கு ஏற்ப சிறிய கிரெடிட் வரம்புகளுடன் இந்த கார்டுகள் அளிக்கப்பட்டு மாணவர்களின் நிதி நிலையை திறம்பட நிர்வகிக்க உதவுகின்றன.

 கல்லூரி முடித்த பிறகு பயன்படுமா?

கல்லூரி படிக்கும் மாணவர்கள் பட்டம் பெற்ற பிறகு, அவர்கள் இந்தக் கார்டுகளை நீடித்து பயன்படுத்த முடியாது என்று கூற்று கூறப்படுகிறது.

உண்மையில், கல்லூரி காலம் முடித்த பிறகு, இதன் நிதிசெயல்பாடுகளை ஆதாரமாக கொண்டு, புதிய கிரெடிட் கார்டு வாங்கி மாணவர்கள் பெரியவர்கள் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்த முடியும்.

 கூடுதல் ஆவணங்கள் தேவை? 

மாணவர்கள் கிரெடிட் கார்டு வாங்குவதற்கு பல்வேறு சிக்கல்கள் உள்ளன. கூடுதல் ஆவணங்கள் தேவைப்படுகின்றன என்ற கூற்றுகள் உள்ளது. ஆனால், அவசியமான ஆவணங்கள் குறைவாகவே தேவைப்படும். மாணவர்களுக்கென சுலபமான விண்ணப்ப செயல்முறைகளே உருவாக்கப்பட்டுள்ளன. இதனை எளிதாக ஆன்லைன் செயல்முறைகள் மூலம் எளிதாக பெற்றுவிடலாம். 

கிரெடிட் கார்டு முக்கியமானதா?

மாணவர் கிரெடிட் கார்டுகள் மாணவர்களுக்கு நிதி நிர்வாக திறனை உருவாக்க அதிகளவில் உதவுகின்றன. தேவையற்ற செலவுகளுக்குள் சிக்காமல் அதனை அகற்றுவதன் மூலம், மாணவர்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய நிதி தேவைகள் அறிந்து செயல்படவும், ஆரம்ப நிலையில் இருந்தே நிதி நிர்வாகத்தை கையாளும் பழக்கத்தை மாணவர்களிடம் கொண்டுவரவும் இந்த கிரெடிட் கார்டு செயல்முறை உதவும் என நிதி ஆலோசகர்கள் மத்தியில் கூறப்படுகிறது.

முக்கிய குறிப்புகள்:

மாணவர்களுக்கான கிரெடிட் கார்டு பயன்பாடு மூலம் ஆரம்ப காலகட்டத்திலேயே நிதி கட்டுப்பாட்டை அறியவும், தேவையற்ற செலவீனங்களை தவிர்க்கவும் இது உதவும். எனவே, கிரெடிட் கார்டு பற்றி முழுவதுமாக தெரிந்துகொண்டு மாணவர்கள் இதனை வாங்கி பயன்படுத்துவது பயனளிக்கும்.

Tags:Student Credit cardCredit Card