- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
எதிர்பாரா நிதி தேவைகளுக்கான அவசர கடன்கள் : நன்மைகளும்… தீமைகளும்…
அவசர தேவைகளுக்கான கடன்களை வாங்குவதில் உள்ள சாதக, பாதகங்களையும், அதனை பெற உள்ள பொதுவான வழிமுறைகள் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

Author: Kanal Tamil Desk
Published: December 12, 2024
தனிப்பட்ட அவசர தேவைகளுக்காக ஒருவர் வாங்கும் கடன் அவசர கடன் என கூறபடுகிறது. இது ஒருவரின் எதிர்பாரா மருத்துவ செலவுகளாகவும், கல்வி செலவுகளாகவும் இருக்கலாம். இம்மாதிரியான அவசர கடனை நாம் ஆன்லைனில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. அதற்கு எப்படி விண்ணப்பிப்பது, என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும் என்பது குறித்து இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
அவசர கடன்கள் :
அவசர கடன்கள் என்பது ஒருவரின் திடீர் தேவைகளை பூர்த்தி செய்ய உருவாக்கப்பட்ட பாதுகாப்பற்ற தனிநபர் கடன்களாகும். வழக்கமான கடன்களுடன் ஒப்பிடுகையில், இந்த கடன்களை வாங்குவதற்கு குறைந்த அளவு ஆவணங்கள் மட்டுமே தேவைப்படுகிறது.
இந்த அவசரகால கடன்கள் மூலம் ஒருவர் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை பெற்றுக்கொள்ளலாம். தனிநபர் வருமானம் மற்றும் அவர் திருப்பி செலுத்த முடிந்த தொகை உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு அவசர கடன்களை பெற்றுக்கொள்ளலாம். ஆன்லைன் வாயிலாக கடன் வழங்கல் தளங்களின் மூலம் இக்கடன்களை பெற்றுக்கொள்வது தற்போது எளிதாகிவிட்டது.
விண்ணப்பிக்கும் வழிமுறை :
1.கடன் வழங்குநர்களை ஆராய்க
நம்பகமான கடன் வழங்குநர்களை முறையாக கண்டறிய வேண்டும். அவர்கள் வழங்கும் கடன் அளவு, அந்த நிறுவனத்தின் வட்டி விகிதம், திருப்பிச் செலுத்தும் கால அளவு மற்றும் இதற்கு முன்பு கடன் வாங்கிய வாடிக்கையாளர்கள் கூறிய கருத்துக்களை ஆய்வு செய்ய வேண்டும்.
2. பொதுவான தகுதிகள் (கடன் வழங்குநர்களின் தரவுப்படி) :
- வயது: 21-60 இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.
- நிலையான வருமானம் கொண்ட பணியாளராக இருக்க வேண்டும்.
- 650க்கு மேல் கிரெடிட் ஸ்கோர் (CIBIL) இருந்தால் அவருக்கு விரைவாகவே கடன் அனுமதி கிடைக்கும்.
3. தேவையான ஆவணங்கள் (பொதுவானவை) :
- அடையாளம்: ஆதார் அல்லது பான் அட்டை.
- முகவரி ஆவணம்.
- வருமான சான்றுகள்: சம்பள சீட்டு அல்லது வங்கிக் கணக்கு அறிக்கைகள்.
4. ஆன்லைன் விண்ணப்பம் :
ஒருவர் எந்த நிதி நிறுவனத்தில் கடன் வாங்கப்போகிறார்களோ முதலில் அந்த நிறுவனத்திற்கான அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது செயலியை நேரடியாக அணுக வேண்டும். அதில் உள்ள விண்ணப்பத்தை நிரப்பி, தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்க வேண்டும். தேவையற்ற இணையதள Link-ஐ தவிர்க்கவும்.
5. உடனடி அனுமதி :
பயனரின் விண்ணப்பம் தகுதியுடையதானால் சில நிமிடங்களில் அனுமதி கிடைக்கும். அனுமதி கிடைத்த 24 மணிநேரத்திற்குள் பயனரின் வங்கிக் கணக்கில் கடன் தொகை ஆன்லைன் வாயிலாக செலுத்தப்படும்.
ஆன்லைன் கடன்களின் பயன்கள் :
- விரைவான செயலாக்கம்
- சுலபமான செயல்முறை
- விருப்பமான கால அவகாசம்
- அடமானம் தேவையில்லை
ஆன்லைன் கடன்களின் குறைகள் :
- வட்டி விகிதம் அதிகம்
- கடன் மோசடிகள் : நம்பகமற்ற கடன் வழங்குநர்களை தவிர்த்து சரியான நிதி நிறுவனங்களை தேர்ந்தெடுக்கவும்.