- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
ஆந்திரா - தெலுங்கானா : ஜனவரி 1 முதல் ஒன்றிணைக்கப்படும் 2 கிராம வங்கிகள்!
தெலுங்கானாவில் உள்ள ஆந்திர பிரதேச கிராம விகாஸ் வங்கியானது, 2025 ஜனவரி 1ஆம் தேதி முதல் தெலுங்கானா கிராம வங்கியுடன் இணைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Author: Kanal Tamil Desk
Published: December 30, 2024
தெலுங்கானாவில் 493 கிளைகள் கொண்ட ஆந்திர பிரதேச கிராம விகாஸ் வங்கியானது (Andhra Pradesh Grameena Vikas Bank - APGVB) தெலுங்கானா கிராம வங்கி (Telangana Grameena Bank - TGB) ஆகிய இரண்டு வங்கிகளும் 2025ஆம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் இணைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திர பிரதேசத்தில் இயங்கும் 278 ஆந்திர பிரதேச கிராம விகாஸ் வங்கி கிளைகளும், ஆந்திர பிரதேச கிராம விகாஸ் வங்கி (APGVB) என்ற பெயரிலேயே தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா கிராம வங்கி 435 கிளைகளை கொண்டுள்ளது. இணைப்புக்கு பிறகு TGB-ன் மொத்த கிளை எண்ணிக்கை 928ஆக உயரும்.
இந்த வங்கி இணைப்பு நடவடிக்கையானது மத்திய நிதியமைச்சகத்தின் முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இப்படி இரண்டு வங்கிகளை இணைப்பதன் மூலம் கிராமப்புற வங்கிகளின் செயல்திறனை மேம்படுத்தவும், அதன் செலவுகளை குறைக்கவும் முடியும் என கூறப்படுகிறது. இரண்டு வங்கிகளும் ஒன்றாக இணைக்கப்படுவதால் ஏற்படும் பயன்கள் மற்றும் அதற்கான நோக்கங்கள் என்னவென்பதை காணலாம்…
வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு…
இரண்டு வங்கிகளும் ஒன்றாக இணைக்கப்படுவதன் காரணமாக டிஏம் பணம் எடுத்தல், யூபிஐ பரிவர்த்தனை, மொபைல் வங்கி பரிவர்த்தனை, இணைய வங்கி சேவைகள் மற்றும் வாடிக்கையாளர் சேவை மையங்கள் ஆகியவை இணைப்பு காலத்தில் செயல்படாமல் இருக்கும்.
அவசர தேவைகளுக்கு, வாடிக்கையாளர்கள் டிசம்பர் 30 மற்றும் 31-ம் தேதிகளில், தாங்கள் கணக்கு வைத்திருக்கும் கிளைகளுக்கு நேரடியாக சென்று ரூ.5 ஆயிரம் வரை பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.
வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்திருக்கும் கிளை தவிர வேறு கிளைகளில் பரிவர்த்தனைகள் அனுமதிக்கப்படமாட்டாது.
டெபிட் கார்டு மாற்றம் :
- மேற்கண்ட வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் புதிய டெபிட் கார்டுகளைப் பெற, வாடிக்கையாளர்கள், ஜனவரி 1, 2025க்கு பிறகு தங்கள் வங்கி கிளைகளுக்கு நேரடியாக சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
மொபைல் வங்கி பயன்பாடு :
- ஆந்திர கிராம வங்கி மொபைல் சேவை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தெலுங்கானா கிராம வங்கி மொபைல் சேவையான “TGB Mobile Banking” ஆப்பைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
காசோலைகள் மற்றும் டிடி (DD):
- 2024 டிசம்பர் 31 வரை வழங்கப்பட்ட APGVB காசோலைகள் மற்றும் டிடிக்கள் 2025 மார்ச் 31 வரை செல்லும்.
- வாடிக்கையாளர்கள் ஜனவரி 1, 2025 முதல் புதிய தனிப்பட்ட காசோலை புத்தகங்களைப் பெற வேண்டும்.
உதவிக்கான தொடர்புகள் :
- வாடிக்கையாளர்கள் www.tgbhyd.in இணையதளத்தில் சென்று அல்லது அருகிலுள்ள கிளையினை தொடர்பு கொண்டு இந்த இணைப்பு நடவடிக்கை பற்றிய மேலும் சில தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.
வாடிக்கையாளர்களுக்கான அறிவுரைகள் :
1.தலைமையக மாற்றங்கள்:
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள முன்னாள் APGVB கிளை வாடிக்கையாளர்கள், தங்களின் ATM கார்டுகளை மாற்றிக்கொள்ளவும், மொபைல் வங்கி, இணைய வங்கி மற்றும் யூபிஐ சேவைகளுக்கு மீண்டும் பதிவு செய்ய தங்கள் கிளைகளை நேரடியாக அணுக வேண்டும்.
2.வழங்கப்படும் சேவைகள்:
புதிய வங்கி அமைப்பின் கீழ், வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட சேவைகள் வழங்கப்படும்.
வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய வங்கி சேவைகளை இடைநிறுத்த காலத்திற்கு முன்பே திட்டமிட வேண்டும் என வங்கி தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நோக்கங்கள் :
1.வங்கி செயல்திறனை மேம்படுத்துவதற்காக இரண்டு வங்கிகளும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது.
2.“ஒரு மாநிலம் - ஒரு கிராம வங்கி” கொள்கை செயல்படுத்துவதற்காக.
3.நிர்வாக செலவுகளை குறைத்து, அதன் மூலம் வங்கி வளங்களை சிறப்பாகப் பயன்படுத்துதல்.
4.வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட சேவைகள் வழங்குவதற்காக.
பயன்கள்
1.மேம்பட்ட சேவைகள்: வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகள் மற்றும் சேவைகள் கிடைக்கும்.என்னென்ன சலுகைகள் கிடைக்கும் என்பது பற்றி வரும் காலங்களில் வங்கி தரப்புஅதிகாரபூர்வமாக தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2.செலவு குறைப்பு: வங்கியின் பணிச்செலவுகள் குறையும்.
3.இணைய சேவைகள்: ஒருங்கிணைந்த மொபைல் மற்றும் இணைய வங்கி சேவைகள் வழங்கப்படும்.
4.தரமான வசதிகள்: வாடிக்கையாளர்களுக்கு சிறந்த கடன் மற்றும் சேமிப்பு திட்டங்கள் கிடைக்கும்.