ஏற்றத்துடன் நிறைவடைந்த இன்றைய பங்குசந்தை நிலவரம்
மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் 16 புள்ளிகள் உயர்ந்து 81,526.14 எனவும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி50, 31.75 புள்ளிகள் உயர்ந்து 24,641.8 எனவும் நிறைவு பெற்றுள்ளது.

Author: Kanal Tamil Desk
Published: December 11, 2024
இந்திய பங்குசந்தையின் இன்றைய நிலவரப்படி (டிசம்பர் 11), பங்குசந்தை சிறிய அளவு ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. குறிப்பிட்டு சொல்லும்படி இல்லை என்றாலும், இன்றைய நிலவரம் பச்சை நிறத்துடனே காணப்பட்டது. (பச்சை என்பது ஏற்றத்தை குறிக்கும்)
இன்ஃபோசிஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், ட்ரெண்ட் , மற்றும் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் இன்று ஏற்றம் கண்டு டாப் லிஸ்டில் இருந்தன. இன்று அந்த நிறுவன பங்குகள் ஒவ்வொன்றும் 2 சதவீதம் அளவுக்கு மேல் உயர்ந்து காணப்பட்டன.
டிசம்பர் 11, 2024, நிலவரப்படி மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் (BSE) 16 புள்ளிகள் உயர்ந்து 81,526.14 என்று அளவில் நிலைநிறுத்தியது. ஆனால், அதற்கு முன்னர் 359 புள்ளிகள் வரையில் உயர்ந்து 81,742.37 புள்ளிகள் வரையில் நிலை கொண்டு பின்னர் ஏற்ற இறக்கமாக மேற்கண்ட புள்ளிகளுடன் நிறைவு பெற்றது.
தேசிய பங்குச்சந்தை (NSE) நிஃப்டி50, 31.75 புள்ளிகள் சரிந்து 24,641.8 எனவும் நிறைவு பெற்றுள்ளது. இந்த புள்ளிகள் அதிகபட்சம் 24,691.75 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சம் 24,583.85 புள்ளிகள் வரையிலும் ஊசலாடியது. இறுதியில் மேற்க்கண்ட புள்ளி அளவீட்டில் நிலை கொண்டுள்ளது.
இன்று, BSE மிட் கேப் (Mid Cap) மற்றும் BSE ஸ்மால் கேப் (Small Cap) நிறுவன பங்குகள் நேற்றை போலவே சிறப்பாக செயல்பட்டன என்று பங்குச்சந்தை வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். பங்குசந்தை குறியீடு மிட் கேப் பங்குகளில் 0.25 சதவீதமும், ஸ்மால் கேப் நிறுவன பங்குகள் 0.35 சதவீதமும் உயர்ந்து காணப்பட்டன.
நிஃப்டி 50-ல் பொதுத்துறை வங்கிகள் கிட்டத்தட்ட 1 சதவீதம் அளவுக்கு சரிவை சந்தித்தன. நிஃப்டி 50-ல் மீடியா, நிஃப்டி வங்கி மற்றும் நிஃப்டி தனியார் வங்கி குறியீடுகளும் அரை சதவீதம் வரை சரிவை சந்தித்தன.
No comments yet.