தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Logo

Saturday, Apr 19, 2025 | India

Home / நிதி

வருமான வரி இல்லாமல் ஒரு நாளில் எவ்வளவு பணபரிவர்த்தனை செய்யலாம்? விவரம் இதோ!

வருமான வரி விதிப்படி வருமானவரி செலுத்தாதோரின் சேமிப்புக் கணக்குகளில் ரொக்கப் பரிவர்த்தனைகள் ஒரு ஆண்டுக்கு ரூ.10 லட்சத்திற்கு குறைவாக இருக்கவேண்டும் என பொருளாதர வல்லுநர்கள் கூறுகின்றனர்.

News Image

Author: Kanal Tamil Desk

Published: December 17, 2024

ஒருவர் மாத ஊதியத்திற்கு ஒரு வங்கி கணக்கு, மற்ற பரிவர்த்தனைகளுக்கு வெவ்வேறு வங்கி கணக்குகள் என வைத்துக்கொண்டு எவ்வளவு பரிவர்த்தனை மேற்கொண்டாலும் அவை பான் கார்டு மூலம் வருமானவரித்துறை மூலம் முழுதாக கண்காணிக்கப்படும்.   

இதனால், நமது ஊதியம் இதுதான், இதனை கணக்கிட்டு வருமானவரி செலுத்தாமல் இருந்துவிடலாம் என்று யாரும் இருந்துவிட முடியாது. அனைத்தையும் வருமான வரித்துறை கண்காணித்து வரும். ஒரு வருடத்திற்கு ரூ.10 லட்சம் வரையில் மட்டுமே ரொக்க பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும். அதற்கு மேல் என்றால் அதற்குரிய வருமான வரியை கட்ட வேண்டும். 

ரொக்கப் பரிவர்த்தனை அளவு :  

  • ஒரு வருடத்திற்கு ரூ.10 லட்சதிற்கு மேலாக பரிவர்த்தனை மேற்கொள்கிறீர்கள் என்றால் வருமான வரித்துறையில் இருந்து கேள்விகள் வரும். அதற்கு சரியாக பதிலளிக்க வேண்டும்.
  • ஒருவர் எத்தனை வங்கிகளில் சேமிப்புக் கணக்கு வைத்திருந்தாலும், அவற்றில் செய்யப்படும் மொத்த பரிவர்த்தனைகள் சேர்த்து ரூ.10 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

வங்கியின் கடமை : 

  • ஒருவர் தனது சேமிப்பு கணக்கில் ஆண்டுக்கு ரூ.10 லட்சத்தை மீறி பரிவர்த்தனை மேற்கொண்டால் வங்கிகள் இந்த தகவலை வருமான வரித்துறைக்கு (Income Tax Department) தானாகவே தெரிவித்துவிடும். 
  • இது குற்றமாகக் கருதப்படுவதில்லை. ஆனால், அவரது பரிவர்த்தனைகளுக்கு வருமான வரி அதிகாரிகளிடம் விளக்கம் அளிக்க வேண்டும். அதற்குரிய செலவுகள் விதிகளின் படி ஏற்றுக்கொள்ளும்படி இருந்தால் வரி செலுத்த வேண்டியதில்லை. இல்லையென்றால் வருமான வரி செலுத்த வேண்டும். 

ஒரே நாள் வரம்பு (பிரிவு 269ST) :

வருமான வரி செலுத்தாத நபரின் வங்கி கணக்கில் ஒரே நாளில், ரூ.2 லட்சம் அல்லது அதற்கு மேல் பரிவர்த்தனை மேற்கொள்ள அனுமதியில்லை. இது அனைத்து தனி நபர் பரிவர்த்தனைக்கும் பொருந்தும். 

ஒருவர் தனது வீட்டு விஷேசத்திற்காக கூட ஒரே நாளில் ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக பரிவர்த்தனை மேற்கொள்ள அனுமதி இல்லை.

மேலும், வியாபாரத்தில் ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்க பரிவர்த்தனை செய்யவும் அனுமதி இல்லை.

மீறினால் என்ன நடக்கும்?

இந்த வருமான வரித்துறை விதிகளை மீறுவது சட்டத்தை மீறிய செயலாக கருதப்படுகிறது.

விதிமீறல் தொடர்பாக வருமான வரி துறையால் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதோடு, விதிமீறல் நிரூபிக்கப்பட்டால் அதற்கான அபராதம் செலுத்த வேண்டி இருக்கும்.

பான் எண் (PAN) கட்டாயம் : 

ஒருவர் தனது சேமிப்புக் கணக்கில் ரூ.50 ஆயிரம் அல்லது அதற்கு மேல் டெபாசிட் செய்யும் போது, அவரது பான் எண்ணை (Permanent Account Number) வழங்க வேண்டும்.

வங்கி பரிவர்த்தனைகள் அனைத்தையும் வரித்துறை கண்காணிக்க ஏதுவாக பான் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பான் எண் இல்லாவிட்டால்:

பான் எண் இல்லை என்றால், படிவம் 60 அல்லது 61-ஐ பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.படிவம் 60 – நீங்கள் வரி செலுத்தத் தேவையில்லாதவராக இருந்தால் பயன்படுத்தப்படும். படிவம் 61 – நீங்கள் பான் எண்ணை இன்னும் பெறாத நிலையில் பயன்படுத்தப்படும்.

ரூ.10 லட்சத்தை மீறினால் என்ன நடக்கும்?

ஆண்டுக்கு ரூ.10 லட்சத்தை மீறும் பரிவர்த்தனைகள் அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகள் என்று கருதப்படும். இவை பிரிவு 114B-ன் கீழ் வருமான வரி துறையிடம் தகவல் தெரிவிக்கப்படும். 

சட்டத்தை மீறினால் வருமான வரித்துறையிடமிருந்து அறிவிப்பு (Notice) வரும். அதற்காக அந்த நபர் பதில் சொல்ல வேண்டிய நிலை வரும்.

வருமான வரி அறிவிப்புக்கு (Notice) எப்படி பதிலளிப்பது?

தேவையான ஆவணங்கள்:

  • வங்கி அறிக்கைகள் (Bank Statements).
  • முதலீட்டு ஆதாரங்கள் (Investment Records).
  • பரம்பரை மற்றும் கொடை ஆவணங்கள் (Inheritance Documents).
  • வரி செலுத்திய விவரங்கள் (Tax Payment Proofs).

ஆலோசனை பெறுவது :

நீங்கள் உறுதியாக உங்கள் வருமானத்தை விளக்க முடியாவிட்டால், அனுபவமிக்க வரி ஆலோசகரின் (Tax Advisor) உதவியை பெறுங்கள். அவர்களின் வழிகாட்டுதலால், நீங்கள் வருமான வரி சட்டரீதியாகப் பதிலளிக்க முடியும்.

Tags:Income TaxIncome Tax DepartmentTax