- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
நீண்டகால முதலீடு, ஒரு கோடி சேமிப்பு! பொருளாதர வல்லுனர்கள் கூறுவதென்ன?
ஒருவர் தனது சேமிப்புகளை முறையாக உரிய வழியில் முதலீடு செய்வதன் மூலம் 10 முதல் 20 ஆண்டுகளில் அதிக பலன் பெற பொருளாதர வல்லுநர்கள் குறிப்பிட்ட சில வழிமுறைகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

Author: Kanal Tamil Desk
Published: December 10, 2024
தற்போதைய பொருளாதார சூழலில் பலருக்கும், தங்கள் பொருளாதார நிலையை மேம்படுத்திக்கொண்டு, நாமும் பெரும் பணக்காரராக மாற வேண்டும் என்பது கனவாக உள்ளது. அதனை மனதில் வைத்து தற்போது பலரும் தாங்கள் சேமிக்கும் பணத்தை பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்ய தொடங்கி விட்டனர் என பல்வேறு பொருளாதர ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. அதில் சில உபயோகமான ஐடியாக்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
முக்கிய குறிப்பு :
பங்குகள், மியூச்சுவல் ஃபண்டுகள், SIP சேமிப்புகள் தொடர்பாக பல்வேறு பொருளாதார வல்லுனர்களின் ஆலோசனைகளை கருத்தில் கொண்டு இந்த செய்தி குறிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. நீங்கள் முதலீடு செய்யும் முன்பு முறையான நிதி ஆலோசனைகளை பெற்று அதற்கான உரிய வழியில் உங்கள் முதலீடுகளை துவங்க வேண்டும்.
ரூ.1 கோடி இலக்கு :
ஒருவர் தனக்கு ஒரு கோடி ரூபாய் முதிர்வு தொகை கிடைக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்து முதலீடு செய்ய ஆரம்பிக்க போகிறார் என்றால், அவர் நீண்ட கால முறையான நிதி முதலீட்டை தேர்வு செய்ய வேண்டும். அந்த நபர் தனது வருமானத்துக்கு ஏற்ப நிதி தொடர்பான விதிகளை நிர்ணயம் செய்து கட்டுக்கோப்பாக முதலீடு செய்தால் இந்த நீண்டகால முதலீடு என்பது எளிதாகும்.
ஒருவர் SIP திட்டத்தின் கீழ் மாதம் ரூ.44 ஆயிரம் முதலீட்டை, ஆண்டு வட்டி 12% என்ற வீதத்தில் 10 ஆண்டுகள் முதலீடு செய்தால் முதிர்வு தொகையாக அவர்க்கு ரூ.1 கோடி கிடைக்கும். இத்திட்டம் மூலம் ஒருவர் முதலீடு செய்யும் தொகை ரூ.52.80 லட்சமாக இருக்கும். வட்டி தொகை ரூ.49.42 லட்சம் கிடைக்கும். முதிர்வு தொகையாக ரூ.1 லட்சம் கிடைக்கும்.
20 ஆண்டுகளில்…
அதே, SIP திட்டத்தின் கீழ் மாதம் ரூ.10,200 முதலீடு செய்தால், ஒரு ஆண்டு வட்டி 12% என்ற வீதத்தில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.1 கோடி முதிர்வுத் தொகை கிடைக்கும் என்று SIP கால்குலேட்டர் மூலம் தகவல் கிடைத்துள்ளது. இந்த முதலீடு மூலம் ஒருவர் மேற்கொள்ளும் முதலீடு தொகை ரூ.24,48,000 என்றும், வட்டியாக கிடைக்கும் தொகை ரூ.77,43,309 என்றும், இத்திட்டத்தில் மொத்த முதிர்வு தொகையாக ரூ.1,01,91,309 கிடைக்கும் என குறிப்பிடப்படுகிறது.
50 : 30 : 20 வழிமுறை :
ஒருவர் தான் சேமிக்கும் வருமானத்தில் 50%-ஐ அத்தியாவசிய செலவுகளான உணவு, வாடகை, மாதாந்திர கட்டணங்கள் ஆகியவற்றிற்கு ஒதுக்க வேண்டும்.
வருமானத்தில் 30%-ஐ விருப்ப செலவுகளான பொழுதுபோக்கு, மற்ற விருப்பப்பட்ட பொருட்கள் வாங்குவதற்கு ஒதுக்கலாம்.
வருமானத்தில் 20%-ஐ முதலீடு மற்றும் சேமிப்புகளுக்கு கட்டாயமாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
ஒருவர் தனது முதலீட்டை அதிகப்படுத்த விரும்பினால், பொழுதுபோக்கு செலவுகளை குறைத்து தங்கள் முதலீட்டிற்கான ஒதுக்கீடு வீதத்தை 30% முதல் 40% வரை அதிகரிக்க வேண்டும் என பொருளாதார வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
முதலீடு யுக்தி :
மேற்குறிப்பிட்டவாறு தனிநபர் வருமானத்தில் 40%-ஐ சேமிக்க விரும்பினால், அதனை அதிக முதிர்ச்சி தரும் பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும். வருடாந்திர ஆண்டு வட்டி 12%-க்கு மேல் கிடைக்கும் முதலீடுகளில் சேமிப்பை தொடங்க வேண்டும் என்றும், நீண்ட கால முதலீடுகளை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
கூடுதல் வட்டி :
ரூ.15,000 வரையில் SIP மாதாந்திர முதலீடு செய்ய விரும்பும் நபர்கள், ஆண்டு வட்டி 15% என்ற வீதத்தில் 15 ஆண்டுகள் முதலீடு செய்தால் ரூ.1 கோடி முதிர்வு தொகை கிடைக்கும்.
முக்கிய குறிப்புகள்:
முதலீடு செய்து அதிக முதிர்வு தொகை வேண்டும் என ஒருவர் விருப்பினால், கண்டிப்பாக முதலீட்டில் தொய்வு ஏற்படாமல் முதலீடு செய்ய வேண்டும்.
நீண்டகால முதலீட்டை நிதி ஒழுங்குடன் செயல்படுத்த வேண்டும். உயர்விகித ஆண்டு வட்டி தரும் நிலையான நிறுவனத்தின் முதலீட்டை தேர்வு செய்ய வேண்டும் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.