- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
வங்கி ஊழியர்களின் நீண்டகால கோரிக்கைகள்! போராட்டத்திற்கு தயாராகும் AIBEA!
வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை, வங்கி காலிப்பணியிடங்களில் போதுமான ஆட்சேர்ப்பு மற்றும் பணியாளர் பாதுகாப்பு ஆகியவற்றைக் கோரி நாடு தழுவிய போராட்டத் திட்டத்தை AIBEA முன்னெடுத்துள்ளது

Author: Kanal Tamil Desk
Published: January 18, 2025
அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் (AIBEA), வங்கித் துறையில் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவேண்டும் என்ற நோக்கத்தோடு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே வரும் பிப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு (AIBOC) இரண்டு நாள் நாடு தழுவிய வேலைநிறுத்ததிற்கு அழைப்பு விடுத்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கையை AIBEA முன்னெடுத்துள்ளது.
இந்த போராட்ட அறிவிப்புகான முக்கியமான காரணமாக பார்க்கப்படுவது இந்திய வங்கித் துறையில் பணியாளர்களின் எண்ணிக்கை குறைபாடு மற்றும் தொழிலாளர் நலன்களைச் சார்ந்து சந்திக்கும் முக்கிய பிரச்சனைகள் பற்றி தான். இதைப் பற்றிய கூடுதல் விவரங்களை இதில் காணலாம்….
முக்கிய விவரங்கள்
1. வேலைநிறுத்த போராட்டம் :
அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் (AIBEA) முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி போராட்ட திட்டத்தை அறிவித்துள்ளது. ஏற்கனவே அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு (AIBOC) பிப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், இது பிப்ரவரி மாத இறுதி நாட்களுடன் சேர்ந்த 4 நாட்கள் வங்கி சேவைகளை பாதிக்கும் என்பதால், இது குறித்து விரைவாக முடிவுகள் எடுக்கப்படலாம் என AIBEA சார்பில் கூறப்படுகிறது.
2. AIBEA வின் கோரிக்கைகள் :
- வாரத்தில் 5 நாட்கள் வேலை என்ற கோரிக்கையை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்பது நீண்ட கால போராட்டமான ஒரு விஷயமாக உள்ளது. எனவே, அதனை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.
- ஊழியர்களின் தட்டுப்பாட்டிற்கு தீர்வு காண, கிளார்க் மற்றும் மற்ற அதிகாரி பணியிடங்களில் போதுமான ஆட்களை சேர்க்க வேண்டும்.
- வழக்கமான மற்றும் நிலையான வேலைகளை தற்காலிக பணியாளர்களுக்கு வழங்கும் முறையை நிறுத்த வேண்டும்.
- வங்கிப் பணியாளர்கள் மீது அதிகரிக்கும் வாடிக்கையாளர் தாக்குதல்களுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
- பொதுத்துறை வங்கிகளில் போதுமான உயர்நிலை பணியாளர்கள் மற்றும் தலைமை இயக்குநர் இடங்களை நிரப்ப வேண்டும்.
- புதிய தேசிய ஓய்வூதிய திட்டத்தால் (NPS) பாதிக்கப்படுபவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தில் (Old Pension Scheme) நீட்டிக்க செய்ய வேண்டும்.
- வருமான வரி சட்டத்தில் திருத்தம் செய்து, வங்கி ஊழியர்களுக்கான வருமான வரி விலக்கு உச்சவரம்பை ரூ.25 லட்சம் வரை உயர்த்த வேண்டும்.

பொதுத்துறை வங்கிகளில் ஊழியர்கள் குறைவு :
2013 முதல் 2024 வரை, பொதுத்துறை வங்கிகளில் ஊழியர்கள் எண்ணிக்கையானது குறைந்துள்ளது.
- கிளார்க் பணியாளர்கள் : 1,51,836 என்ற அளவு குறைவு (3,98,801இல் இருந்து 2,46,965ஆக குறைவு).
- துணை பணியாளர்கள் : 59,280 குறைவு (1,53,628இல் இருந்து 94,348ஆக குறைவு).
வணிகம் லாபம், புதிய கிளைகள் ஆகியவை அதிகரித்தாலும், பணியாளர்களின் எண்ணிக்கைகுறைவாக உள்ளதால் தற்போதைய ஊழியர்கள் அதிக பணிச்சுமையுடன் போராடி வருகின்றனர் என AIBEA தெரிவித்துள்ளது.
பின்னணி மற்றும் ஒருங்கிணைப்பு:
AIBEA -ன் போராட்ட திட்டம் மும்பையில் சமீபத்தில் நடந்த கருத்தரங்கில் 12வது பேச்சுவார்த்தை ஒப்பந்த (Bipartite Settlement) பேச்சுகளிலும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளின் தொடர்ச்சியாக உள்ளது. United Forum of Bank Unions (UFBU) யின் மற்ற சங்கங்களுடன் இணைந்து ஆலோசித்து ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என AIBEA தெரிவித்துள்ளது.
பிப்ரவரியில் வேலைநிறுத்தங்களின் தொடர்ச்சியாக வங்கி சேவைகள் பெரிதும் பாதிக்கப்படலாம். வாடிக்கையாளர்கள் இவ்வேளையில் முன்கூட்டியே தங்களின் பண பரிவர்த்தனை விவகாரங்களை திட்டமிட அறிவுறுத்தப்படுகின்றனர். இந்த முறை, வங்கி ஊழியர்கள் சங்கம் மற்றும் வங்கி அதிகாரிகள் சங்கத்தின் கூட்டு நடவடிக்கைகளானது வங்கித் துறை சவால்களை அடையாளம் காட்டுவதோடு, தீர்வு காண, அரசின் கவனத்தை ஈர்க்கும்படியும் அமைந்துள்ளது என AIBEA தெரிவித்துள்ளது.