தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Logo

Saturday, Apr 19, 2025 | India

Home / நிதி

பெண்களுக்கு சிறப்பு கடனுதவிகள் ஏன்? அதற்கான முக்கிய காரணங்கள் இதோ…

நமது நாட்டில் ஆண்களை விட பெண்களுக்கு கடனுதவி என்பது எளிதாகவும், குறைவான வட்டி விகிதத்திலும், பல்வேறு சலுகைகளும் எதற்காக கொடுக்கப்படுகிறது என்பதை தனியார் அமைப்பு ஒன்று ஆய்வு செய்துள்ளது.

News Image

Author: Kanal Tamil Desk

Published: December 11, 2024

நமது நாட்டில் ஆண்களை ஒப்பீடு செய்கையில் பெண்களுக்குசற்று எளிதாக கடன் உதவி கிடைக்கிறது. மகளிர் சுய உதவி குழுக்கள், அரசு கடனுதவி முதல் தனியார் வங்கிகளில் கூட குறைவான வட்டியுடன் கடன்கள் வழங்ப்பட்டு வருகிறது. அப்படி எளிதாக வட்டி குறைவாக கடன்கள் கிடைப்பதற்கான காரணங்களை தனியார் நிதி அமைப்பு ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது. 

பெண்களுக்கு முன்னுரிமை : 

பெண்களுக்கு கடன் வழங்க முன்னுரிமை அளிக்க முக்கிய காரணமே அவர்கள், தங்களுடைய கடனை குறித்த காலத்திற்குள் திருப்பி செலுத்துவதால் தான் (உதாரணமாக மகளிர் சுய உதவி குழுக்கள்) என தனியார் நிதி அமைப்பு நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது. 

சிறந்த கிரெடிட் ஸ்கோர் :

வாங்கிய கடன் தொகையை சரியான நேரத்தில் திருப்பி செலுத்துவது மட்டுமின்றி, அந்த தொகையை பெண்கள் பொறுப்புடன் செலவழிக்கிறார்கள் என்றும், கிரெடிட் கார்டுகளை குறைவாக பயன்படுத்துகிறார்கள் என்றும் இதனால், பெரும்பாலான பெண்களுடைய கிரெடிட் ஸ்கோர் (credit score) என்பது அதிகமாகவே இருக்கிறது என்று தனியார் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நல்ல கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பவர்களுக்கு அனைத்து நிதி நிறுவனங்களிடம் இருந்தும் கடனுதவி எளிதில் கிடைத்துவிடும். 

அரசு உதவிகள் : 

பெண்கள் நிதி சுதந்திரம் பெற எதுவாக, அவர்களுக்கு கடன் உதவி வழங்குவதை ஊக்குவிக்கும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதில் குறிப்பிட்ட சில பெண்களுக்கான நிதி  திட்டங்கள் பின்வருவமாறு…

  • வீட்டு கடனுக்கு குறைந்த வட்டி விகிதம்.
  • சிறு தொழில்களுக்கு சிறப்பு கடன் உதவிகள்.
  • பெண்கள் தொழில்முனைவோராக வளர ‘Women Entrepreneurship Program’.

சிறந்த நிதி பழக்கம் : 

பல்வேறு சமயங்களில் ஆண்கள் அதிகளவுக்கு கடன்களை வாங்கி அதனை திருப்பி செலுத்த திணறுகிறார்கள் என்றும், இதனால், பல்வேறு சமயங்களில் அபாரதங்களுடன் கடன் தொகையை திருப்பி செலுத்தும் சூழல் உருவாகிறது என ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆனால், பெண்களுக்கு வழங்கப்பட்ட கடன்களில் இம்மாதிரியான சிக்கல்கள் பெரும்பாலும் எழவில்லை என்றும், அவர்கள் தேவைக்கு அதிகமாக கடன் வாங்குவதில்லை  என்றும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

வங்கி வட்டி விகிதம் :

பெரும்பாலான வங்கிகள் ஆண்களை ஒப்பீடு செய்கையில் பெண்களுக்கு வட்டி விகிதம் குறைவாகவே விதிக்கிறது. 

  • ஆக்சிஸ் வங்கியில் 11.25% முதல்
  • இன்டஸ்லண்ட் வங்கியில் 10.49% முதல்
  • HDFC வங்கியில் 10.85% முதல்
  • ICICI வங்கியில் 10.85% முதல்
  • கோடக் மகிந்தரா வங்கியில் 10.99% முதல்
  • டாடா வங்கியில் 11.99% முதல் 

பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் : 

பெண்கள் கடனுதவி பெறுவதில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் இருந்தாலும், அவை நாட்டில் உள்ள அனைத்து பெண்களிடமும் சேர்வதில்லை. இதுபற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாமலே உள்ளது இது பற்றியும் ஆய்வறிக்கை விளக்குகிறது. 

கிராமப்புற பெண்கள் : 

கிராமப்புறங்களில் குறிப்பிட்ட அளவிலேயே வங்கி சேவை உள்ளதால், அவர்கள் கடன் வாங்குவதற்கும் திருப்பி செலுத்துவதற்கும் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். 

நிதி கல்வி குறைவு :

கிராமப்புற பெண்களுக்கு கடன்உதவிகள் பற்றிய போதிய விழிப்புணர்வு இருப்பதில்லை என்றும், பலரும் கடன் சலுகைகள் பற்றி தெரியாமலே கடன் உதவி பெறாமல் இருக்கிறார்கள் என்றும் குறிப்பிடப்படுகிறது.  

பெண்கள் கடன்களை பொறுப்புடன் திருப்பிச் செலுத்துவதால், வங்கிகள் அவர்களை நம்புகிறார்கள் என்றும், இதனால் அவர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் உடனடி கடன்உதவி தரப்படுகிறது. ஆனால், அதுபற்றிய விழிப்புணர்வை பெண்கள் மத்தியில் அதிகரிக்க வேண்டும் என்றும்,  அப்போது தான் பெண்கள் அவர்களுக்கான நிதி சுதந்திரத்தை முழுமையாக பெற முடியும் என்றும் தனியார் ஆய்வு மைய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 

Tags:WomanLoansPersonal Loan