- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
#5DaysBanking : 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டம்! AIBOC அதிகாரபூர்வ அறிவிப்பு!
வாரத்தில் 5 நாட்கள் மட்டும் வேலை என்ற கோரிக்கையை முன்னிறுத்தி பிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக AIBOC அதிகாரபூர்வமாக முதற்கட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Author: Kanal Tamil Desk
Published: January 9, 2025
வாரத்தில் 5 நாட்கள் மட்டும் வேலை நாள் என்ற கோரிக்கை வங்கி ஊழியர்களின் நீண்ட நாள் கனவாகவே இருந்து வருகிறது. வேலைப்பளு, ஊழியர்களின் மனச்சோர்வு, ஊழியர்களின் வேலை - தனிபட்ட வாழ்க்கை சமநிலை பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை குறிப்பிட்டு இந்த கோரிக்கை வலுத்து வருகிறது.
இதுவரையில் ‘வாரத்தில் 5 நாட்கள் வேலை நாள் ’ என்ற கோரிக்கை குறித்து அரசிடம் இருந்து எந்தவித இசைவும் கிடைக்கப்பெறவில்லை. எதிர்பார்த்து காத்திருக்கும் ஊழியர்களுக்கு தற்போது வரையில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
கடந்த 2025 டிசம்பர் மாதத்திலேயே வாரத்தில் 5 நாட்கள் வேலை என்ற கோரிக்கை நிறைவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய வங்கிகள் கூட்டமைப்பு (IBA) மற்றும் வங்கி ஊழியர்கள் சங்கம் (UFBU) ஆகியவை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஆனாலும் எந்தவித நடவடிக்கையும் இதுவரையில் நடந்தபாடில்லை.
நமக்கு கிடைத்த தகவல்…
இதனை அடுத்து நமது கனல் செய்தி நிறுவனத்திற்கு ஜனவரி 7ஆம் தேதியன்று கிடைக்கப்பெற்ற தகவலின்படி, ‘வாரத்தில் 5 நாட்கள் வேலை நாள்’ என்ற நீண்ட நாள் கோரிக்கையை முன்னிறுத்தி வரும் பிப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாள் முழு வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தப்போவதாக AIBOC (All India Bank Officers Confederation) தலைமையிடம் இருந்து தகவல் வெளியாகியது.
அதிகாரபூர்வ அறிவிப்பு :
அந்த தகவல் தற்போது உறுதியாகியுள்ளது. வங்கி ஊழியர்களின் நாடு தழுவிய 2 நாள் வேலை நிறுத்த போராட்டம் குறித்து AIBOC ஜனவரி 9-ல் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் பிப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது என்பதை அறிவித்துள்ளனர்.
ஜனவரி 9, 2025 அன்று தேதியிடப்பட்ட AIBOC அறிக்கையின்படி, மும்பையில் நவம்பர் 12, 2024 அன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தை தொடர்ந்து AIBOC-ன் 102வது செயற்குழு கூட்டம் ஜனவரி 6, 2025 அன்று ஆன்லைன் வழியாக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
வங்கி ஊழியர்களை பாதிக்கும் பிரச்சனைகள் குறித்தும், இது தொடர்பாக எங்களுடைய அடுத்தகட்ட நகர்வுகள், போராட்டங்கள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

போராட்டத்தின் குறிக்கோள்கள் :
- அனைத்து வங்கி துறைகளிலும் போதுமான ஆட்கள் சேர்க்கப்பட வேண்டும்.
- வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை என்ற கோரிக்கையை அமல்படுத்த வேண்டும்.
- PSBயின் சுயாட்சியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் செயல்திறன் மதிப்பாய்வு மற்றும் PLI தொடர்பான சமீபத்திய DFS உத்தரவுகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
- தனிப்பட்ட தாக்குதல்கள், முறைகேடுகள் உள்ளிட்டவையிலிருந்து வங்கி ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
- PSB-களில் காலியாக உள்ள பணியாளர்கள்/அதிகாரிகள், இயக்குநர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
- IBA உடன் நிலுவையில் பல்வேறு சிக்கல்களுக்கு தீர்வு காண வேண்டும்.
- அரசு ஊழியர்களுக்கான திட்டப்படி வருமான வரி விலக்கு உச்சவரம்பானது ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும்.

2 நாள் வேலைநிறுத்தம் :
மேற்க்கண்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட செயற்குழு கூட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. தேவைப்பட்டால், இன்னும் கடுமையான போராட்ட நடவடிக்கைகள் தொடரலாம் என்றும், இந்த மாதம் வேலைநிறுத்த அறிவிப்பு வெளியானவுடன் அடுத்தகட்ட போராட்ட நிகழ்வுகள் தொடங்கும் என்றும்,
விரிவான போராட்டத் திட்ட அறிவிப்புகள் அனைத்து மாநிலங்கள் மற்றும் மற்ற வங்கி சங்க அமைப்புகளுடன் விரைவில் பகிரப்படும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு அனைத்து வங்கி துணை அமைப்புகளும் தயாராக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றும், AIBOC-ன் தீர்மானங்களைத் தெரிவிக்கவும், கூட்டு நடவடிக்கையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும் அனைத்து பகுதிகளிலும் உடனடி கூட்டங்களை நடத்தவும். வங்கி ஊழியர்களின் ஒற்றுமையை வலுப்படுத்தவும், ஒவ்வொரு பிரச்சினையிலும் எங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவும், வரவிருக்கும் முயற்சிகளுக்கு அர்ப்பணிப்பை ஊக்குவிக்கவும். மாவட்ட மற்றும் கிளை மட்டங்களில் உறுப்பினர்களை அமைப்பதன் மூலம் அடிமட்ட அளவிலான ஈடுபாடுகளைத் தொடங்குங்கள் என வங்கி ஊழியர்கள் சங்கத்தினருக்கு AIBOC அறிக்கை வாயிலாக வலியுறுத்தியுள்ளது.
4 நாட்கள் வங்கி செயல்படாது
பிப்ரவரி 22ஆம் தேதி நான்காம் சனிக்கிழமை என்பதால் வழக்கமான வங்கி விடுமுறை, அடுத்த நாள் பிப்ரவரி 23 ஞாயிறு பொது விடுமுறை என்பதால் பிப்ரவரி 22 முதல் 25ஆம் தேதி வரையில் 4 நாட்கள் நாடு முழுவதும் வங்கிகள் இயங்காது என கூறப்பட்டுள்ளது.