- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
ஏற்றமும் இல்லை இறக்கமும் இல்லை! இன்றைய பங்குச்சந்தை நிலவரம்
மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் 2 புள்ளிகள் உயர்ந்து 81,510.05 எனவும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 50, 9 புள்ளிகள் சரிந்து 24,610.05 எனவும் நிறைவு பெற்றுள்ளது.

Author: Kanal Tamil Desk
Published: December 10, 2024
இந்திய பங்குசந்தையின் கீழ் இயங்கும் இந்தியாவில் தொழில் செய்யும் நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் உலக அரசியல் முதல் உள்ளூர் அரசியல் நகர்வுகள் வரையில் தற்கால நிலவரங்கள் பொறுத்து இந்திய பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும்.
இன்றைய நிலவரப்படி (டிசம்பர் 10), இந்திய பங்குசந்தையில் பெரிய அளவு பாதிப்பு இல்லை என்றும், அதேநேரம் பெரிய அளவிலான ஏற்றமும் இல்லை என்ற என்பதாலும் பங்குச்சந்தை சமநிலையில் நிறைவடைந்துள்ளது.
ஐடி துறை மற்றும் வங்கி துறை கணிசமான அளவில் ஏற்றத்தை கண்டாலும், ரிலையன்ஸ், அதானி நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தால் பங்குச்சந்தை சமநிலையில் முடிவடைந்தன. இன்போசிஸ், ஐசிஐசிஐ, எஸ்பிஐ நிறுவனங்களின் பங்குகள் குறிப்பிட்ட அளவு லாபம் கொடுத்தாலும், ரிலையன்ஸ், பாரத் ஏர்டெல், L&T ஆகிய நிறுவனங்களின் சரிவை சந்தித்தது.
டிசம்பர் 10, 2024, நிலவரப்படி மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் (BSE) 2 புள்ளிகள் உயர்ந்து 81,510.05 எனவும், தேசிய பங்குச்சந்தை (NSE) நிஃப்டி 50, 9 புள்ளிகள் சரிந்து 24,610.05 எனவும் நிறைவு பெற்றுள்ளது.
இன்று, BSE மிட் கேப் (Mid Cap) மற்றும் BSE ஸ்மால் கேப் (Small Cap) நிறுவன பங்குகள் எதிர்பார்த்த அளவை விட சிறப்பாக செயல்பட்டன என்று பங்குச்சந்தை வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். பங்குசந்தை குறியீடு மிட் கேப் பங்குகளில் 0.30 சதவீதமும், ஸ்மால் கேப் நிறுவன பங்குகள் 0.33 சதவீதமும் உயர்ந்து காணப்பட்டன.
இன்றைய பங்குச் சந்தையில் ஐடி நிறுவனங்கள் அதிக அளவில் இல்லாவிட்டாலும், குறிப்பிடத்தக்க அளவு அதாவது 1 சதவீதம் அளவு உயர்வை சந்தித்தன. பஞ்சாப் நேஷனல் வங்கி, ஸ்டேட் பேங்க், கோடாக் மஹிந்திரா வங்கி, ஐசிஐசிஐ வங்கியின் பங்குகள் இன்று லாபத்துடன் நிறைவடைந்துள்ளன.
தேசிய பங்கு சந்தை நிஃப்டி 50யில், 27 நிறுவன பங்குகள் சரிவடைந்துள்ளன. ஏர்டெல், டாக்டர் ரெட்டீஸ் லேபரடிஸ் மற்றும் அதானி பங்குகள் இன்று அதிக அளவு நஷ்டம் அடைந்தன. அதேநேரம், ஸ்ரீராம் பைனான்ஸ், பஜாஜ் பைனான்ஸ், HCL டெக்னாலஜிஸ் நிறுவன பங்குகள் இன்று பங்குச்சந்தை குறியீட்டில் ஏற்றம் கண்ட நிறுவனங்களின் பட்டியலில் இருந்தன.
நிஃப்டி 50 தொடர்ந்து மூன்று வாரங்களாக சரிவை சந்தித்து வருகிறது. இருப்பினும், அந்த வீழ்ச்சியானது குறைந்த அளவிலேயே உள்ளது.கடந்த மூன்று நாட்களின் இழப்பு என்பது 0.4% என்ற வீதத்திலேயே உள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது.