- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
தொடர் வீழ்ச்சியில் இந்திய பங்குசந்தை! இன்றைய நிலவரம் என்ன?
இன்றைய பங்குசந்தை நிலவரப்படி, தேசிய பங்குச்சந்தை (NSE) நிஃப்டி 247.15 புள்ளிகள் சரிந்து 23,951.70 என்ற நிலையிலும், மும்பை பங்குச்சந்தை (BSE) சென்செக்ஸ் 964.15 புள்ளிகள் சரிந்து 79,218.05 என்ற நிலையிலும் இருந்தது.

Author: Kanal Tamil Desk
Published: December 19, 2024
இந்திய பங்குச்சந்தை இந்த வாரம் தொடர் சரிவை சந்தித்து வருகிறது. தொடர்ந்து நான்காவது நாளாக பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்து வருகிறது. அதுவும் இந்தவாரம் இதுவரை இல்லாத அளவில் சென்செக்ஸ் சுமார் 1200 புள்ளிகள் வரை சரிந்தது. கடந்த நான்கு நாட்களில் மட்டும் சென்செக்ஸ் 3.5% சதவீதம் வரையிலும் நிஃப்டி 50, 3.3% அளவுக்கும் சரிவை சந்தித்துள்ளது.
சென்செக்ஸ் இன்று 1,162 புள்ளிகள் வரை சரிந்து 79,020.08 என்ற அளவு வரை சென்றது. அதேபோல் நிஃப்டி 329 புள்ளிகள் வரை குறைந்து 23,870 வரை சரிவை சந்தித்தது.
இன்றைய பங்கு சந்தை (டிசம்பர் 19) நிலவரப்படி, தேசிய பங்குச்சந்தை (NSE) நிஃப்டி 247.15 புள்ளிகள் சரிந்து 23,951.70 என்ற நிலையிலும், மும்பை பங்குச்சந்தை (BSE) சென்செக்ஸ் 964.15 புள்ளிகள் சரிந்து 79,218.05 என்ற நிலையிலும் முடிவு பெற்றது.
துறைசார்ந்து பார்க்கையில், இந்திய பங்குசந்தை நிஃப்டியில், வங்கித்துறை, நிதிச் சேவைகள் துறை, ஐடி துறை மற்றும் FMCG எனும் நுகர்வோர் பொருள்கள் துறை ஆகியவை இன்று சரிவை சந்தித்தன. அதேநேரம் மருந்து துறை மட்டும் 2 சதவீதம் அளவுக்கு உயர்வை சந்தித்தன.
அமெரிக்க மத்திய வங்கியின் செயல்பாடு, இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளை தொடர்ந்து விற்று வருவது, நாட்டின் உள்நாட்டு வர்த்தக பற்றாக்குறை அதிகரிப்பு, இந்திய பொதுத்துறை நிறுவனங்களின் முதல் 2 காலாண்டில் போதிய வளர்ச்சியை அடையாமை ஆகியவை இந்த வார பங்குச்சந்தை வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தன என்கிறார்கள் பங்குச்சந்தை நிபுணர்கள்.