- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
வார இறுதியில் ஏற்றம் கண்ட இன்றைய பங்குசந்தை நிலவரம்
மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் 843.16 புள்ளிகள் உயர்ந்து 82,133.12 எனவும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி, 219.60 புள்ளிகள் உயர்ந்து 24,768.30 எனவும் நிறைவு பெற்றுள்ளது.

Author: Kanal Tamil Desk
Published: December 13, 2024
வார இறுதி நாளில் இந்திய பங்குசந்தை இன்று (டிசம்பர் 13) ஏற்றத்துடன் நிறைவு பெற்றுள்ளது. நேற்று சிவப்பு நிறத்துடன் இறக்கத்தை குறித்த பங்குச்சந்தை இன்று குறிப்பிடதக்க ஏற்றத்தை கண்டு பச்சை நிறத்துடன் நிறைவு பெற்றது.
இந்திய பங்குச்சந்தை (NSE) நிஃப்டி குறியீடு எண் 219.60 (+0.89%) அளவுக்கு அதிகரித்து 24,768.30 என்ற அளவில் வர்த்தகம் நிறைவு பெற்றுள்ளது. இன்று முழுவதும் ஏற்றம் கண்ட நிஃப்டி குறைந்தபட்சம் 24,180.8 என்ற அளவிலும் அதிகபட்சமாக 24,792.3 என்ற அளவு வரையிலும் சென்றது.
மும்பை பங்குச்சந்தை (BSE) சென்செக்ஸ் 80,082.82 என்ற புள்ளி அளவில் இருந்து 82,213.92 என்ற புள்ளி வரம்பிற்குள் சென்றது. இறுதியில் 843.16 புள்ளிகள் (+1.04%) உயர்ந்து 82,133.12 இல் முடிவடைந்தது.
இந்திய பங்குச்சந்தை நிஃப்டி மிட்கேப்50 பங்குகள் 0.05% அளவுக்கு சிறிய சரிவை சந்தித்தன. இதேபோல், ஸ்மால் கேப் பங்குகளும் சற்று பின்தங்கின. நிஃப்டி ஸ்மால் கேப் 100ஆனது 0.3% அளவுக்கு குறைந்தது.
சென்செக்ஸ்:
BSE சென்செக்ஸில் பார்தி ஏர்டெல் (+4.39%), ஐடிசி (+2.07%), கோடக் மஹிந்திரா வங்கி (+2.06%), ஹிந்துஸ்தான் யூனிலீவர் (+1.92%), அல்ட்ராடெக் சிமென்ட் (+1.87%) ஆகிய பங்குகள் ஏற்றத்தை கண்டன.
டாடா ஸ்டீல் (-1.26%), இன்டஸ்லன்ட் வங்கி (-1.09%), பஜாஜ் ஃபின்சர்வ் (-0.15% ச) ஆகிய நிறுவனங்கள் சற்று சரிவை சந்தித்தன.
நிஃப்டி:
NSE நிஃப்டியில், ஏர்டெல் (+4.42%), கோட்டக் மஹிந்திரா வங்கி (+2.09%), ஐடிசி (+2.04%), ஹிந்துஸ்தான் யூனிலீவர் (+1.93%), அல்ட்ராடெக் சிமென்ட் (+1.91%) ஆகிய நிறுவனங்கள் ஏற்றத்தை கண்டன.
ஸ்ரீராம் ஃபைனான்ஸ் (-2.63% சரிவு), டாடா ஸ்டீல் (-1.21%), இண்டஸ்லண்ட் வங்கி (-1.13%), ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் (-0.99%), JSW ஸ்டீல் (-0.59%) ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்தன.