சரிவுடன் முடிவடைந்த இன்றைய பங்குசந்தை நிலவரம்
மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் 236.18 புள்ளிகள் சரிந்து 81,289.96 எனவும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி, 93.10 புள்ளிகள் சரிந்து 24,578.70 எனவும் நிறைவு பெற்றுள்ளது.

Author: Kanal Tamil Desk
Published: December 12, 2024
இந்திய பங்குசந்தை இன்று (டிசம்பர் 12) சற்று சரிவை சந்தித்து உள்ளது. நேற்று பச்சை நிறத்துடன் நிறைவடைந்த பங்குச்சந்தை, இன்று குறிப்பிட்ட ஏற்ற இறக்கங்களை சந்தித்து இறுதியில் சிவப்பு நிறத்துடன் நிறைவு பெற்றது.
டிசம்பர் 12, 2024, நிலவரப்படி மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் (BSE) 236.18 புள்ளிகள் சரிந்து 81,289.96 என்று அளவில் முடிவடைந்தது. இன்று அதிகபட்சமாக 81,680.97 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 81,211.64 புள்ளிகள் வரையிலும் சென்றது. இறுதியில் 0.29% அளவுக்கு சரிவை (அக்டோபர் 2024 ஒப்பீடு) சந்தித்து சிவப்பு நிறத்தில் முடிவடைந்தது.
இன்றைய நிலவரப்படி (டிசம்பர் 12) தேசிய பங்குச்சந்தை (NSE) நிஃப்டி, 93.10 புள்ளிகள் சரிந்து 24,548.70 என நிறைவு பெற்றுள்ளது. அதிகபட்சமாக 24,675.25 புள்ளிகள் வரையிலும் குறைந்தபட்சமாக 24,527.95 புள்ளிகள் வரையிலும் மார்க்கெட் நிலவரம் இருந்தது. இறுதியில் 0.38% அளவுக்கு சரிவை (அக்டோபர் 2024 ஒப்பீடு) சந்தித்தது.
இன்று,நிஃப்டி மிட்கேப் 50யானது, 0.44% சரிந்தது. மேலும், நிஃப்டி ஸ்மால் கேப் 100இன் பங்குகளும் 0.97% சரிவை சந்தித்துள்ளன. இன்று, அதானி, ஏர்டெல், டெக் மஹிந்திரா, இன்டஸ்லண்ட் வங்கியின் பங்குகள் சற்று ஏற்றத்தை கண்டன.
நிஃப்டி குறியீட்டின் டாப் நஷ்டர்களான என்டிபிசி (2.71% சரிவு), ஹிந்துஸ்தான் யூனிலீவர் (2.35% சரிவு), ஹீரோ மோட்டோகார்ப் (2.01% சரிவு), கோல் இந்தியா (1.88% சரிவு), மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (1.72% சரிவு) ஆகியவை அடங்கும்.
சென்செக்ஸ் (BSE) :
டெக் மஹிந்திரா 1.67% வரையும், ஏர்டெல் 1.56% வரையிலும், இன்டஸ்லன்ட் வங்கி 1.31% வரையிலும், இன்ஃபோசிஸ் 0.92% வரையிலும், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் 0.66% வரையிலும் ஏற்றம் கண்டன.
என்டிபிசி 2.76% வரையிலும், ஹிந்துஸ்தான் யூனிலீவர் 2.42% அளவிலும், டாடா மோட்டார்ஸ் 1.59% வரையிலும், மாருதி சுஸுகி இந்தியா 1.42% வரையிலும் சரிவை சந்தித்தன (அக்டோபர் 2024 ஒப்பீடு) .
நிஃப்டி (NSE) :
அதானி எண்டர்பிரைசஸ் 1.91% வரையிலும், ஏர்டெல் 1.55% வரையிலும், டெக் மஹிந்திரா 1.52% வரையிலும், இன்டஸ்லன்ட் வங்கி 1.33% வரையிலும், அதானி போர்ட்ஸ் 0.83% வரையிலும் ஏற்றம் கண்டுள்ளன.
என்டிபிசி 2.71% வரையிலும், ஹிந்துஸ்தான் யூனிலீவர் 2.35% வரையிலும், ஹீரோ மோட்டோகார்ப் 2.01% வரையிலும், கோல் இந்தியா 1.88% சரிவு வரையிலும், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் 1.72% வரையிலும் சரிவை சந்தித்தன (அக்டோபர் 2024 ஒப்பீடு) .
ஒட்டுமொத்தமாக கணக்கிட்டால், மும்பை பங்குச்சந்தையில், ஸ்டார் சிமென்ட் (9.33%), சாலட் ஹோட்டல்கள் (9.16%), அதானி கிரீன் எனர்ஜி (6.15%), டாடா டெலிசர்வீசஸ் மகாராஷ்டிரா (5.65%) ஆகியவை லாபத்துடனும்,
நேஷனல் அலுமினியம் நிறுவனம் (-7.49%), ஹாட்சன் அக்ரோ தயாரிப்பு (-5.33%), ஜூபிலண்ட் ஃபுட்வொர்க்ஸ் (-5.21%), அச்யுத் ஹெல்த்கேர் (-4.94%), சன் டிவி நெட்வொர்க் (-4.62%) சரிவை சந்தித்துள்ளன.
தேசிய பங்குச்சந்தையில் (NSE) சாலட் ஹோட்டல்கள் (9.70%), அதானி கிரீன் எனர்ஜி (6.09%), BLS இன்டர்நேஷனல் சர்வீசஸ் (6.05%), டாடா டெலிசர்வீசஸ் மகாராஷ்டிரா (5.63%), செஞ்சுரி பிளைபோர்டுகள் (I) (4.73%) ஆகிய நிறுவனங்கள் ஏற்றத்துடனும்,
நேஷனல் அலுமினியம் கம்பெனி (-7.51%), ஜூபிலண்ட் ஃபுட்வொர்க்ஸ் (-5.04%), நுவாமா வெல்த் மேனேஜ்மென்ட் (-4.82%), இண்டஸ் டவர்ஸ் (-4.38%), அலெம்பிக் பார்மாசூட்டிகல்ஸ் (-4.21%) ஆகியவை சரிவை சந்தித்தன.
No comments yet.