தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Logo

Saturday, Apr 19, 2025 | India

Home / நிதி

“PF பணத்தை இனி ATM-ல் பெறலாம்” மத்திய அமைச்சகம் புதிய தகவல்!

2025 செப்டம்பர் மாதம் முதல் EPFO சந்தாதாரர்கள், ATM மூலம் தங்கள் PF பணத்தை எடுத்து கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

News Image

Author: Kanal Tamil Desk

Published: December 17, 2024

மத்திய தொழிலாளர் நலத்துறையின் கீழ் இயங்கும் EPFO (Employees’ Provident Fund Organisation) அமைப்பில் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் PF சேமிப்பை மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் பல்வேறு நிதி சேமிப்பு நன்மைகளையும் அவர்கள் பெற்று வருகின்றனர்.  

EPFO-ல் கணக்கு வைத்திருக்கும் தொழிலாளர்களுக்கு தனிப்பட்ட கணக்கு எண் கொடுக்கப்பட்டிருக்கும். அது தற்போது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கில் இருந்து தொழிலாளர்கள் அட்வான்ஸ் போன்ற  தொகை பெற வேண்டும் என்றால் ஆன்லைன் வாயிலாக கோரிக்கை வைக்க வேண்டும். பிறகு சில தினங்களில் இந்த தொகை பயனரின் வங்கி கணக்கிற்கு பரிவர்த்தனை செய்யப்படும். 

இந்த நடைமுறையில் தற்போது மத்திய அமைச்சகம் சற்று மாற்றம் கொண்டுவர உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. EPFO (Employees’ Provident Fund Organisation) சந்தாதாரர்கள், 2025 முதல் ATM-களின் மூலம் அவர்களின் PF பணத்தை நேரடியாக பெற்றுக்கொள்ள முடியும் என்கிற முக்கிய தகவலை பகிர்ந்துள்ளது. 

PF சேமிப்பில் சேரும் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சேவைகளை மேம்படுத்த மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம், தங்களுடைய தகவல் தொழில்நுட்ப (IT) அமைப்புகளை மேம்படுத்தி வருகிறது என்றும், இந்த புதிய மேம்படுத்துதல் மூலம், PF பணத்தை திரும்ப பெறுவது எளிதாகவும், மற்றவர்களை நம்பி இருக்கும் சூழ்நிலையும் குறைக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ATM மூலம் PF பணம் : 

மத்திய தொழிலாளர் நலத்துறை செயலாளர் சுமிதா தவ்ரா இது குறித்து பேசுகையில், “EPFO சந்தாதாரர்களுக்கு சேவைகளை மேலும் வசதியாக்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தற்போது அதற்கான வேலைகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறோம். PF பணத்தை பயனர்கள் கையாளும் முறையை எளிதாக்கவும், பயனர்கள் தங்கள் பணத்தை பெற முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு ATM மூலம் தாமதமின்றி PF பணத்தை பெற உதவும் வசதியை நடைமுறைப்படுத்த முயற்சி செய்கிறோம்.” என்று தெரிவித்தார்.

மேலும் குறிப்பிடுகையில், இந்த முயற்சி அதிகபட்சமாக 2025 செப்டம்பர் மாதத்திற்குள் ஒரு முக்கிய மேம்படுத்துதலை காணும் என்றும், பயனர்கள் EPFO சேவைகளை எளிதில் பெறுவதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். EPFO-ல் 7 கோடிக்கும் மேற்பட்ட சந்தாதாரர்கள் உள்ளனர்.

பகுதிநேர ஊழியர்களுக்காக…

பகுதிநேர (Gig) மற்றும் தினசரி ஊதிய பணியாளர்களுக்கான தொழில் பாதுகாப்பு வழங்கும் திட்டம் இறுதிகட்டத்தில் உள்ளது என்றும், இதில் மருத்துவ காப்பீடு, PF சேவைகள் மற்றும் தொழிலாளர் நலத்துறையின் அவசரகால உதவி போன்ற சலுகைகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்தார்.

வேலைவாய்ப்பு விகிதம் :

சுமிதா தவ்ரா மேலும் கூறுகையில், 2017-ல் வேலைவாய்ப்பின்மை விகிதம்  6% ஆக இருந்தது. தற்போது அது 3.2%ஆக குறைந்துள்ளது. என்றும், தொழிலாளர்களின் PF பங்கு விகிதம் 58%ஆக அதிகரித்துள்ளதையும் அவர் குறிப்பிட்டார்.

இந்த மாற்றங்களின் மூலம், EPFO சேவைகளை பயனர்களுக்கு வேகமாகவும் பாதுகாப்பான முறையிலும் வழங்க மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் மத்திய தொழிலாளர் நலத்துறை செயலாளர் சுமிதா தவ்ரா கூறினார்.

Tags:Union Ministry of Labour and WelfareEPFOPFProvident Fund