- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
முன்கூட்டியே வருமான வரி செலுத்துவோர் கவனத்திற்கு… வருமான வரித்துறை முக்கிய அறிவிப்பு!
முன்கூட்டியே வருமானவரி செலுத்துவோர் தங்களது 3வது தவணையை டிசம்பர் 15, 2024-க்குள் செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது. காலம் தவறினால் மாதம் 1% வீதம் அபராதம் விதிக்கப்படும்.

Author: Kanal Tamil Desk
Published: December 16, 2024
ஒவ்வொரு நிதியாண்டும் ஏப்ரல் 1 முதல் அடுத்த ஆண்டு மார்ச் 30வரையில் கணக்கிடப்படும். இதில் ஒவ்வொரு 3 மாதமும் ஒரு காலாண்டு எனவும், 6 மாதங்கள் என்பவை அரையாண்டு எனவும் கணக்கிடப்படும்.
இந்திய வருமானவரி சட்டத்தின் கீழ் வருமானவரி செலுத்துவோரில் நிதியாண்டு இறுதியில் வருமானத்தை கணக்கிட்டு அதன் பிறகு வரி செலுத்துவோரை தவிர்த்து, ஆண்டு தோறும் குறிப்பிட்ட தொகையை நிலையாக வருமான வரி செலுத்துவோர் தங்கள் வரியை நிதியாண்டில் இறுதி வரையில் அல்லாமல் முன்கூட்டியே செலுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஒருவர் ஒவ்வொரு நிதியாண்டில் ரூ.1 லட்சம் வரையில் வரி செலுத்துவார் என்றால், அவர் அதனை 4ஆக பிரித்து ஒவ்வொரு காலாண்டு இறுதிக்குள்ளும் குறிப்பிட்ட கால கெடுவுக்குள் வரி செலுத்த வேண்டும். ஒவ்வொரு காலாண்டிலும் அவர் அல்லது வரி செலுத்தும் நிறுவவனம் மாதம் ரூ.25 ஆயிரம் (உதாரணமாக) செலுத்த வேண்டும். இதுவே முன்கூட்டியே வரி செலுத்தும் முறையாகும்.
கால இடைவெளி :
முதல் காலாண்டு - ஜூன் 15 : நிதியாண்டு வரியில் 15% செலுத்த வேண்டும்.
2ஆம் காலாண்டு - செப்டம்பர் 15 : நிதியாண்டு வரியில் 45% செலுத்த வேண்டும்.
3ஆம் காலாண்டு - டிசம்பர் 15 : நிதியாண்டு வரியில் 75% செலுத்த வேண்டும்.
4ஆம் காலாண்டு - மார்ச் 15 : நிதியாண்டு வரியில் 100% செலுத்த வேண்டும்.
வருமானவரித்துறை அறிவிப்பு :
மேற்கண்ட தகவலின்படி, மத்திய வருமானவரித்துறை ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், முன்கூட்டியே வரி (Advance Tax) செலுத்துவோர் தங்கள் 3வது தவணையை டிசம்பர் 15ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அபராதம் :
வருமானவரித்துறை குறிப்பிட்டுள்ள தேதியை தவறி, வரி செலுத்தினால் மாதம் 1% வீதம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரி செலுத்த தவறினால், வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 234B மற்றும் 234C கீழ் மேற்கண்ட வட்டி விதிக்கப்படும்.
ஒரு நாள் தவறினாலும் இந்த 1% மாத வட்டி அபராதம் வசூல் செய்யப்படும்.
பயன்கள் :
நிதியாண்டு இறுதியில் பெரிய தொகையை வருமானவரியாக செலுத்தாமல், பகுதி பகுதியாக பிரித்து வரி செலுத்தலாம். இதன்மூலம் வரி செலுத்துவது எளிதாகும்.
தொடர்ச்சியான இடைவெளியில் வரி கிடைப்பதால் அரசுக்கு தொடர் வருவாய் கிடைக்கும்.
60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த முறைப்படி வரி செலுத்தும் முறையில் இருந்து விலக்கு அளிக்கப்டுகிறது.